அடி தூள்.. 50MP கேமரா.. 128GB மெமரி, 5000mAh பேட்டரி.. நோக்கியா 5ஜி போனுக்கு ஆஃபர்.. எந்த மாடல்?
எச்எம்டி குளோபல் நிறுவனம் சமீபத்தில் தான் நோக்கியா ஜி42 5ஜி ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்தது. இந்த புதிய போன் ஸ்னாப்டிராகன் சிப்செட், ட்ரிபிள் ரியர் கேமரா, பெரிய டிஸ்பிளே, தனித்துவமான வடிவமைப்பு உள்ளிட்ட அம்சங்களுடன் ரூ.12,599 விலையில் அறிமுகம் செய்யப்பட்டது.
இந்நிலையில் அமேசான் இந்தியா கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் 2023 எனும் சிறப்பு விற்பனை அக்டோபர் 8-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த சிறப்பு விற்பனையில் நோக்கியா ஜி42 5ஜி ஸ்மார்ட்போனை ரூ.11,999 விலையில் வாங்க முடியும். குறிப்பாக இந்த சிறப்பு விற்பனையில் நோக்கியா ஜி42 5ஜி போனை வாங்க மக்கள் அதிக ஆர்வம் காட்டுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

நோக்கியா ஜி42 5ஜி (Nokia G42 5G) போனில் 6.5-இன்ச் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே வசதி உள்ளது. 720 x 1,612 பிக்சல்ஸ், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (90Hz refresh rate), 560 நிட்ஸ் ப்ரைட்னஸ் (560 nits brightness) மற்றும் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு டிஸ்பிளே அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். குறிப்பாக இந்த போனின் டிஸ்பிளே சிறந்த திரை அனுபவத்தைக் கொடுக்கும்.
ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 480 பிளஸ் 5ஜி (Snapdragon 480 Plus 5G) சிப்செட் வசதி இந்த நோக்கியா ஜி42 5ஜி போனில் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட செயல்திறன் மற்றும் வேகம் வழங்கும். அதேபோல் ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தைக் கொண்டுள்ளது இந்த போன். ஆனால் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். மேலும் இந்த போனை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.
கேமிங் பிரியர்களை கவரும் நோக்கில் அட்ரினோ 619 ஜிபியு (Adreno 619 GPU) கிராபிக்ஸ் கார்டு கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த நோக்கியா போனில் 6 ஜிபி ரேம் + 5 ஜிபி விர்ச்சுவல் ரேம் சப்போர்ட் வருகிறது. ஆகவே, 11 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்டை வாங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த போனில் 1 டிபி வரையில் மைக்ரோ எஸ்டி (microSD) கார்டு சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. ஆகவே, ஹைபிரிட் டூயல் நானோ சிம் (Hybrid Dual Nano SIM) மற்றும் எஸ்டி கார்டு சிலாட் போனில் இடம் பெற்றுள்ளது. இந்த நோக்கியா போன் டிரிபிள் ரியர் செட்டப் கொண்டிருக்கிறது.
அதன்படி 50 எம்பி ஏஃஎப் (AF) மெயின் கேமரா வருகிறது. அதோடு 2 எம்பி டெப்த் கேமரா + 2 எம்பி மேக்ரோ கேமரா வருகிறது. இந்த கேமராவில் நைட் மோட் 2.0 (Night Mode 2.0), ஏஐ போர்ட்ராய்டு (AI Portrait), ஓஇசட்ஓ ஆடியோ கேப்சர் (OZO 3D Audio Capture) உள்ளிட்ட சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளன.
அதே போல 8 எம்பி செல்பீ கேமரா கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். சுருக்கமாகக் கூறவேண்டும் என்றால் இந்த போனின் உதவியுடன் அட்டகாசமான புகைப்படங்களை எடுக்க முடியும். நோக்கியா ஜி 42 மாடலில் 20W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5000mAh பேட்டரி வருகிறது. மேலும், சைடு மவுண்டெட் பிங்கர் பிரிண்ட் சென்சார் (Side-mounted fingerprint sensor), 3.5 மிமீ ஆடியோ ஜாக் (3.5mm audio jack) கொண்டுள்ளது இந்த நோக்கியா போன்.
மேலும் இதில் IP52 தர டஸ்ட் மற்றும் ப்ளாஷ் ரெசிஸ்டன்ட் (Dust And Splash Resistant) கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நோக்கியா போனில் ப்ளூடூத் 5.1 (Bluetooth 5.1), வை-பை 802 (Wi - Fi 802), ஜிபிஎஸ் (GPS) மற்றும் டைப் - சி 2.0 (Type-C 2.0) ஆகிய கனெக்டிவிட்டி அம்சங்கள் வருகின்றன. இந்த நோக்கியா மாடல் கிரே (Grey) மற்றும் பர்பிள் (Purple) ஆகிய 2 கலர்களில் விற்பனைக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. கம்மி விலையில் தரமான அம்சங்களை வழங்குகிறது இந்த நோக்கியா ஜி42 5ஜி போன்.


Click it and Unblock the Notifications








