ஸ்னாப்டிராகன் 480 சிப்செட், 48எம்பி ரியர் கேமராவுடன் வெளிவரும் நோக்கியா ஜி50 5ஜி ஸ்மார்ட்போன்.!
எச்எம்டி குளோபல் நிறுவனம் தனது புதிய நோக்கியா ஜி50 5ஜி ஸ்மார்ட்போனை விரைவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போன் தனித்துவமான அம்சங்களுடன் பட்ஜெட் விலையில் வெளிவரும் என்பதால் இந்திய சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

மேலும் இந்த சாதனத்தின் சில அம்சங்கள் ஆன்லைனில் கசிந்துள்ளது, அதைப் பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம். அதாவது நோக்கியா ஜி50 ஸ்மார்ட்போன் ஆனது 5ஜி ஆதரவுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே விரைவில் 5ஜி சேவை அறிமுகம் செய்யப்படும் என்பதால் இந்த சாதனம் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும்.

அதேபோல் புதிய நோக்கியா ஜி50 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.38-இன்ச் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 720 x 1560 பிக்சல் தீர்மானம், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு இந்த புதிய நோக்கியா ஜி50 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவரும். அதேபோல் இந்த சாதனத்தின் வடிவமைப்புக்கு
அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

இந்த நோக்கியா ஜி50 5ஜி ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 480 சிப்செட் வசதி உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்னாப்டிராகன் சிப்செட் வசதியை பயன்படுத்துவதற்கு அருமையாக இருக்கும். அதாவது ஸ்மார்ட்போனின் வேகம் மற்றும் செயல்திறன்போன்றவற்றிக்கு இந்த ஸ்னாப்டிராகன் சிப்செட் வசதி அருமையாக பயன்படும். மேலும் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த புதிய நோக்கியா ஜி50 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய நோக்கியா ஜி50 5ஜி ஸ்மார்ட்போனில் 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த புதிய ஸ்மார்ட்போன் வெளிவரும். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் வழங்கப்படும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பிமெயின் கேமரா உட்பட மொத்தம் மூன்று கேமராக்கள் உள்ளன எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவதுடெப்த் கேமரா, அல்ட்ரா வைடு கேமரா ஆதரவுகளுடன் இந்த சாதனம் வெளிவரும். மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கு
என்றே தரமான கேமரா ஆதரவுடன் இந்த புதிய ஸ்மார்ட்போன் வெளிவரும்.

அதேபோல் இந்த நோக்கியா ஜி50 5ஜி ஸ்மார்ட்போனில் 4850 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் பாஸ்ட் சார்ஜிங் வசதி, கைரேகை ஸ்கேனர் ஆதரவு உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் இந்த புதிய ஸ்மார்ட்போன் வெளிவரும்.

5ஜி, 4ஜி வோல்ட்இ,டூயல் பேண்ட் வைஃபை, ஜிபிஎஸ், ப்ளூடூத் வி 5, 3.5 மிமீ ஹெட்போன் ஜாக் மற்றும் யூஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளுடன் இந்த நோக்கியா ஜி50 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ரூ.11,000 அல்லது ரூ.13,000-விலையில் இந்த புதிய ஸ்மர்ரட்போன் அறிமுகம் செய்யப்பட வாய்ப்பு உள்ளது.


Click it and Unblock the Notifications