மிரளவிட்ட NOKIA கம்பேக்.. வெறும் ரூ.12,599 போதும்.. 11GB ரேம்.. 50MP கேமரா.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
இந்திய மார்கெட்டே அதிரும்படி நோக்கியா நிறுவனத்தின் நோக்கியா ஜி42 (Nokia G42) போன் மலிவான விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த போனின் முழு அம்சங்களும் காத்துக்கொண்டிருந்த நோக்கியா பிரியர்களுக்கு நல்ல விருந்தாகவே அமைந்துள்ளது. இந்த போன் குறித்த முழு விவரங்கள் இதோ.
நோக்கியா ஜி42 அம்சங்கள் (Nokia G42 Specifications): இந்த நோக்கியா போன் 6.56 இன்ச் (720 x 1612 பிக்சல்கள்) எச்டி பிளஸ் (HD+) டிஸ்பிளே கொண்டுள்ளது. இந்த டிஸ்பிளேவில் 90Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது.

இந்த டிஸ்பிளேவுக்கு கொரில்லா கிளாஸ் 3 (Gorilla Glass 3) பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த நோக்கியா போனில் ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) கொண்ட ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 480 பிளஸ் 8என்எம் (Octa Core Snapdragon 480+ 8nm) சிப்செட் கொடுக்கப்பட்டுள்ளது.
கேமிங் பிரியர்களை கவரும் நோக்கில் அட்ரினோ 619 ஜிபியு (Adreno 619 GPU) கிராபிக்ஸ் கார்டு கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த நோக்கியா போனில் 6 ஜிபி ரேம் + 5 ஜிபி விர்ச்சுவல் ரேம் சப்போர்ட் வருகிறது. ஆகவே, மொத்தமாக 11 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட மாடல் விற்பனைக்கு வர இருக்கிறது.
அதோடு 1 டிபி வரையில் மைக்ரோ எஸ்டி (microSD) கார்டு சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. ஆகவே, ஹைபிரிட் டூயல் நானோ சிம் (Hybrid Dual Nano SIM) மற்றும் எஸ்டி கார்டு சிலாட் போனில் இடம் பெற்றுள்ளது. இந்த நோக்கியா போனின் பேக் கேமரா எல்இடி பிளாஷ் லைட்டுடன் டிரிபிள் ரியர் செட்டப் கொண்டிருக்கிறது.
அந்த வகையில் 50 எம்பி ஏஃஎப் (AF) மெயின் கேமரா வருகிறது. அதோடு 2 எம்பி டெப்த் கேமரா + 2 எம்பி மேக்ரோ கேமரா வருகிறது. இந்த கேமராவில் நைட் மோட் 2.0 (Night Mode 2.0), ஏஐ போர்ட்ராய்டு (AI Portrait), ஓஇசட்ஓ ஆடியோ கேப்சர் (OZO 3D Audio Capture) உள்ளிட்ட சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளன.
அதே போல 8 எம்பி செல்பீ கேமரா வருகிறது. இந்த நோக்கியா ஜி 42 மாடலில் 20W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5000mAh பேட்டரி வருகிறது. மேலும், சைடு மவுண்டெட் பிங்கர் பிரிண்ட் சென்சார் (Side-mounted fingerprint sensor), 3.5 மிமீ ஆடியோ ஜாக் (3.5mm audio jack) கொண்டுள்ளது.
IP52 தர டஸ்ட் மற்றும் ப்ளாஷ் ரெசிஸ்டன்ட் (Dust And Splash Resistant) கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நோக்கியா போனில் ப்ளூடூத் 5.1 (Bluetooth 5.1), வை-பை 802 (Wi - Fi 802), ஜிபிஎஸ் (GPS) மற்றும் டைப் - சி 2.0 (Type-C 2.0) ஆகிய கனெக்டிவிட்டி அம்சங்கள் வருகின்றன.
இந்த நோக்கியா மாடல் கிரே (Grey) மற்றும் பர்பிள் (Purple) ஆகிய 2 கலர்களில் விற்பனைக்கு வர இருக்கிறசு. இந்தியாவில் இன்று (செப்டம்பர் 11) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வரும் செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் அமேசான் (Amazon) தளத்தில் விற்பனைக்கு வருகிறது.
இந்த போனின் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.12,599ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நோக்கியாவில் 5ஜி போன் கிடைக்குமா? என்று எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தவர்களுக்கு இந்த போன் மிகப்பெரும் வரப்பிரசாதமாக இருக்கப்போகிறது. ஆகவே, விற்பனையில் நல்ல வரவேற்பு பெற வாய்ப்புள்ளது.


Click it and Unblock the Notifications