இன்னும் மவுசு குறையல.. குறைந்த விலையில் கிடைக்கும் நோக்கியா 5ஜி போன்.. நம்பி வாங்கலாமா?
எச்எம்டி குளோபல் நிறுவனம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நோக்கியா ஜி42 5ஜி ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்தது. இப்போதும் கூட இந்த நோக்கியா 5ஜி போனை வாங்க மக்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அமேசானில் 6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்ட நோக்கியா ஜி42 5ஜி போன் 12,599 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. பின்பு இதன் 8ஜிபி ரேம் +256ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் ரூ.16,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ.1500 வரை தள்ளுபடி கிடைக்கும்.

இப்போது நோக்கியா ஜி42 5ஜி (Nokia G42 5G) ஸ்மார்ட்போனின் சிறப்பு அம்சங்கள் என்னென்ன மற்றும் இதில் உள்ள குறைகள் என்ன என்பதைப் பற்றி சற்று விரிவாக இந்த பதிவில் பார்ப்போம். அதாவது ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 480 பிளஸ் 5ஜி (Snapdragon 480 Plus 5G) சிப்செட் வசதியுடன் இந்த நோக்கியா ஜி42 5ஜி போன் வெளிவந்துள்ளது.
சிப்செட் எப்படி? ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 480 பிளஸ் 5ஜி சிப்செட் ஆனது கேமிங் வசதிகளுக்கு மிகவும் அருமையாகப் பயன்படும். அதேபோல் இந்த போனில் வீடியோ எடிட்டிங் போன்ற ஆப்ஸ்களை தடையின்றி பயன்படுத்த முடியும். ஒட்டுமொத்தமாக மேம்பட்ட செயல்திறன் வழங்குகிறது இந்த ஸ்னாப்டிராகன் சிப்செட்.
மீடியாடெக் டைமன்சிட்டி சிப்செட் கொண்ட போன்களை விட ஸ்னாப்டிராகன் சிப்செட் கொண்ட போன்களை வாங்குவது மிகவும் நல்லது. அதேபோல் இதில் கேமிங் பிரியர்களை கவரும் நோக்கில் அட்ரினோ 619 ஜிபியு (Adreno 619 GPU) கிராபிக்ஸ் கார்டு கொடுக்கப்பட்டுள்ளது. எனவே நீங்கள் விரும்பும் கேம்களை இந்த போனில் பதிவிறக்கம் செய்யலாம்.

சுமாரான கேமரா: 50எம்பி மெயின் கேமரா + 2எம்பி மேக்ரோ கேமரா + 2எம்பி டெப்த் கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது நோக்கியா ஜி42 5ஜி போன். பின்பு இந்த போனின் கேமராவில் நைட் மோட் 2.0 (Night Mode 2.0), ஏஐ போர்ட்ராய்டு (AI Portrait), ஓஇசட்ஓ ஆடியோ கேப்சர் (OZO 3D Audio Capture) உள்ளிட்ட சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக இந்த போனில் உள்ள 2எம்பி கேமராக்களுக்கு பதிலாக அல்ட்ரா வைடு கேமரா கொடுக்கப்பட்டிருந்தால் இன்னும் அருமையாக இருக்கும். குறைந்த வெளிச்சம் உள்ள இடங்களில் இந்த போனின் உதவியுடன் சரியான படங்களை எடுக்க முடியவில்லை. ஆனால் பகல் நேரத்தில் இந்த போனின் 50எம்பி கேமரா துணையுடன் அருமையான புகைப்படங்களை எடுக்க முடியும்.
அதேபோல் செல்பிகளுக்கும், வீயோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமரா கொண்டுள்ளது இந்த போன். ஆனால் இந்த 8எம்பி கேமராவுக்கு பதிலாக 13எம்பி அல்லது 16எம்பி கேமரா கொடுக்கப்பட்டு இருந்தால் இன்னும் அருமையாக இருந்திருக்கும். ஒட்டுமொத்தமாக சுமாரான கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த நோக்கியா ஜி42 5ஜி போன்.
நார்மல் டிஸ்பிளே: 6.5-இன்ச் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது இந்த நோக்கியா ஜி42 5ஜி. அதாவது இதில் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே அம்சம் கூட இல்லை. சாதாரண எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே வசதியைக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த போன். இப்போது வரும் போன்கள் AMOLED டிஸ்பிளேவுடன் தான் வருகின்றன. ஆனால் இந்த நோக்கியா போனுக்கு பழையபடி சாதாரண எல்சிடி டிஸ்பிளே வழங்கப்பட்டுள்ளது.
மேலும் 720 x 1,612 பிக்சல்ஸ், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (90Hz refresh rate), 560 நிட்ஸ் ப்ரைட்னஸ் (560 nits brightness) மற்றும் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு டிஸ்பிளே அம்சங்கள் இந்த நோக்கியா ஜி42 5ஜி ஸ்மார்ட்போனில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பேட்டரி பேக்கப்? 5000 எம்ஏஎச் பேட்டரி கொண்டு இந்த நோக்கியா ஜி42 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. எனவே இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். அதேபோல் இது, Quick Fix டெக்னாலஜி அடிப்படையில் பயனரே சரி செய்து கொள்ளும் வகையில் ரிமோவாபல் டைப் பேட்டரியாக வழங்கப்பட்டுள்ளது பின்பு இந்த போனின் பேட்டரியை சார்ஜ் செய்ய வெறும் 20 வாட்ஸ் சார்ஜிங் வசதி உள்ளது. இதற்கு பதிலாக 35 வாட்ஸ் அல்லது 45 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.
இந்த 20 வாட்ஸ் சார்ஜிங் வசதியை வைத்துக்கொண்டு போனை சார்ஜ் செய்ய நீண்ட நேரம் தேவைப்படும். குறிப்பாக இந்த போனில் 5ஜி இண்டர்நெட், வீடியோ கேமிங், வீடியோ போன்றவற்றை பயன்படுத்தினாலும் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் கிடைக்கிறது. ஆனால் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி இதில் இல்லை.

குறிப்பாக இந்த போனுக்கு IP52 தர டஸ்ட் மற்றும் ப்ளாஷ் ரெசிஸ்டன்ட் (Dust And Splash Resistant) கொடுக்கப்பட்டுள்ளது. நோக்கியா ஜி42 5ஜி போனில் ப்ளூடூத் 5.1 (Bluetooth 5.1), வை-பை 802 (Wi - Fi 802), ஜிபிஎஸ் (GPS) மற்றும் டைப் - சி 2.0 (Type-C 2.0) ஆகிய கனெக்டிவிட்டி அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. மேலும் சோ கிரே, சோ பர்பிள், பிங்க் ஆகிய நிறங்களில் இந்த போன் வெளியாகியுள்ளது.
நம்பி வாங்கலாமா? நீண்ட நேரம் பேட்டரி பேக்கப், Quick Fix டெக்னாலஜி, IP52 தர டஸ்ட் மற்றும் ப்ளாஷ் ரெசிஸ்டன்ட், தரமான ஸ்னாப்டிராகன் சிப்செட் போன்றவை இந்த போனின் சிறப்பான அம்சங்கள் ஆகும். அதேசமயம் இந்த போனின் டிஸ்பிளே, கேமரா, சார்ஜிங் போன்றவற்றில் சொதப்பி உள்ளது எச்எம்டி குளோபல் நிறுவனம். மற்றபடி குறைந்த விலையில் இந்த 5ஜி போன் கிடைப்பதால் நம்பி வாங்கலாம்.


Click it and Unblock the Notifications








