Home
Mobile

விரைவில் அறிமுகமாகும் அசத்தலான நோக்கியா ஜி50 ஸ்மார்ட்போன்.!

எச்எம்டி குளோபல் நிறுவனம் விரைவில் தனது புதிய நோக்கியா ஜி50 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக NokiaMob.net வலைத்தளத்தில் இந்த நோக்கியா ஜி50 ஸமார்ட்போனின் ஸ்கிரீன் ஷாட் மற்றும் தகவல்கள் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நோக்கியா ஜி50

நோக்கியா ஜி50

அதன்படி நோக்கியா ஜி50 ஸ்மார்ட்போன் ஆனது ப்ளூ மற்றும் மிட்நைட் சன் நிறங்களில் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல்
இந்த புதிய ஸ்மார்ட்போனில் 5ஜி ஆதரவு உள்ளது. பின்பு நோக்கியா ஜி50 ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி கேமரா உட்பட மொத்தம்மூன்று கேமராக்கள் இடம்பெற்றுள்ளன.

 எதிர்பார்த்த குவால்காம் ஸ்னாப்டிராகன் சிப்செட் வசதி இடம்பெறும்

நோக்கியா ஜி50 ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்த்த குவால்காம் ஸ்னாப்டிராகன் சிப்செட் வசதி இடம்பெறும் என்று கூறப்படுகிறது. மேலும் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த புதிய ஸ்மார்ட்போன் வெளிவரும். எனவே இந்த சாதனத்தை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

 ஸ்மார்ட்போன் அறிமுகம்

குறிப்பாக செப்டம்பர் மாதம் இறுதியில் இந்த நோக்கியா ஜி50 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட வாய்ப்பு உள்ளது. பின்பு 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி வசதியுடன் இந்த நோக்கியா ஜி50 ஸ்மார்ட்போன் வெளிவரும். அதேபோல் ரூ.11,000-விலையில் இந்த சாதனம் அறிமுகம் செய்யப்பட வாய்ப்பு உள்ளது.

நோக்கியா சி20 பிளஸ்

நோக்கியா சி20 பிளஸ்

அதேபோல் எச்எம்டி குளோபல் நிறுவனம் சில வாரங்களுக்கு முன்பு நோக்கியா சி20 பிளஸ் சாதனத்தை அறிமுகம் செய்தது. குறிப்பாக இந்த சாதனம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி மெமரி கொண்ட நோக்கியா சி3 பிளஸ் ஸ்மார்ட்போனின் விலை ரூ.8,999-ஆக உள்ளது. பின்பு 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி மெமரி கொண்ட நோக்கியா சி3 பிளஸ் மாடலின் விலை ரூ.9,999-ஆக உள்ளது.

 4950 எம்ஏஎச் பேட்டரி

நோக்கியா சி20 பிளஸ் ஸ்மார்ட்போனில் 4950 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. ஆன்லைனில் படிக்கும் மாணவர்கள் இந்த சாதனத்தை தேர்வு செய்வது நல்லது. நீண்ட நேரம் சார்ஜ் குறையாமல் இந்த சாதனத்தை பயன்படுத் முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 8எம்பி பிரைமரி சென்சார் + 2எம்பி டெப்த் சென்சார்என மொத்தம் இரண்டு கேமராக்கள் இடம்பெற்றுள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 5எம்பி செல்பீ கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல்.

மார்ட்போனில் ஆக்டோ-

நோக்கியா சி20 பிளஸ் ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் Unisoc SC9863a சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 11 (Go edition) இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த புதிய ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் 4ஜி எல்டிஇ, வைஃபை 802.11,ப்ளூடூத் வி4.1, ஜிபிஎஸ்/ஏஜிபிஎஸ், எஃப்எம் ரேடியோ, மைக்ரோ-யுஎஸ்பி,3.5 மிமீ ஹெட்போன் ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த நோக்கியா சி20 பிளஸ் சாதனம்.

Best Mobiles in India

English summary
Nokia G50 May Launching Soon in India: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X