Home
Mobile

செப்டம்பர் 6 உறுதி.. இந்தியாவுக்கு வரும் புதிய Nokia 5ஜி போன்.. கம்மி விலை.. அரண்டுபோன மார்க்கெட்..

நோக்கியா இந்தியா மொபைல் வரும் செப்டம்பர் 6-ம் தேதி இந்தியாவில் புதிய நோக்கியா 5ஜி போன் அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக எக்ஸ் (ட்விட்டர்) தளத்தில் புதிய நோக்கியா 5ஜி போன் செப்டம்பர் 6-ம் தேதி அறிமுகமாகும் என்று டீசர் வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் எந்த மாடல் இந்தியாவில் அறிமுகமாகும் என்று தகவல்களை வெளியிடவில்லை நோக்கியா நிறுவனம்.

குறிப்பாக நோக்கியா நிறுவனம் வெளியிட்ட வீடியோவில் வேகத்தை அனுபவிக்கத் தயாரா என்று குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே அதிவேக 5ஜி ஸ்மார்ட்போனை இந்தியாவுக்கு கொண்டுவர உள்ளது நோக்கியா நிறுவனம். அதேபோல் சமீபத்தில் ஆஸ்திரேலியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் கம்மி விலையில் நோக்கியா ஜி42 5ஜி எனும் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது.

செப்டம்பர் 6 உறுதி.. இந்தியாவுக்கு வரும் புதிய Nokia 5ஜி போன்..

எனவே இந்த நோக்கியா ஜி42 5ஜி போன் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்பட வாய்ப்பு உள்ளது. இப்போது நோக்கியா ஜி42 5ஜி ஸ்மார்ட்போனின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம். ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 480 பிளஸ் 5ஜி (Snapdragon 480 Plus 5G) சிப்செட் வசதி இந்த நோக்கியா ஜி42 5ஜி போனில் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட செயல்திறன் மற்றும் வேகம் வழங்கும். அதேபோல் ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தைக் கொண்டுள்ளது இந்த போன்.

நோக்கியா ஜி42 5ஜி ஸ்மார்ட்போனில் ஆனது 6.5-இன்ச் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே வசதி உள்ளது. மேலும் 720 x 1,612 பிக்சல்ஸ், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (90Hz refresh rate), 560 நிட்ஸ் ப்ரைட்னஸ் (560 nits brightness), 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு டிஸ்பிளே அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன்.

நோக்கியா ஜி42 5ஜி ஸ்மார்ட்போனில் 4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் வசதி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது. குறிப்பாக இந்த போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக இருக்கும்.

5000 எம்ஏஎச் பேட்டரி வசதி இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ளது.குறிப்பாக இந்த போனை ஒரு முறை சார்ஜ் செய்தால் 3 நாட்களுக்கு பேட்டரி பேக்கப் கிடைக்கும் என்று நோக்கியா நிறுவனம் கூறியுள்ளது. அதேபோல் 20 பாஸ்ட் சார்ஜிங் வசதி, கைரேகை ஸ்கேனர் போன்ற பல சிறப்பான வசதிகளைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான நோக்கியா போன்.

செப்டம்பர் 6 உறுதி.. இந்தியாவுக்கு வரும் புதிய Nokia 5ஜி போன்..

5ஜி, யுஎஸ்பி டைப்-சி, 3.5எம்எம் ஆடியோ ஜாக், வைஃபை, ஜிபிஎஸ் எனப் பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த நோக்கியா ஜி42 5ஜி போனில் உள்ளது. அதேபோல் OZO ஆடியோ அம்சத்தைக் கொண்டுள்ளது இந்த புதிய நோக்கியா ஜி42 5ஜி போன். எனவே இந்த போன் சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும். மேலும் இந்த போன் கம்மி விலையில் இந்தியாவில் அறிமுகமாகும்.

அதேபோல் நோக்கியா நிறுவனம் அறிமுகம் செய்த 4ஜி போன்களுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இதுவரை 4ஜி போன்களை மட்டுமே அதிகமாக அறிமுகம் செய்து வந்த நோக்கியா நிறுவனம் இனிமேல் 5ஜி போன்களை கம்மி விலையில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக விவோ, சியோமி, மோட்டோ நிறுவனங்களுக்கு போட்டி கொடுக்கும் வகையில் நோக்கியா 5ஜி போன்களை அறிமுகம் செய்ய உள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Nokia is all set to launch new 5G smartphone on September 6: check all details here : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X