இது வேற ரகம்.. 256GB மெமரி.. 50MP கேமரா.. வருகிறது புது Nokia மாடல்.. கொத்தா தூக்குவீங்க..
எச்எம்டி குளோபல் நிறுவனம் சமீபத்தில் 6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்ட நோக்கியா ஜி42 5ஜி ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்தது. அதாவது இந்த 6ஜிபி ரேம் கொண்ட நோக்கியா ஜி42 5ஜி போன் ரூ.12,599 விலையில் அறிமுகம் செய்யப்பட்டது.
ஆனால் தற்போது அமேசானில் நடைபெறும் சிறப்பு விற்பனையில் 6ஜிபி ரேம் கொண்ட நோக்கியா ஜி42 போனை கம்மி விலையில் வாங்க முடியும். இந்நிலையில் நோக்கியா ஜி42 5ஜி போனின மற்றொரு வேரியண்ட் விரைவில் வெளியிடப்படும் என்று எச்எம்டி குளோபல் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது 8ஜிபி ரேம் + (8ஜிபி விர்ச்சுவல் ரேம்) மற்றும் 256ஜிபி மெமரி கொண்ட நோக்கியா ஜி42 5ஜி போன் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல் வெளிவந்துள்ளது. அதேபோல் 256ஜிபி மெமரி கொண்ட இந்த நோக்கியா ஜி42 5ஜி மாடல் பிங்க் நிறத்தில் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ரேம் மற்றும் மெமரி போன்றவற்றில் மட்டும் தான் மாற்றம் இருக்கும். மற்றபடி அதே அம்சங்களுடன் தான் புதிய வேரியண்ட் அறிமுகம் செய்யப்படும்.
மேலும் இப்போது நோக்கியா ஜி42 5ஜி ஸ்மார்ட்போனின் அம்சங்களை இப்போது சற்று விரிவாகப் பார்ப்போம். ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 480 பிளஸ் 5ஜி (Snapdragon 480 Plus 5G) சிப்செட் வசதி இந்த நோக்கியா ஜி42 5ஜி போனில் இடம்பெற்றுள்ளது. அதேபோல் ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தைக் கொண்டுள்ளது இந்த போன். ஆனால் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். மேலும் இந்த போனை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.
நோக்கியா ஜி42 5ஜி (Nokia G42 5G) போனில் 6.5-இன்ச் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே வசதி உள்ளது. 720 x 1,612 பிக்சல்ஸ், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (90Hz refresh rate), 560 நிட்ஸ் ப்ரைட்னஸ் (560 nits brightness) மற்றும் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு டிஸ்பிளே அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன்.
கேமிங் பிரியர்களை கவரும் நோக்கில் அட்ரினோ 619 ஜிபியு (Adreno 619 GPU) கிராபிக்ஸ் கார்டு கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த போனில் 1 டிபி வரையில் மைக்ரோ எஸ்டி (microSD) கார்டு சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. ஆகவே, ஹைபிரிட் டூயல் நானோ சிம் (Hybrid Dual Nano SIM) மற்றும் எஸ்டி கார்டு சிலாட் போனில் இடம் பெற்றுள்ளது. இந்த நோக்கியா போன் டிரிபிள் ரியர் செட்டப் கொண்டிருக்கிறது.
அதன்படி 50 எம்பி ஏஃஎப் (AF) மெயின் கேமரா வருகிறது. அதோடு 2 எம்பி டெப்த் கேமரா + 2 எம்பி மேக்ரோ கேமரா வருகிறது. இந்த கேமராவில் நைட் மோட் 2.0 (Night Mode 2.0), ஏஐ போர்ட்ராய்டு (AI Portrait), ஓஇசட்ஓ ஆடியோ கேப்சர் (OZO 3D Audio Capture) உள்ளிட்ட சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளன.

அதே போல 8 எம்பி செல்பீ கேமரா கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். சுருக்கமாகக் கூறவேண்டும் என்றால் இந்த போனின் உதவியுடன் அட்டகாசமான புகைப்படங்களை எடுக்க முடியும். நோக்கியா ஜி 42 மாடலில் 20W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5000mAh பேட்டரி வருகிறது. மேலும், சைடு மவுண்டெட் பிங்கர் பிரிண்ட் சென்சார் (Side-mounted fingerprint sensor), 3.5 மிமீ ஆடியோ ஜாக் (3.5mm audio jack) கொண்டுள்ளது இந்த நோக்கியா போன்.
இதில் IP52 தர டஸ்ட் மற்றும் ப்ளாஷ் ரெசிஸ்டன்ட் (Dust And Splash Resistant) கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நோக்கியா போனில் ப்ளூடூத் 5.1 (Bluetooth 5.1), வை-பை 802 (Wi - Fi 802), ஜிபிஎஸ் (GPS) மற்றும் டைப் - சி 2.0 (Type-C 2.0) ஆகிய கனெக்டிவிட்டி அம்சங்கள் வருகின்றன. இந்த நோக்கியா மாடல் கிரே (Grey) மற்றும் பர்பிள் (Purple) ஆகிய 2 கலர்களில் விற்பனைக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் விரைவில் அறிமுகமாகும் 8ஜிபி ரேம் கொண்ட நோக்கியா ஜி42 5ஜி போன் இந்தியாவில் அதிகளவு விற்பனை செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








