கம்மி விலையில் விற்பனைக்கு வரும் Nokia 5ஜி ஸ்மார்ட்போன்.. நம்பி வாங்கலாமா? வேண்டாமா?
எச்எம்டி குளோபல் சமீபத்தில் நோக்கியா ஜி42 5ஜி ஸ்மர்ரட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்தது. தற்போது அமேசான் சிறப்பு விற்பனையில் 11ஜிபி ரேம் மற்றும் 128ஜபி மெமரி கொண்ட நோக்கியா ஜி42 5ஜி போன் ரூ.11,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. சரி இந்த போனை நம்பி வாங்கலாம்? வேண்டாமா என்பதைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.
நோக்கியா ஜி42 5ஜி ஸ்மார்ட்போனில் 6.5-இன்ச் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே வசதி உள்ளது. மேலும் 720 x 1,612 பிக்சல்ஸ், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (90Hz refresh rate), 560 நிட்ஸ் ப்ரைட்னஸ் (560 nits brightness) மற்றும் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு டிஸ்பிளே அம்சங்களைக் கொண்டுள்ளது இந்போன். ஆனாலும் ஃபுல் எச்டி பிளஸ் அல்லது அமோலெட் டிஸ்பிளே இந்த போனுக்கு வழங்கப்பட்டிருந்தால் இன்னும் அருமையாக இருந்திருக்கும்.

ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 480 பிளஸ் 5ஜி (Snapdragon 480 Plus 5G) சிப்செட் வசதி இந்த நோக்கியா ஜி42 5ஜி போனில் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட செயல்திறன் மற்றும் வேகம் வழங்கும். கேமிங் போன்ற பயன்களுக்கு இந்த ஸ்மார்ட்போன் அருமையாகப் பயன்படும். அதுவும் இந்த ஸ்னாப்டிராகன் 480 பிளஸ் 5ஜி சிப்செட் வசதியைப் பல முன்னணி செல்போன் நிறுவனங்கள் தங்களது போன்களுக்கு பயன்படுத்துகின்றன.
கேமிங் பிரியர்களை கவரும் நோக்கில் அட்ரினோ 619 ஜிபியு (Adreno 619 GPU) கிராபிக்ஸ் கார்டு கொடுக்கப்பட்டிருக்கிறது. அதேபோல் ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தைக் கொண்டுள்ளது இந்த போன். ஆனால் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. சுருக்கமாக கூறவேண்டும் என்றால் நோக்கியா ஜி42 5ஜி போனின் மென்பொருள் அமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது எச்எம்டி குளோபல் நிறுவனம்.
இந்த நோக்கியா ஜி42 5ஜி போனில் 6 ஜிபி ரேம் + 5 ஜிபி விர்ச்சுவல் ரேம் சப்போர்ட் வருகிறது. ஆகவே, மொத்தமாக 11 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட மாடல் விற்பனைக்கு வர இருக்கிறது. இதுதவிர தற்போது 256ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் ஒன்றும் அறிமுகம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
50எம்பி மெயின் கேமரா + 2எம்பி மேக்ரோ கேமரா + 2எம்பி டெப்த் கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த நோக்கியா ஜி42 5ஜி ஸ்மார்ட்போன். குறிப்பாக இந்த போனில் எல்இடி பிளாஷ் மற்றும் இந்த கேமராவில் நைட் மோட் 2.0 (Night Mode 2.0), ஏஐ போர்ட்ராய்டு (AI Portrait), ஓஇசட்ஓ ஆடியோ கேப்சர் (OZO 3D Audio Capture) உள்ளிட்ட சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளன குறிப்பாக இதில் 50எம்பி கேமரா இருப்பதால் தெளிவான புகைப்படங்களை எடுக்க முடியும்.
அதேபோல் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமரா கொண்டுள்ளது இந்த போன். ஆனால் இந்த 8எம்பி கேமராவுக்கு பதில் 16எம்பி கேமரா வழங்கப்பட்டு இருந்தால் இன்னும் அருமையாக இருந்திருக்கும். சைடு மவுண்டெட் பிங்கர் பிரிண்ட் சென்சார் (Side-mounted fingerprint sensor), 3.5 மிமீ ஆடியோ ஜாக் (3.5mm audio jack) கொண்டுள்ளது இந்த நோக்கியா போன்.
இதுதவிர இதில் IP52 தர டஸ்ட் மற்றும் ப்ளாஷ் ரெசிஸ்டன்ட் (Dust And Splash Resistant) கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நோக்கியா போனில் ப்ளூடூத் 5.1 (Bluetooth 5.1), வை-பை 802 (Wi - Fi 802), ஜிபிஎஸ் (GPS) மற்றும் டைப் - சி 2.0 (Type-C 2.0) ஆகிய கனெக்டிவிட்டி அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

20W சார்ஜிங் கொண்ட 5000 எம்ஏஎச் பேட்டரி இந்த போனில் உள்ளது. எனவே இந்த போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். குறிப்பாக 5ஜி சேவைக்கு தகுந்தபடி இந்த போன் பேட்டரி பேக்கப் கொடுக்கும். ஆனாலும் இதில் 33Wஅல்லது 44W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி இதில் இடம்பெற்றிருந்தால் இன்னும் அருமையாக இருந்திருக்கும்.
நம்பி வாங்கலாமா? வேண்டாமா? அதாவது 5ஜி, 5000எம்ஏஎச் பேட்டரி, 50எம்பி கேமரா, ஸ்னாப்டிராகன் சிப்செட் போன்றவை இதில் இருப்பதால் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும். அதேசமயம் அதிநவீன டிஸ்பிளே வசதி இதில் இல்லை, ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கிடையாது என்பது தான் இந்த போனின் குறையாகும். மற்றபடி கம்மி விலையில் நோக்கியா ஜி42 5ஜி போன் கிடைப்பதால் நம்பி வாங்கலாம்.


Click it and Unblock the Notifications








