Home
Mobile

அடிதூள்.. நோக்கியா 5ஜி போனுக்கு ஆண்ட்ராய்டு 14 அப்டேட்.. 50MP கேமரா.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?

எச்எம்டி குளோபல் நிறுவனம் நோக்கியா ஜி42 5ஜி போனுக்கு ஆண்ட்ராய்டு 14 அப்டேட்டை வெளியிட்டுள்ளது. குறிப்பாக இந்த புதிய அப்டேட் மூலம் இந்த நோக்கியா போனுக்கு பல்வேறு புதிய அம்சங்கள் மற்றும் பாதுகாப்பு வசதியை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக நோக்கியா ஜி42 5ஜி ஸ்மார்ட்போனுக்கு ஹெல்த் டேட்டா மேனேஜ்மென்ட், ஆப் டேட்டா அனுமதி, பேட்டரி லைஃப் மேம்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை வழங்குகிறது ஆண்ட்ராய்டு 14 அப்டேட். சுருக்கமாகக் கூறவேண்டும் என்றால் நோக்கியா ஜி42 5ஜி போன் பயனர்களுக்கு இந்த புதிய அப்டேட் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும். மேலும் இந்த போனின் அம்சங்களை இப்போது பார்ப்போம்.

நோக்கியா 5ஜி போனுக்கு ஆண்ட்ராய்டு 14 அப்டேட்.. எந்த மாடல்?

நோக்கியா ஜி42 5ஜி அம்சங்கள் (Nokia G42 5G specifications) : 6.56-இன்ச் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது இந்த நோக்கியா போன். 720 x 1,612 பிக்சல்ஸ், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (90Hz refresh rate), (560 nits brightness) மற்றும் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு டிஸ்பிளே அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன்.

ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 480 பிளஸ் 5ஜி (Snapdragon 480 Plus 5G) சிப்செட் வசதி இந்த நோக்கியா ஜி42 5ஜி போனில் இடம்பெற்றுள்ளது. அதேபோல் ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தைக் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்தது. தற்போது ஆண்ட்ராய்டு 14 அப்டேட் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நோக்கியா 5ஜி போனுக்கு ஆண்ட்ராய்டு 14 அப்டேட்.. எந்த மாடல்?

கேமிங் பிரியர்களை கவரும் நோக்கில் அட்ரினோ 619 ஜிபியு (Adreno 619 GPU) கிராபிக்ஸ் கார்டு கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த போனில் 1 டிபி வரையில் மைக்ரோ எஸ்டி (microSD) கார்டு சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. ஆகவே, ஹைபிரிட் டூயல் நானோ சிம் (Hybrid Dual Nano SIM) மற்றும் எஸ்டி கார்டு சிலாட் போனில் இடம் பெற்றுள்ளது.

50எம்பி மெயின் கேமரா + 2எம்பி மேக்ரோ கேமரா + 2எம்பி டெப்த் கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த நோக்கியா ஜி42 5ஜி ஸ்மார்ட்போன். குறிப்பாக இந்த போனில் எல்இடி பிளாஷ் மற்றும் இந்த கேமராவில் நைட் மோட் 2.0 (Night Mode 2.0), ஏஐ போர்ட்ராய்டு (AI Portrait), ஓஇசட்ஓ ஆடியோ கேப்சர் (OZO 3D Audio Capture) உள்ளிட்ட சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளன.

செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமரா கொண்டுள்ளது இந்த போன். மேலும், சைடு மவுண்டெட் பிங்கர் பிரிண்ட் சென்சார் (Side-mounted fingerprint sensor), 3.5 மிமீ ஆடியோ ஜாக் (3.5mm audio jack) கொண்டுள்ளது இந்த நோக்கியா போன். குறிப்பாக இந்த போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.

நோக்கியா 5ஜி போனுக்கு ஆண்ட்ராய்டு 14 அப்டேட்.. எந்த மாடல்?

இந்த போனில் IP52 தர டஸ்ட் மற்றும் ப்ளாஷ் ரெசிஸ்டன்ட் (Dust And Splash Resistant) கொடுக்கப்பட்டுள்ளது. நோக்கியா ஜி42 5ஜி போனில் ப்ளூடூத் 5.1 (Bluetooth 5.1), வை-பை 802 (Wi - Fi 802), ஜிபிஎஸ் (GPS) மற்றும் டைப் - சி 2.0 (Type-C 2.0) ஆகிய கனெக்டிவிட்டி அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

20W சார்ஜிங் கொண்ட 5000 எம்ஏஎச் பேட்டரி இந்த போனில் உள்ளது. எனவே இந்த போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். குறிப்பாக 5ஜி சேவைக்குத் தகுந்தபடி இந்த போன் பேட்டரி பேக்கப் கொடுக்கும். குறிப்பாக ரூ.12,599 விலையில் இந்த அசத்தலான நோக்கியா ஜி42 5ஜி ஸ்மார்ட்போனை வாங்க முடியும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Nokia G42 5G phone gets Android 14 update: check specifications, price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X