Home
Mobile

தங்கத்த தூங்கிட்டு வாங்கடா.. 50எம்பி கேமரா.. அமேசானில் வரும் புதிய நோக்கியா 5ஜி போன்..எந்த மாடல்?

நோக்கியா நிறுவனம் இதுவரை 4ஜி போன்களை தான் அதிகமாக இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. தற்போது 5ஜி போன்களையும் அதிகமாக அறிமுகம் செய்ய முடிவு செய்துள்ளது நோக்கியா. அதாவது வரும் செப்டம்பர் 6 ஆம் தேதி இந்தியாவில் புதிய நோக்கியா 5ஜி போன் அறிமுகம் செய்யப்படும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் nokiamob இணையதளம் வெளியிட்ட தகவலின்படி, நோக்கியா ஜி42 5ஜி போன் அமேசான் தளத்தில் விற்பனைக்கு வரும் என்று தெரிவித்துள்ளது. எனவே செப்டம்பர் 6 ஆம் தேதி அமேசான் தளத்தில் இந்த நோக்கியா ஜி42 5ஜி போன் அறிமுகமாகும் என்று தகவல் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த போன் கம்மி விலையில் அறிமுகமாகும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

அமேசானில் வரும் புதிய நோக்கியா 5ஜி போன்..எந்த மாடல்?

அதேபோல் ஏற்கனவே ஆஸ்திரேலியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் கம்மி விலையில் நோக்கியா ஜி42 5ஜி போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த போனின் விவரக்குறிப்புகளை இப்போது சற்று விரிவாகப் பார்ப்போம்.

நோக்கியா ஜி42 5ஜி ஸ்மார்ட்போனில் 6.5-இன்ச் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே வசதி உள்ளது. மேலும் 720 x 1,612 பிக்சல்ஸ், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (90Hz refresh rate), 560 நிட்ஸ் ப்ரைட்னஸ் (560 nits brightness), 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு டிஸ்பிளே அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன்.

ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 480 பிளஸ் 5ஜி (Snapdragon 480 Plus 5G) சிப்செட் வசதி இந்த நோக்கியா ஜி42 5ஜி போனில் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட செயல்திறன் மற்றும் வேகம் வழங்கும். அதேபோல் ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தைக் கொண்டுள்ளது இந்த போன். ஆனால் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்

நோக்கியா ஜி42 5ஜி ஸ்மார்ட்போனில் 4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் வசதி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது. மேலும் இந்த போனின் மென்பொருள் வசதி மற்றும் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

20 பாஸ்ட் சார்ஜிங் வசதி, கைரேகை ஸ்கேனர் போன்ற பல சிறப்பான வசதிகளைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான நோக்கியா போன். மேலும் 5000 எம்ஏஎச் பேட்டரி வசதி இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ளது.குறிப்பாக இந்த போனை ஒரு முறை சார்ஜ் செய்தால் 3 நாட்களுக்கு பேட்டரி பேக்கப் கிடைக்கும் என்று நோக்கியா நிறுவனம் கூறியுள்ளது.

அமேசானில் வரும் புதிய நோக்கியா 5ஜி போன்..எந்த மாடல்?

5ஜி, யுஎஸ்பி டைப்-சி, 3.5எம்எம் ஆடியோ ஜாக், வைஃபை, ஜிபிஎஸ் எனப் பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த நோக்கியா ஜி42 5ஜி (NOKIA G42 5G) போனில் உள்ளது. அதேபோல் OZO ஆடியோ அம்சத்தைக் கொண்டுள்ளது இந்த புதிய நோக்கியா ஜி42 5ஜி போன். எனவே இந்த போன் சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும். சமீபத்தில் அறிமுகமான ரெட்மி 12 5ஜி மற்றும் ஒன்பிளஸ் நோர்ட் போன்களுக்கு போட்டியாக இந்த நோக்கியா ஜி42 5ஜி போன் வெளிவரும்.

அதேபோல் நோக்கியா நிறுவனம் இந்த ஆண்டு இறுதியில் பல 5ஜி ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் கம்மி விலையில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் ஒவ்வொரு போனுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Nokia G42 5G India Launch Date: Listed on Amazon:check all details here : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X