அடிச்சான் பாரு NOKIA.. இதான் டா உண்மையான கம்பேக்.. விலையை பார்த்து பாய்ஸ் காலி.. கலரை பார்த்து கேர்ள்ஸ் காலி!
ஒவ்வொரு முறையும்.. ஒரு புதிய நோக்கியா மொபைல் போன் அறிமுகமாகும் போதும் "நோக்கியா இஸ் பேக்" (Nokia is Back) என்று கூறப்படுகிறது. ஆனால் அப்படி எதுவும் நடந்தது போல் தெரியவில்லை. பீச்சர் போன்களின் அளவிற்கு நோக்கியாவின் ஸ்மார்ட்போன்களால் பிரபலமடைய முடியவில்லை!
ஆனால் இந்த முறை நோக்கியா நிறுவனம் "வச்ச குறி தப்பாது" என்பது போல் தெரிகிறது. ஏனென்றால் "இதுதான் டா உண்மையான கம்பேக்" என்று கூறும்படியாக ஒரு தரமான நோக்கியா 5ஜி ஸ்மார்ட்போன் வருகிற செப்.11 ஆம் தேதியன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது.

நாம் இங்கே பேசுவது நோக்கியா ஜி42 5ஜி (NOKIA G42 5G) ஸ்மார்ட்போனை பற்றித்தான். இன்னும் ஒருசில தினங்களில் அறிமுகம் செய்யப்படவுள்ள இந்த 5ஜி போனின் விலை நிர்ணயத்தை நோக்கியா நிறுவனம் சூசகமாக அறிவித்துள்ளது. கூடவே இது பிங்க் கலர் (Pink Color) ஆப்ஷனில் வெளியாகும் என்பதையும் உறுதி செய்துள்ளது.
என்ன விலை? நோக்கியா நிறுவனம் தனது எக்ஸ் (ட்விட்டர்) அக்க்கவுண்ட் வழியாக நோக்கியா ஜி42 5ஜிஸ் ஸ்மார்ட்போனின் விலையை யூகிக்குமாறு பயனர்களை கேட்டு ஒரு கருத்துக்கணிப்பை நடத்தியது. அதில் ரூ.16,xxx மற்றும் ரூ.18,xxx என்கிற இரண்டு விருப்பங்களில் ஏதேனும் ஒன்றிற்கு வாக்களிக்கும்படி நோக்கியா கேட்டுக்கொண்டது.
ஆக இந்திய சந்தைக்கு வரவிருக்கும் நோக்கியா ஜி42 5ஜி ஸ்மார்ட்போனின் விலை நிர்ணயம் ரூ.19,000 க்கு கீழ்தான் இருக்கும் என்பதை வெளிப்படையாக அறிந்துகொள்ள முடிகிறது. இந்த கருத்துக்கணிப்பில், பெரும்பாலான பயனர்கள் முதல் விருப்பத்திற்கே வாக்களித்துள்ளனர். அதாவது நோக்கியா ஜி42 5ஜி ரூ.16,499 அல்லது ரூ.16,999 க்கு அறிமுகமாகும் என்று வாக்களித்துள்ளனர்.
என்னென்ன அம்சங்கள்? நினைவூட்டும் வண்ணம் நோக்கியா ஜி42 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது கடந்த ஜூன் மாதமே உலக சந்தைகளில் அறிமுகப்படுத்தப்பட்டு விட்டது. ஆக இந்தியாவில் அறிமுகமாகும் வேரியண்ட்டும் க்ளோபல் வேரியண்ட்டும் (Global Variant) ஒரே மாதிரியான அம்சங்களுடன் தான் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நோக்கியா ஜி42 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது வாட்டர் டிராப் நாட்ச் (Water Drop Notch) மற்றும் 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (90Hz Refresh Rate) உடனான 6.56 இன்ச் எச்டி+ டிஸ்பிளேவுடன் வரும். இதில் ஓஸோ-பவர்டு லவுட்ஸ்பீக்கரும் (OZO Powered Loudspeaker) பொருத்தப்பட்டிருக்கும்.
நோக்கியா ஜி42 ஆனது 5ஜி கனெக்டிவிட்டி ஆதரவுடன் வரும் ஸ்னாப்டிராகன் 480 சிப்செட் மூலம் இயக்கப்படும். மேலும் இது விர்ச்சுவல் ரேம் உடன் சேர்த்து 11ஜிபி வரையிலான ரேம்-ஐ பேக் செய்கிறது. இது 4ஜிபி ரேம் மற்றும் 6ஜிபி ரேம் விருப்பங்களில் 128ஜிபி வரையிலான இன்டர்னல் ஸ்டோரேஜுடன் வரும்
பேட்டரியை பொறுத்தவரை, நோக்கியா ஜி42 5ஜி ஸ்மார்ட்போனின் க்ளோபல் வேரியண்ட் ஆனது 20W ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 5000mAh பேட்டரியை கொண்டுருக்கும். இது பவர் பட்டனில் உட்பொதிக்கப்பட்ட, பக்கவாட்டில் பொருத்தப்பட்ட பிங்கர் பிரிண்ட் ஸ்கேனர் உடன் வருகிறது.
கேமராக்களை பொறுத்தவரை நோக்கியா ஜி42 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது டேப்லெட் வடிவ ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது. கடைசியாக நோக்கியா ஜேய் 2 5ஜி ஸ்மார்ட்போனுக்கு இரண்டு வருட ஓஎஸ் அப்டேட்களும், மூன்று வருட செக்யூரிட்டி பேட்ச்களும் கிடைக்குமென்று நோக்கியா நிறுவனம் வாக்குறுதி அளித்துள்ளது.
க்ளோபல் வேரியண்ட்டை போலவே, நோக்கியா ஜி42 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது பர்பிள் (Purple) மற்றும் க்ரே (Grey) என்கிற 2 கலர் ஆப்ஷன்களில் இந்தியாவில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இது பிங்க் கலர் ஆப்ஷனில் அறிமுகமாகும் என்பதை நோக்கியா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications