யாரு சாமி அவன்.. ரூ.11999 போதும்.. 50MP கேமரா.. 5000mAh பேட்டரி.. 20W சார்ஜிங்.. 11GB ரேம்.. எந்த மாடல்?
நோக்கியா (Nokia) பிரியர்கள் மூக்கில் விரல் வைக்கும்படியான பட்ஜெட்டில் ஆட்டோ போகஸ் மற்றும் 50 எம்பி மெயின் கேமரா கொண்ட டிரிபிள் ரியர் கேமரா சிஸ்டம், கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 புரொடெக்சன் கொண்ட 90Hz டிஸ்பிளே, 20W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5000mAh பேட்டரி, 6 ஜிபி ரேம் மற்றும் 5 ஜிபி விர்ச்சுவல் ரேம் போன்ற பக்கா பீச்சர்களை கொண்ட நோக்கியா ஜி42 5ஜி (Nokia G42 5G) விற்பனைக்கு கிடைக்கிறது. விவரம் இதோ.
இந்த நோக்கியா ஜி42 5ஜி போனானது, அமேசான் அல்லது பிளிப்கார்ட் தளத்தில் கிடைத்தாலும் பிரீமியம் லுக் கொண்ட சோ பிங்க் (So Pink) கலர் வேரியண்ட் எச்எம்டி (HMD) தளத்தில் மட்டுமே கிடைக்கிறது. இந்த லுக்குக்கு ஏற்ப டூயல் கலர் டோன் (Dual Color Tone) டிசைன் மற்றும் டிரிபிள் ரியர் கேமரா சிஸ்டம் (Triple Rear Camera System) பேக் செய்து கொடுக்கிறது.

நோக்கியா ஜி42 5ஜி அம்சங்கள் (Nokia G42 5G Specifications): இந்த நோக்கியா போனின் டிஸ்பிளே, கேமரா மற்றும் பேட்டரி சிஸ்டம் குவாலிட்டியாக இருக்கிறது. பிரீமியம் பேக் பேனல் கொண்டிருந்தும், டிஸ்பிளேவுக்கு தனியாக கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 (Corning Gorilla Glass 3) கிடைக்கிறது. 6.56 இன்ச் (720 x 1612 பிக்சல்கள்) டிஸ்பிளே வருகிறது.
இந்த எல்சிடி (LCD) டிஸ்பிளேவில் எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன், 90Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 560 நிட்ஸ் பிரைட்னஸ் பூஸ்ட் கிடைக்கிறது. இந்த பட்ஜெட்டுக்கு புரொடெக்சனுடன் கிடைக்கிறது. கேமராவும் பட்ஜெட்டைவிட கூடுதல் பிரீமியமாக இருக்கிறது. ஆட்டோபோகஸ் (Auto Focus) கொண்ட 50 மெயின் கேமரா + 2 எம்பி டெப்த் கேமரா கிடைக்கிறது.
மேலும், 2 எம்பி மேக்ரோ கேமரா கிடைக்கிறது. இந்திய கேமரா பிரியர்களுக்கு ஏற்ப நைட்போட்டோகிராபி அவுட்புட் கொடுக்கும் நைட் மோட் 2.0 (Night Mode 2.0) மற்றும் ஏஐ போர்ட்ராய்டு (AI Portrait) பீச்சர்கள் கிடைக்கின்றன. டூயல் டோன் கலரில் கேமரா சிஸ்டமும் இடம்பெற்றுள்ளது. இந்த நோக்கியா ஜி42 5ஜி போனில் 6 ஜிபி ரேம் + 5 ஜிபி விர்ச்சுவல் ரேம் கிடைக்கிறது.
ஆகவே, 11 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட மாடலை ஆர்டர் செய்து கொள்ளலாம். இந்த மாடலுக்கு 1 டிபிக்கான மைக்ரோஎஸ் கார்டு (MicroSD Card) சப்போர்ட் கிடைக்கிறது. 8 எம்பி பிக்சட் போகஸ் செல்பீ கேமரா கிடைக்கிறது. ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 13 OS) மற்றும் அட்ரினோ 619 ஜிபியு (Adreno 619 GPU) கிராபிக்ஸ் கார்டு கிடைக்கிறது.
இந்த பட்ஜெட்டுக்கு ஏற்றபடி பர்ஃபாமென்ஸ் கொடுக்கும் 5ஜி சிப்செட்டா ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 480பிளஸ் 8என்எம் (Octa Core Snapdragon 480+ 8nm) சிப்செட் வருகிறது. ஆகவே, 5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ (5G SA/NSA) மற்றும் டூயல் 4ஜி வோஎல்இடி (Dual 4G VoLTE) கனெக்விட்டி கிடைக்கிறது. 5000mAh பேட்டரி மற்றும் 20W ஃபாஸ்ட் சார்ஜிங் கிடைக்கிறது.
இந்த நோக்கியா ஜி42 5ஜி போனின் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.12,599ஆக இருக்கிறது. இப்போது, எச்எம்டி தளத்தில் ரூ.11,999 பட்ஜெட்டில் கிடைக்கிறது. இந்த டிஸ்கவுண்ட் மட்டுமில்லை. இந்த சோ பிங்க் கலரில் 6 ஜிபி ரேம் வேரியண்ட் எச்எம்டி தளத்தில் மட்டுமே கிடைக்கிறது. இதனால், விற்பனை பட்டையை கிளப்புகிறது.


Click it and Unblock the Notifications