Home
Mobile

அடுத்த மாதம் இந்தியாவில் அறிமுகமாகும் நோக்கியா ஜி21 ஸ்மார்ட்போன்.!

எச்எம்டி குளோபல் நிறுவனம் அடுத்த ஆண்டு நோக்கியா ஜி21 ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் பட்ஜெட் விலையில் சிறப்பான அம்சங்ககளுடன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. மேலும் இப்போது ஆன்லைனில் கசிந்த நோக்கியா ஜி21 ஸ்மார்ட்போனின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

நோக்கியா ஜி21

அடுத்த மாதம் இந்தியாவில் அறிமுகமாகும் நோக்கியா ஜி21 ஸ்மார்ட்போன்.!

புதிய நோக்கியா ஜி21 ஸ்மார்ட்போனின் பின்புறம் 50எம்பி பிரைமரி சென்சார் + 2எம்பி மேக்ரோ லென்ஸ் +2எம்பி டெப்த் கேமரா என மொத்தம் மூன்று கேமராக்கள் உள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே இந்த ஸ்மார்ட்போன் 8எம்பி கேமரா ஆதரவுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த புதிய ஸ்மார்ட்போனில் 3ஜிபி/4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி வசதி உள்ளதாக கூறப்படுகிறது.

புதிய நோக்கியா ஜி21 சாதனத்தில் ஆக்டோ-கோர் பிராசஸர் வசதி உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த புதிய ஸ்மார்ட்போன் வெளிவரும். குறிப்பாக இந்த சாதனம் இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும் என்றுதான் கூறவேண்டும்.

அடுத்த மாதம் இந்தியாவில் அறிமுகமாகும் நோக்கியா ஜி21 ஸ்மார்ட்போன்.!

நோக்கியா ஜி21 ஸ்மார்ட்போனில் 5050 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பின்பு பாஸ்ட் சார்ஜிங் வசதி மற்றும் கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் இந்த புதிய ஸ்மார்ட்போன் வெளிவரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 4ஜி எல்டிஇ, வைஃபை, புளூடூத், என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போர்ட் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம். மேலும் இந்நிறுவனம் ஏற்கனவே அறிமுகம் செய்த நோக்கியா ஜி20 ஸ்மார்ட்போனின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

நோக்கியா ஜி20

அடுத்த மாதம் இந்தியாவில் அறிமுகமாகும் நோக்கியா ஜி21 ஸ்மார்ட்போன்.!

நோக்கியா ஜி20 ஸ்மார்ட்போன் ஆனது 6.5-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் 20: 9 திரை விகிதம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன் மாடல்.

இந்த புதிய நோக்கியா ஜி20 ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி35 எஸ்ஒசி சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை கொண்டு வெளிவந்துள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல். எனவே பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். இந்த நோக்கியா ஜி20 ஸ்மார்ட்போனில் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு உள்ளது.

நோக்கியா ஜி20 ஸ்மார்ட்போனின் பின்புறம் 48 மெகாபிக்சல் முதன்மை சென்சார் + 5 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் ஷூட்டர் + 2 மெகாபிக்சல் மேக்ரோ ஷூட்டர் +2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் என மொத்தம் நான்கு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி செல்பீ கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன் மாடல். இதுதவிர வீடியோக்களை பதிவு செய்யும் போது சிறந்த ஒலி அனுபவத்திற்காக OZO ஆடியோ ஆதரவு இதில் உள்ளது.

அடுத்த மாதம் இந்தியாவில் அறிமுகமாகும் நோக்கியா ஜி21 ஸ்மார்ட்போன்.!

நோக்கியா ஜி20 ஸ்மார்ட்போனில் 5050 எம்ஏஎச் பேட்டரி ஆதரவு உள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 10 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, கைரேகை சென்சார், கூகுள் அசிஸ்டென்ட் பட்டன் உட்பட பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். 4ஜி எல்டிஇ, வைஃபை 802.11 பி / ஜி/ என், ப்ளூடூத் வி 5.0, ஜிபிஎஸ்/ஏ-ஜிபிஎஸ், என்எப்சி, எஃப்எம் ரேடியோ, யூ.எஸ்.பி டைப்-சி, 3.5 மிமீ ஹெட்ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது நோக்கியா ஜி20 ஸ்மார்ட்போன்.

அதேபோல் எச்எம்டி குளோபல் நிறுவனம் இந்த ஆண்டு பல 5ஜி ஸ்மார்ட்போன்களை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Nokia G21 will be launched in India next month: Specs, Features and More: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X