அமேசான் சொல்லிருச்சு.. 50எம்பி கேமரா உடன் இந்தியா வரும் மிரட்டலான நோக்கியா 5ஜி போன்.. எந்த மாடல்?
எச்எம்டி குளோபல் நிறுவனம் தனது நோக்கியா ஜி42 5ஜி போனை இந்தியாவில் செப்டம்பர் 11 ஆம் தேதி அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக இந்த புதிய நோக்கியா 5ஜி போன் ஆனது அமேசானில் விற்பனைக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் மலிவு விலையில் இந்த போன் வெளியாகும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.
குறிப்பாக இந்த புதிய நோக்கியா ஜி42 5ஜி போனை பயனர்களே பழுதுபார்க்க முடியும் என்று கூறப்பட்டுள்ளது. அதற்குத் தகுந்த அம்சங்களுடன் வெளிவர இருக்கிறது இந்த போன். அதாவது குவிக்ஃபிக்ஸ் ரிப்பேரபிலிட்டியுடன் ( QuickFix repairability) இந்த நோக்கியா ஜி42 5ஜி போன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் பயனர்கள் இந்த ஸ்மார்ட்போனை செல்ஃப்-ரிப்பேர் (Self Repair) செய்து கொள்ள முடியும். இதற்காக நோக்கியா நிறுவனம் சிங்கிள் சோர்ஸில் இருந்து வழிகாட்டிகளையும், ஒரிஜினல் உதிரி பாகங்களையும் வழங்கும்.மேலும் ஆன்லைனில் வெளியான இந்த நோக்கியா ஜி42 5ஜி போனின் அம்சங்களைப் பார்ப்போம்.
நோக்கியா ஜி42 5ஜி ஸ்மார்ட்போனில் 6.5-இன்ச் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே வசதி உள்ளது. மேலும் 720 x 1,612 பிக்சல்ஸ், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (90Hz refresh rate), 560 நிட்ஸ் ப்ரைட்னஸ் (560 nits brightness), 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு டிஸ்பிளே அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன்.
ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 480 பிளஸ் 5ஜி (Snapdragon 480 Plus 5G) சிப்செட் வசதி இந்த நோக்கியா ஜி42 5ஜி போனில் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட செயல்திறன் மற்றும் வேகம் வழங்கும். அதேபோல் ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தைக் கொண்டுள்ளது இந்த போன். ஆனால் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.
நோக்கியா ஜி42 5ஜி ஸ்மார்ட்போனில் 4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் வசதி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது. மேலும் இந்த போனின் மென்பொருள் வசதி மற்றும் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.
5000 எம்ஏஎச் பேட்டரி வசதி இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ளது. அதேபோல் 20 பாஸ்ட் சார்ஜிங் வசதி, கைரேகை ஸ்கேனர் போன்ற பல சிறப்பான வசதிகளைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான நோக்கியா போன். குறிப்பாக இந்த போனை ஒரு முறை சார்ஜ் செய்தால் 3 நாட்களுக்கு பேட்டரி பேக்கப் கிடைக்கும் என்று நோக்கியா நிறுவனம் கூறியுள்ளது.

5ஜி, யுஎஸ்பி டைப்-சி, 3.5எம்எம் ஆடியோ ஜாக், வைஃபை, ஜிபிஎஸ் எனப் பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த நோக்கியா ஜி42 5ஜி (NOKIA G42 5G) போனில் உள்ளது. அதேபோல் OZO ஆடியோ அம்சத்தைக் கொண்டுள்ளது இந்த புதிய நோக்கியா ஜி42 5ஜி போன். ஏற்கனவே நோக்கியா வெளியிட்ட டீசரில் இது ஒரு வேகமான 5ஜி போன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
சோ கிரே அண்ட் சோ பர்பிள் நிறங்களில் அமேசானில் விற்பனைக்கு வரும் இந்த அட்டகாசமான நோக்கியா 5ஜி போன். இணையத்தில் வெளியான தகவலின்படி இந்த நோக்கியா ஜி42 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ரூ.15,000 க்குள் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக இந்த பட்ஜெட் விலையில் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.


Click it and Unblock the Notifications








