இந்த புது Nokia G20 போனின் விலை இவ்வளவு தானா? அப்போ உடனே வாங்கலாமே..

|

எச்எம்டி குளோபல் நோக்கியா நிறுவனம் இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் தனது புதிய நோக்கியா ஜி20 என்ற ஸ்மார்ட்போன் மாடலை இந்த வார இறுதிக்குள் அறிமுகம் செய்யும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த புதிய நோக்கியா ஜி 20 ஸ்மார்ட்போன் மாடல் அமேசான் தளம் வழியாகப் பிரத்தியேகமாக விற்பனை செய்யப்படும் என்றும் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போன் மலிவு விலையில் இந்தியாவில் அறிமுகமாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த கம்மி விலையில் இத்தனை பெஸ்ட்டான அம்சங்களா?

இந்த கம்மி விலையில் இத்தனை பெஸ்ட்டான அம்சங்களா?

இந்த புதிய நோக்கியா ஜி 20 ஸ்மார்ட்போன் மலிவு விலையில் உங்களுக்கு 6.5' இன்ச் அளவு கொண்ட எச்டி பிளஸ் டிஸ்பிளேவை வழங்குகிறது. இந்த புதிய சாதனம் மீடியாடெக் ஹீலியோ G35 சிப்செட் உடன் 4 ஜிபி ரேம் வசதியில் இயங்குகிறது. இது 48 எம்பி பிரைமரி கேமரா, 5 எம்பி அல்ட்ரா வைடு சென்சார், 2 எம்பி மேக்ரோ, 2 எம்பி டெப்த் லென்ஸ் கொண்ட குவாட் கேமரா அமைப்பை கொண்டுள்ளது. அதேபோல், முன்பக்கத்தில் செல்பி மற்றும் வீடியோ அழைப்பு அறிவுக்காக 8 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டுள்ளது.

நோக்கியா G20 ஸ்மார்ட்போனின் விலை என்ன? எப்போது முன்பதிவு செய்யலாம்?

நோக்கியா G20 ஸ்மார்ட்போனின் விலை என்ன? எப்போது முன்பதிவு செய்யலாம்?

முன்பே சொன்னது போல் நோக்கியாவின் இந்த புதிய நோக்கியா G20 ஸ்மார்ட்போனின் விற்பனை அமேசான் வலைத்தளம் வழியாக நடைபெறும் என்று நிறுவனம் கூறியுள்ளது. 4ஜி தொழில்நுட்பத்துடன் இயங்கும் இந்த ஸ்மார்ட்போன், பெரிய டிஸ்பிளே, சக்தி வாய்ந்த ரேம், குவாட் கேமரா அமைப்பு போன்ற சிறப்பான அம்சங்களுடன் வெறும் ரூ.12,999 என்ற விலையில் விற்பனைக்கு வரவுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது. இதன் முன்பதிவு வரும் ஜூலை 7ம் தேதி முதல் துவங்குகிறது.

ஆண்ட்ராய்டு பயனர்களே இந்த 9 ஆப்ஸ்களை உடனே டெலீட் செய்யுங்கள்.! ஏன் தெரியுமா?ஆண்ட்ராய்டு பயனர்களே இந்த 9 ஆப்ஸ்களை உடனே டெலீட் செய்யுங்கள்.! ஏன் தெரியுமா?

புதிய நோக்கியா ஜி 20 ஸ்மார்ட்போன் சிறப்பம்சம்

புதிய நோக்கியா ஜி 20 ஸ்மார்ட்போன் சிறப்பம்சம்

இந்த புதிய சாதனம் 6.52' இன்ச் 1600 x 720 பிக்சல் கொண்ட எச்டி பிளஸ் 20:9 வி-நாட்ச் டிஸ்ப்ளேவுடன் வருகிறது. இது 2.3GHz ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ G35 பிராசஸர் மூலம் இயங்குகிறது. இதில் IMG PowerVR GE8320 குபு உடன் 4 ஜிபி LPDDR4x ரேம் வழங்கப்பட்டுள்ளது. எஸ்டி கார்டு மூலமாக ஸ்டோரேஜ்ஜை நீடிக்கும் வசதியையும் இந்த சாதனம் ஆதரிக்கிறது. இது 64 ஜிபி மற்றும் 128 ஜிபி கொண்ட இரண்டு ஸ்டோரேஜ் வேரியண்ட் மாடல்களாக அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.

வெறும் ரூ.12,999 விலையில் குவாட் கேமரா அமைப்பா?

வெறும் ரூ.12,999 விலையில் குவாட் கேமரா அமைப்பா?

இந்த புதிய சாதனம் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தில் இயங்கக் கூடியது, இதில் 48 எம்பி பிரைமரி கேமரா, 5 எம்பி அல்ட்ரா வைடு சென்சார், 2 எம்பி டெப்த் சென்சார் மற்றும் 2 எம்பி மேக்ரோ சென்சார் கொண்ட குவாட் கேமரா அமைப்பை கொண்டுள்ளது. இதில் 8 எம்பி செல்பி கேமரா வீடியோ கால் அழைப்பு மற்றும் செல்பி அனுபவத்திற்காக வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் இந்த சாதனம் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார் உடன் வருகிறது.

'இந்த' ரேஷன் அட்டை பயனர்களுக்கு மட்டும் தான் ரூ.1000 உதவி தொகையா? குழப்பம் வேண்டாம் மக்களே.. உண்மை இதுதான்.!'இந்த' ரேஷன் அட்டை பயனர்களுக்கு மட்டும் தான் ரூ.1000 உதவி தொகையா? குழப்பம் வேண்டாம் மக்களே.. உண்மை இதுதான்.!

கண்ணை கவரும் வண்ணங்களில் நோக்கியா ஜி 20 ஸ்மார்ட்போன்

கண்ணை கவரும் வண்ணங்களில் நோக்கியா ஜி 20 ஸ்மார்ட்போன்

இணைப்பு விருப்பங்களைப் பொறுத்த வரையில் இந்த ஸ்மார்ட்போன் 3.5mm ஆடியோ ஜாக், FM ரேடியோ, கூகுள் அசிஸ்டண்ட், டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5, யுஎஸ்பி டைப் சி போன்ற அம்சங்களுடன் வருகிறது. இந்த நோக்கியா ஜி 20 ஸ்மார்ட்போன் 5050 எம்ஏஎச் பேட்டரி உடன் 10w சார்ஜிங் ஆதரவை ஆதரிக்கிறது. நோக்கியா G20 ஸ்மார்ட்போன் நைட் மற்றும் கிளேசியர் வைட் ஆகிய இரண்டு நிறங்களில் விற்பனைக்குக் கிடைக்கும் என்று நிறுவனம் அறிவித்துள்ளது.

Best Mobiles in India

English summary
Nokia G20 Launched In India at Rs 12999 and How To Pre Book It From Amazon For Early Access : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X