சிங்கிள் சார்ஜில் 3 நாட்களுக்கு பேட்டரி.. 50எம்பி கேமரா.. அறிமுகமானது புதிய Nokia போன்கள்.! என்ன மாடல்?
எச்எம்டி குளோபல் நிறுவனம் நோக்கியா ஜி310 மற்றும் நோக்கியா சி210 ஆகிய இரண்டு ஸ்மார்ட்போன்களை தற்போது அறிமுகம் செய்துள்ளது. ஆனால் இந்த இரண்டு போன்களும் தற்போது அமெரிக்காவில் தான் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்த போன்கள் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது.
குறிப்பாக நோக்கியா ஜி310 ஆனது 5ஜி போன் ஆகும். அதேபோல் நோக்கியா சி210 போன் ஆனது 4ஜி ஆதரவை கொண்டு வெளிவந்துள்ளது. குறிப்பாக நோக்கியா ஜி310 5ஜி போனை ஒரு முறை சார்ஜ் செய்தால் மூன்று நாட்கள் பேட்டரி பேக்கப் வழங்கும் என்று நிறுவனம் கூறியுள்ளது. அதேபோல் பழுதுபார்ப்புகளை எளிமையாக்கும் விதமாக QuickFix வடிவமைப்பைக் கொண்டுள்ளது இந்த நோக்கியா ஜி310 5ஜி போன்.

பழுதுபார்க்கும் வழிகாட்டிகள் மற்றும் உதிரி பாகங்களைக் கொண்டு இந்த போனை நாமே பழுதுபார்க்கலாம். மேலும் நோக்கியா சி210 ஆனது மெட்டல் சேஸ் டஃப் செய்யப்பட்ட டிஸ்பிளே கொண்டுள்ளது. பின்பு OZO ஆடியோ சரவுண்ட் ஆதரவைக் கொண்டு இந்த நோக்கியா சி210 மாடல் வெளிவந்துள்ளது. இப்போது இந்த இரண்டு போன்களின் அம்சங்களைப் பார்ப்போம்.
நோக்கியா ஜி310 5ஜி (Nokia G310 5G) அம்சங்கள்: 6.56-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது இந்த நோக்கியா ஜி310 5ஜி போன். மேலும் 720 x ௧௬௧௨ பிக்சல்ஸ், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 560 நிட்ஸ் ப்ரைட்னஸ், கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு மற்றும் பல அசத்தலான டிஸ்பிளே அம்சங்களை கொண்டுள்ளது இந்த போன்.
ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 480 பிளஸ் 8என்எம் (Octa Core Snapdragon 480+ 8nm) சிப்செட் வசதியுடன் அட்ரினோ 619 ஜிபியு (Adreno 619 GPU) ஆதரவைக் கொண்டுள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 13 (Android 13) இயங்குதளத்தை கொண்டு இந்த புதிய ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. அதேபோல் OZO ஆடியோ சரவுண்ட் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.
50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் + 2எம்பி மேக்ரோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த நோக்கியா ஜி310 5ஜி. மேலும் 8எம்பி செல்பி கேமராவுடன் இந்த போன் வெளிவந்துள்ளது. அதேபோல் 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்டுள்ளது நோக்கியா ஜி310 5ஜி போன். பின்பு நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.
20 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5000 எம்ஏஎச் பேட்டரி வசதி இந்த நோக்கியா ஜி310 5ஜி போனில் உள்ளது. கைரேகை ஸ்கேனர், 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11 ஏசி, புளூடூத் 5.1, ஜிபிஎஸ் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த போன். அதேபோல் தூசி மற்றும் நீர் எதிர்ப்பு ஆதரவுக்கு என ஐபி52 சான்றிதழ் கொண்டு வெளிவந்துள்ளது இந்த அசத்தலான நோக்கியா ஜி310 5ஜி.
நோக்கியா சி210 (Nokia C210) அம்சங்கள் : 6.3-இன்ச் வி நாட்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளேவுடன் வெளிவந்துள்ளது இந்த நோக்கியா சி210 போன். மேலும் 720 x 1560 பிக்சல்ஸ், 20:9 ஆஸ்பெக்ட் ரேஷியோஇ கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு உள்ளிட்ட பல் டிஸ்பிளே அம்சங்கள் இந்த போனில் உள்ளது. 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி ஸ்டோரேஜ் வசதி கொண்டுள்ளது இந்த போன். பின்பு நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.
நோக்கியா சி210 ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 662 11என்எம் (Octa Core Snapdragon 662 11nm) சிப்செட் வசதி உள்ளது. பின்பு இதில் அட்ரினோ 610 ஜிபியு (Adreno 610 GPU), ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம் மற்றும் பல சிறப்பு அம்சங்கள் உள்ளது. குறிப்பாக பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனர் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த போன்.
13எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது நோக்கியா சி210. மேலும் 5எம்பி செல்பி கேமரா, எல்இடி பிளாஸ் மற்றும் மற்றும் பல அசத்தலான கேமரா அம்சங்களை கொண்டுள்ளது இந்த போன். தூசி மற்றும் நீர் எதிர்ப்பு ஆதரவுக்கு என ஐபி52 சான்றிதழ் கொண்டு வெளிவந்துள்ளது நோக்கியா சி210 போன்.

10 வாட்ஸ் சார்ஜிங் ஆதரவு கொண்ட 3000 எம்ஏஎச் பேட்டரி ஆதரவு இதில் உள்ளது. பின்பு டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11, ப்ளூடூத் 5.0, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் இந்த நோக்கியா சி210 போன் வெளிவந்துள்ளது. அதேபோல் இந்த போனின் எடை 193.8 கிராம் ஆகும்.
விலை: நோக்கியா ஜி310 5ஜி போனின் விலை USD 186 (இந்திய மதிப்பில் ரூ.15,490) ஆகும். வரும் ஆகஸ்ட் 24-ம் தேதி முதல் அமெரிக்காவில் இந்த போன் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் நோக்கியா சி210 போனின் விலை USD 109 (இந்திய மதிப்பில் ரூ.9,080) ஆகும். வரும் செப்டம்பர் 14 -ம் தேதி இந்த நோக்கியா சி210 அமெரிக்காவில் விற்பனைக்கு வரும்.


Click it and Unblock the Notifications








