Home
Mobile

எழுதி வச்சுக்கோங்க இந்த Nokia 5ஜி போனுக்கு அதிக டிமாண்ட் இருக்கும்! அப்படியென்ன ஸ்பெஷல்? எப்போது அறிமுகம்?

எச்எம்டி குளோபல் நிறுவனம் விரைவில் இந்திய சந்தையில் நோக்கியா ஜி42 5ஜி ஸ்மார்ட்போனை கம்மி விலையில் அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது. அதாவது இந்த புதிய நோக்கியா 5ஜி போன் ஆனது இந்த மாதம் இறுதியில் அல்லது அடுத்த மாதம் துவக்கத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது.

சமீபத்தில் புளூடூத் SIG தரவுத்தளத்தில் இந்த புதிய நோக்கியா ஜி42 5ஜி போனின் முக்கிய விவரக்குறிப்புகள் வெளிவந்தன. குறிப்பாக இந்த நோக்கியா ஜி42 5ஜி போன் ஆனது புளூடூத் 5.1 இணைப்பை ஆதரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இணையதளத்தில் கசிந்த இந்த நோக்கியா ஜி42 5ஜி போனின் அம்சங்களை இப்போது பார்ப்போம்.

எழுதி வச்சுக்கோங்க இந்த Nokia 5ஜி போனுக்கு அதிக டிமாண்ட் இருக்கும்!

1.9ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 480 பிளஸ் 5ஜி சிப்செட் கொண்டு நோக்கியா ஜி42 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். குறிப்பாக மீடியாடெக் சிப்செட் வசதியை விட ஸ்னாப்டிராகன் சிப்செட் மிகவும் சக்திவாய்ந்தது. எனவே இந்த நோக்கியா ஜி42 5ஜி ஸ்மார்ட்போனை நம்பி வாங்கலாம். குறிப்பாக கேமிங் வசதிகளுக்குத் தகுந்தபடி இந்த ஸ்மார்ட்போன் உருவாக்கப்பட்டுள்ளது என எச்எம்டி குளோபல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

நோக்கியா ஜி42 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.5-இன்ச் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே வசதியுடன் வெளிவரும். பின்பு 720 x 1,612 பிக்சல்ஸ், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 560 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு வசதியுடன் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் வெளிவரும்.

எழுதி வச்சுக்கோங்க இந்த Nokia 5ஜி போனுக்கு அதிக டிமாண்ட் இருக்கும்!

குறிப்பாக நோக்கியா ஜி42 5ஜி ஸ்மார்ட்போன் மாடலில் 4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி ஸ்டோரேஜ் வசதி இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த போன் வெளிவரும். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.

நோக்கியா ஜி42 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 5எம்பி ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்புடன் வெளிவரும். எனவே இந்த ஸ்மார்ட்போனின் உதவியுடன் அருமையான புகைப்படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.

ஆண்ட்ராய்டு 13 இயங்குதள வசதியுடன் இந்த நோக்கியா ஜி42 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். எனவே இந்த ஸ்மார்ட்போனை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். பின்பு இந்த புதிய நோக்கியா ஜி42 5ஜி போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி வசதி இடம்பெறும் என்று கூறப்படுகிறது. இதுதவிர பாஸ்ட் சார்ஜிங் வசதி, கைரேகை ஸ்கேனர் ஆதரவுடன் இந்த நோக்கியா போன் வெளிவரும்.

எழுதி வச்சுக்கோங்க இந்த Nokia 5ஜி போனுக்கு அதிக டிமாண்ட் இருக்கும்!

நோக்கியா ஜி42 5ஜி ஸ்மார்ட்போனில் 5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை, ஜிபிஎஸ், என்எப்சி, 3.5எம்எம் ஆடியோ ஜாக், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகள் உள்ளன. அதேபோல் இந்த நோக்கியா ஜி42 5ஜி ஸ்மார்ட்போன் கம்மி விலையில் வெளியாகும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

Best Mobiles in India

English summary
Nokia G42 5G phone with Bluetooth 5.1 connectivity at low price will be launched in India soon : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X