Home
Mobile

அள்ளி வீசும் அமேசான்.. 50எம்பி கேமரா.. 5000mAh பேட்டரி.. ஆஃபரில் Nokia 5ஜி போன்.. எந்த மாடல்?

அமேசான் தளத்தில அமேசான் கிரேட் இந்தியன் பெஸ்டிவல் சேல்ஸ் 2024 (Amazon Great Indian Festival Sale 2024) எனும் சிறப்பு விற்பனை நடைபெறுகிறது. இந்த சிறப்பு விற்பனையில் பல முன்னணி நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்கள், டிவி, லேப்டாப், டேப்லெட் எனப் பல்வேறு சாதனங்களை கம்மி விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல் இந்த அமேசான் சிறப்பு விற்பனையில் நோக்கியா ஜி42 5ஜி ஸ்மார்ட்போனுக்கு 23 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.9,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ.999 தள்ளுபடியும் உள்ளது. எனவே இந்த நோக்கியா போனழ ரூ.9000 விலையில வாங்கிவிட முடியும்.

அள்ளி வீசும் அமேசான்.. ஆஃபரில் Nokia 5ஜி போன்.. எந்த மாடல்?

நோக்கியா ஜி42 5ஜி அம்சங்கள் (Nokia G42 5G specifications) : அதாவது 6.56-இன்ச் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது இந்த நோக்கியா போன். 720 x 1,612 பிக்சல்ஸ், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் ( (90Hz refresh rate), 560 நிட்ஸ் ப்ரைட்னஸ்(560 nits brightness) மற்றும் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு டிஸ்பிளே அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். பெரிய டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

தரமான ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 480 பிளஸ் 5ஜி (Snapdragon 480 Plus 5G) சிப்செட் வசதி இந்த நோக்கியா ஜி42 5ஜி போன் வெளிவந்தது. குறிப்பாக ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தைக் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்தது. ஆனால் சமீபத்தில் தான் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு 14 அப்டேட் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் கேமிங் பயனர்களை கவரும் வகையில் அட்ரினோ 619 ஜிபியு (Adreno 619 GPU) கிராபிக்ஸ் கார்டு கொண்டுள்ளது இந்த நோக்கியா ஜி42 5ஜி ஸ்மார்ட்போன். எனவே கேமரிங் பயனர்கள் இந்த போனை நம்பி வாங்கலாம். குறிப்பாக இந்த போனின் வடிவமைப்பு மற்றும் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது எச்எம்டி குளோபல் நிறுவனம்.

குறிப்பாக இந்த நோக்கியா ஜி42 5ஜி மாடல் 4ஜிபி ரேம் (2ஜிபி விர்ச்சுவல் ரேம்) + 128ஜிபி மெமரி வசதியைக் கொண்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த போனில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு வசதி இந்த போனில் உள்ளது .

50எம்பி மெயின் கேமரா + 2எம்பி மேக்ரோ கேமரா + 2எம்பி டெப்த் கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது நோக்கியா ஜி42 5ஜி ஸ்மார்ட்போன். செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமரா கொண்டு வெளிவந்தது இந்த போன். அதேபோல் இந்த போனின் கேமராவில் நைட் மோட் 2.0 (Night Mode 2.0), ஏஐ போர்ட்ராய்டு (AI Portrait), ஓஇசட்ஓ ஆடியோ கேப்சர் (OZO 3D Audio Capture) உள்ளிட்ட பல சிறப்பான வசதிகள் உள்ளன.

அள்ளி வீசும் அமேசான்.. ஆஃபரில் Nokia 5ஜி போன்.. எந்த மாடல்?

நோக்கியா ஜி42 5ஜி போன் 20W சார்ஜிங் மற்றும் 5000 எம்ஏஎச் பேட்டரி வசதியுடன் வெளிவந்தது. மேலும் இந்த பேட்டரியை ஒரு முறை சார்ஜ் செய்த 3 நாட்கள் பேட்டரி பேக்கப் கிடைக்கும் என நிறுவனம் கூறியுள்ளது. மேலும் சைடு மவுண்டெட் பிங்கர் பிரிண்ட் சென்சார் (Side-mounted fingerprint sensor), 3.5 மிமீ ஆடியோ ஜாக் (3.5mm audio jack) கொண்டுள்ளது இந்த நோக்கியா போன்.

மேலும் IP52 தர டஸ்ட் மற்றும் ப்ளாஷ் ரெசிஸ்டன்ட் (Dust And Splash Resistant) கொண்டுள்ளது இந்த போன். மேலும் இந்த போனில் ப்ளூடூத் 5.1 (Bluetooth 5.1), வை-பை 802 (Wi - Fi 802), ஜிபிஎஸ் (GPS) மற்றும் டைப் - சி 2.0 (Type-C 2.0) ஆகிய கனெக்டிவிட்டி அம்சங்கள் உள்ளன. அனைத்து சிறப்பான வசதிகளுடன் இந்த போன் கம்மி விலையில் கிடைப்பதால் நம்பி வாங்கலாம்.

Best Mobiles in India

English summary
Nokia G42 5G Phone Available for Rs.9000 in Amazon Great Indian Festival Sale: check details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X