நோக்கியா ஜி300 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்: அசத்தலான அம்சங்கள்: வாங்கத் தூண்டும் விலை.!
எச்எம்டி குளோபல் நிறுவனம் புதிய நோக்கியா ஜி300 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போன் அக்டோபர் 19 முதல் அமெரிக்காவில் வாங்குவதற்கு கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் விரைவில் இந்த சாதனம் அனைத்து நாடுகளிலம் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது இந்த சாதனத்தின் முழு விவரங்களையும் சற்று விரிவாகப் பார்ப்போம்.

4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட நோக்கியா ஜி300 ஸ்மார்ட்போனின் விலை $ 199 (இந்திய மதிப்பில் ரூ.15,000)ஆக உள்ளது. அதேபோல் விண்கல் சாம்பல் நிறத்தில் வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான நோக்கியா ஜி300 ஸ்மார்ட்போன்.

நோக்கியா ஜி300 ஸ்மார்ட்போன் ஆனது 6.52-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியைக் கொண்டு வெளிவந்துள்ளது. மேலும் 720x1,600 பிக்சல் தீர்மானம், 20:9 என்ற திரைவிகிதம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல். மேலும் இந்த சாதனத்தின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

நோக்கியா ஜி300 ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்த்த ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 480 சிப்செட் வசதி உள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த புதிய சாதனம் வெளிவந்துள்ளது. அதேபோல் இந்த சாதனத்திற்கு
விரைவில் ஆண்ட்ராய்டு 12 அப்டேட் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

நோக்கியா ஜி300 ஸ்மார்ட்போனின் பின்புறம் 16எம்பி பிரைமரி சென்சார் (f/1.8 lens) + 5எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் மூன்று கேமராக்கள் உள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி செல்பீ கேமரா வசதியைக் கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன். இதுதவிர பல்வேறு கேமரா அம்சங்களும் இந்த ஸ்மார்ட்போனில்
உள்ளன.

நோக்கியா ஜி300 ஸ்மார்ட்போனில் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி வசதி உள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவைக் கொண்டுள்ளது இந்த புதிய சாதனம். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது.

அதேபோல் 5ஜி, 4ஜி எல்டிஇ, வைஃபை 802.11 ஏசி, ப்ளூடூத் வி5, ஜிபிஎஸ்/ஏ-ஜிபிஎஸ், என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஹெட்போன் ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளுடன் வெளிவந்துள்ளது இந்த நோக்கியா ஜி300 ஸ்மார்ட்போன்.

நோக்கியா ஜி300 ஸ்மார்ட்போனில் 4470 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, கைரேகை சென்சார் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது அசத்தலான நோக்கியா ஜி300ஸ்மார்ட்போன்.


Click it and Unblock the Notifications