தங்கத்த தூங்கிட்டு வாங்கடா.. பட்ஜெட் விலையில் இந்தியாவுக்கு வரும் புது NOKIA 5ஜி போன்.. என்ன மாடல்?
இந்தியாவில் மிகவும் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட நோக்கியா 5ஜி ஸ்மார்ட்போன் ஒன்று அறிமுகம் செய்யப்பட உள்ளது. அதாவது நோக்கியா ஜி42 5ஜி எனும் ஸ்மார்ட்போன் இந்தியாவில் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. ஆனால் இந்த போன் ஏற்கனவே ஐரோப்பாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
nokiamob.net இணையதளத்தில் வெளியான தகவலின்படி, BIS சான்றிதழ் இணையதளத்தில் நோக்கியா ஜி42 5ஜி போன் காணப்பட்டுள்ளது. இந்த மாதம் இறுதியில் அல்லது செப்டம்பர் மாதம் துவக்கத்தில் நோக்கியா ஜி42 5ஜி போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது.

மேலும் ஐரோப்பாவில் நோக்கியா ஜி42 5ஜி (NOKIA G42 5G) ஸ்மார்ட்போனுக்கு நல்ல வரவேற்பு இருந்தது. மேலும் ஏற்கனவே ஐரோப்பாவில் வெளியிடப்பட்ட இந்த நோக்கியா ஜி42 5ஜி போனின் அம்சங்களை இப்போது பார்போம். நோக்கியா ஜி42 5ஜி ஸ்மார்ட்போனில் ஆனது 6.5-இன்ச் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே வசதி உள்ளது. பின்பு 720 x 1,612பிக்சல்ஸ், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 560 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.
நோக்கியா ஜி42 5ஜி ஸ்மார்ட்போன் ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 480 பிளஸ் 5ஜி சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் மிகவும் சக்திவாய்ந்தது. அதேபோல் மேம்பட்ட செயல்திறன் மற்றும் வேகம் வழங்கும். அதேபோல் ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தைக் கொண்டுள்ளது இந்த போன். ஆனாலும் ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் இந்த போனுக்கு கிடைக்கும்.
4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான நோக்கியா ஜி42 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி டெப்த் சென்சார்+ 2எம்பி மேக்ரோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பை கொண்டுள்ளது இந்த நோக்கியா ஜி42 5ஜி ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போனின் உதவியுடன் அட்டகாசமான புகைப்படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமரா இந்த போனில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன்
5000 எம்ஏஎச் பேட்டரி வசதி இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. பின்பு 20 பாஸ்ட் சார்ஜிங் வசதி, கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். அதேபோல் இந்த போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.
5ஜி, யுஎஸ்பி டைப்-சி, 3.5எம்எம் ஆடியோ ஜாக், வைஃபை, ஜிபிஎஸ் எனப் பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த நோக்கியா ஜி42 5ஜி ஸ்மார்ட்போனிவ் ள்ளது. ஐரோப்பாவில் பர்ப்பிள் மற்றும் கிரே மற்றும் சில நிறங்களில் அட்டகாசமான நோக்கியா ஜி42 5ஜி ஸ்மார்ட்போன் வெளியிடப்பட்டது. இந்தியாவில் இதே நிறங்களில் இந்த போன் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல் நோக்கியா ஜி42 5ஜி போனை பயனர்களே பழுதுபார்க்க முடியும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த நோக்கியா போன் ஐரோப்பாவில் பட்ஜெட் விலையில் வெளியானது. இந்தியாவிலும் நோக்கியா ஜி42 5ஜி போன் பட்ஜெட் விலையில் வெளிவரும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக இந்தியாவில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த போன். அதேபோல் ஒன்பிளஸ் நோர்ட் போன்களுக்கு போட்டியாக இந்தியாவில் இந்த நோக்கியா போன் அறிமுகமாகும்.
சமீபத்தில் நோக்கியா 150 மற்றும் நோக்கியா 30 மியூசிக் எனும் பீச்சர் போன்கள் சில நாட்களுக்கு முன்பு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த இரண்டு போன்களும் கம்மி விலையில் அசத்தலான அம்சங்களுடன் வெளிவந்துள்ளன. தற்போது இந்த இரண்டு போன்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.


Click it and Unblock the Notifications








