50எம்பி கேமராவுடன் விரைவில் களமிறங்கும் நோக்கியா ஜி21 ஸ்மார்ட்போன்.! முழு விவரம்!
எச்எம்டி குளோபல் நிறுவனம் இந்த மாதம் நோக்கியா ஜி21 ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் தனித்துவமான அம்சங்களுடன் பட்ஜெட் விலையில் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. மேலும் இப்போது ஆன்லைனில் கசிந்த நோக்கியா ஜி21 ஸ்மார்ட்போனின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

நோக்கியா ஜி21 ஸ்மார்ட்போன்
நோக்கியா ஜி21 ஸ்மார்ட்போன் ஆனது 6.5-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியுடன் வெளிவரும். பின்பு 1600 x 720 பிக்சல்தீர்மானம், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 450 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த சாதனம் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய ஸ்மார்ட்போனில் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி வசதி உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்பபடுத்த ஒரு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த நோக்கியா ஜி21 ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் Unisoc T606 ARM சிப்செட் வசதி உள்ளதாக கூறப்படுகிறது. மேலும்ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும். குறிப்பாக இந்த சாதனத்தின்வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

நோக்கியா ஜி21 ஸ்மார்ட்போனில் 5050 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே நீண்ட நேரம் கேம் விளையாட முடியும். பின்பு பாஸ்ட் சார்ஜிங் வசதி, கைரேகை சென்சார் உட்பட பல அம்சங்கள் இவற்றுள் அடக்கம். பின்பு 4ஜி எல்இடி, வைஃபை, புளூடூத், என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன்.

நோக்கியா ஜி21 ஸ்மார்ட்போனின் பின்புறம் 50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி மேக்ரோ லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் மூன்று கேமரா இடம்பெற்றுள்ளன. பின்பு செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன் மாடல். மேலும் இந்நிறுவனம் ஏற்கனவே அறிமுகம் செய்த நோக்கியா சி30 ஸ்மார்ட்போனின்
அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

நோக்கியா சி30
நோக்கியா சி30 ஸ்மார்ட்போனில் 6.82-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதி உள்ளது. மேலும் 1600x720 பிக்சல் தீர்மானம், 400 நிட்ஸ் ப்ரைட்னஸ்
மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த புதிய நோக்கியா சி30ஸ்மார்ட்போன்.

நோக்கியா சி30 ஸ்மார்ட்போனில் 1.6 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர்யுனிசாக்எஸ்.சி.9863ஏ பிராசஸர் வசதி உள்ளது. எனவே பயன்படுத்துவதற்கு அருமையாக இருக்கும். மேலும் ஆண்ட்ராய்டு 11 (Go edition) இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த நோக்கியா சி30 ஸ்மார்ட்போன். குறிப்பாக இதன் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது இந்நிறுவனம்.

நோக்கியா சி30 ஸ்மார்ட்போனில் 1.6 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர்யுனிசாக்எஸ்.சி.9863ஏ பிராசஸர் வசதி உள்ளது. எனவே பயன்படுத்துவதற்கு அருமையாக இருக்கும். மேலும் ஆண்ட்ராய்டு 11 (Go edition) இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த நோக்கியா சி30 ஸ்மார்ட்போன்.

நோக்கியா சி30 ஸ்மார்ட்போனின் பின்புறம் 13எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் இரண்டு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 5எம்பி செல்பீ கேமராவைக் கொண்டுள்ளது இந்த புதிய நோக்கியாசி30 ஸ்மார்ட்போன். இந்த நோக்கியா ஸ்மார்ட்போனில் 6000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 10 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி இடம்பெற்றள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் கிரீன் மற்றும் வைட் நிறங்களில் கிடைக்கிறது இந்த அட்டகாசமான நோக்கியா சி30 ஸ்மார்ட்போன்.

கைரேகை சென்சார், 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், எப்.எம். ரேடியோ, 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 4.2 உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த நோக்கியா சி30 ஸ்மார்ட்போன். அதேபோல் இந்த சாதனத்திற்கு இரண்டு ஆண்டுகளுக்கு செக்யூரிட்டி அப்டேட்கள்வழங்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications