Home
Mobile

அடுத்தடுத்து சூப்பர் போன்களை அறிமுகம் செய்து அதிரடி காட்டும் Nokia: வருகிறது நோக்கியா ஜி22.!

எச்எம்டி குளோபல் நிறுவனம் ஏற்கனவே நோக்கியா எக்ஸ்30 5ஜி ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் நோக்கியா ஜி22 எனும் ஸ்மார்ட்போனை உருவாக்கி வருவதாகவும் விரைவில் இந்த போன் அனைத்து நாடுகளிலும் அறிமுகம் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நோக்கியா ஜி22

குறிப்பாக நோக்கியா ஜி22 ஸ்மார்ட்போன் ஆனது தனித்துவமான சிப்செட், தரமான கேமரா மற்றும் மேம்பட்ட அம்சங்களுடன் வெளிவரும் என்றுதெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இணையத்தில் கசிந்த நோக்கியா ஜி22 ஸ்மார்ட்போனின் அம்சங்களை இப்போது சற்று விரிவாகப் பார்ப்போம்.

அடுத்தடுத்து சூப்பர் போன்களை அறிமுகம் செய்து அதிரடி காட்டும் Nokia.!

நோக்கியா ஜி22 அம்சங்கள்

விரைவில் அறிமுகமாகும் நோக்கியா ஜி22 ஸ்மார்ட்போன் ஆனது ஆக்டோ-கோர் 1.8ஜிகாஹெர்ட்ஸ் Unisoc T606 சிப்செட் வசதி மற்றும் Mali-G57 GPU ஆதரவைக் கொண்டுள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் சிறந்த செயல்திறன் கொடுக்கும். அதேபோல் அனைத்து ஆப்ஸ்களையும் தடையின்றி பயன்படுத்த உதவுகிறது இந்த Unisoc T606 சிப்செட்.

இந்த நோக்கியா ஜி22 ஸ்மார்ட்போனில் Android UI சார்ந்த ஆண்ட்ராய்டு 12 இயங்குதள வசதி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ட்ரிபிள் ரியர் கேமரா, 5000 எம்ஏஎச் பேட்டரி, பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் இந்த நோக்கியா ஜி22 ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த போனில் சில தகவல்கள் மட்டுமே தெரியவந்துள்ளது. கூடிய விரைவில் அனைத்து விவரங்களும் தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்தடுத்து சூப்பர் போன்களை அறிமுகம் செய்து அதிரடி காட்டும் Nokia.!

நோக்கியா ஜி21 அம்சங்கள்

மேலும் இந்நிறுவனம் ஏற்கனவே அறிமுகம் செய்த நோக்கியா ஜி21 ஸ்மார்ட்போனின் அம்சங்களை இப்போது பார்ப்போம். நோக்கியா ஜி21 சாதனமானது ஆண்ட்ராய்டு 11 ஆதரவு மற்றும் 6.5 இன்ச் எச்டி ப்ளஸ் (720x1,600 பிக்சல்கள்) டிஸ்ப்ளே ஆதரவுடன் வெளிவந்துள்ளது. இந்த ஸ்மார்ட்போனானது 20:9 விகிதத்துடன், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் கொண்டிருக்கிறது. அதேபோல் இந்த நோக்கியா ஜி21 ஸ்மார்ட்போனானது 400 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் 180 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் வசதியுடன் வெளிவந்துள்ளது.

நோக்கியா ஜி21 ஸ்மார்ட்போனில் ஆக்டோ கோர் யூனிசோக் டி606 எஸ்ஓசி சிப்செட் வசதி உள்ளது. மேலும் இந்த போன் ஆண்ட்ராய்டு 11 வசதியுடன் வெளிவந்தது. கூடிய விரைவில் ஆண்ட்ராய்டு அப்டேட் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த போனின் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது எச்எம்டி குளோபல் நிறுவனம்.

அடுத்தடுத்து சூப்பர் போன்களை அறிமுகம் செய்து அதிரடி காட்டும் Nokia.!

50எம்பி பிரைமரி கேமரா +2எம்பி டெப்த் சென்சார் + 2எம்பி மேக்ரோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த நோக்கியா ஜி21 ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் அருமையாக புகைப்படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவுடன் வெளிவந்துள்ளது நோக்கியா ஜி21 ஸ்மார்ட்போன்.

6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டுள்ளது நோக்கியா ஜி21 ஸ்மார்ட்போன். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த நோக்கியா ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன்.

5050 எம்ஏஎச் பேட்டரி வசதியை கொண்டு வெளிவந்துள்ளது இந்த நோக்கியா ஜி21 ஸ்மார்ட்போன். எனவே நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் கிடைக்கும். பின்பு 18 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி, கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்கள் இவற்றுள் அடக்கம். குறிப்பாக இந்த போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக இருக்கும்.

அடுத்தடுத்து சூப்பர் போன்களை அறிமுகம் செய்து அதிரடி காட்டும் Nokia.!

என்ன விலை?

4ஜி எல்டிஇ, வைஃபை, ப்ளூடூத் வி5.0, எஃப்எம் ரேடியோ, யூஎஸ்பி டைப்சி போர்ட் ஆகிய கனெக்டிவிட்டி ஆதரவுடன் வெளிவந்துள்ளது நோக்கியா ஜி21 ஸ்மார்ட்போன். தற்போது இந்த நோக்கியா ஜி21 ஸ்மார்ட்போனை அமேசான் தளத்தில் ரூ.13,499-விலையில் வாங்க முடியும். அதேபோல் நோக்கியா ஜி22 ஸ்மார்ட்போன் மாடலும் இந்தியச் சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Nokia G22 smartphone with Unisoc T606 chipset will be launched soon: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X