Home
Mobile

Nokia ஜி11 பிளஸ் இந்தியாவில் அறிமுகம்! விலையை சொன்னா வாங்குவீங்க.!

எச்எம்டி குளோபல் நிறுவனம் இந்தியாவில் Nokia G11 Plus ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த புதிய ஸ்மார்ட்போன் தரமான அம்சங்களுடன் பட்ஜெட் விலையில் வெளிவந்துள்ளது.

நோக்கியா ஜி11 பிளஸ்

நோக்கியா ஜி11 பிளஸ்

நோக்கியா ஜி11 பிளஸ் ஏற்கனவே உலக சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் தற்போது தான் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும்இந்த ஸ்மார்ட்போனின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

50எம்பி பிரைமரி கேமரா

50எம்பி பிரைமரி கேமரா

நோக்கியா ஜி11 பிளஸ் ஸ்மார்ட்போன் 50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். இதுதவிர பல கேமரா அம்சங்கள் மற்றும் எல்இடி பிளாஷ் வசதி இவற்றுள் அடக்கம்.

UniSoC T606 பிராசஸர்

UniSoC T606 பிராசஸர்

புதிய நோக்கியா ஜி11 பிளஸ் ஸ்மார்ட்போன் ஆக்டோ-கோர் UniSoC T606 பிராசஸர் வசதியுடன் வெளிவந்துள்ளது. மேலும்ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸமார்ட்போனை பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

180 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட்

180 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட்

6.5-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது. இந்த நோக்கியா ஜி11 பிளஸ் ஸ்மர்ர்ட்போன். மேலும் 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 180 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட், 20:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான நோக்கியா ஸ்மார்ட்போன் மாடல்.

10 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி

10 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி

நோக்கியா ஜி11 பிளஸ் ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் கிடைக்கும். குறிப்பாக 10 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி, கைரேகை ஸ்கேனர், OZO ஆடியோ ஆதரவு உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது இந்த நோக்கியா போன்.

கனெக்டிவிட்டி

கனெக்டிவிட்டி

குறிப்பாக 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11, புளூடூத் 5.0, ஜிபிஎஸ் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அசத்தலான நோக்கியா ஜி11 பிளஸ் ஸ்மார்ட்போன். மேலும் இந்த புதிய ஸ்மார்ட்போன் கிரே மற்றும் நீல நிறத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

விலை?

விலை?

4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட நோக்கியா ஜி11 பிளஸ் ஸ்மார்ட்போனின் விலை ரூ.12,499-ஆக உள்ளது. மேலும் இந்த சாதனத்தை நிறுவனத்தின் இணையதளம் மூலம் வாங்க முடியும் என்று கூறப்படுகிறது. அதேபோல் நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த இந்த போனில் மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
Nokia G11 Plus with 90Hz display Launched in India: Specs, Price and More: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X