ஏப்ரல் 10 இந்தியாவுக்கு வரும் நோக்கியா ஜி10: அம்சங்கள், விலை இதுதானா?

|

நோக்கியா ஜி10 ஸ்மார்ட்போன் ஏப்ரல் மாதம் 10 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் விலை மற்றும் அம்சங்கள் குறித்து பார்க்கலாம். எச்எம்டி குளோபல் நிறுவனத்தின் நோக்கியா, புதிய ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. நோக்கியா ஜி10 ஸ்மார்ட்போன் முன்னதாகவே பல தளங்களில் கண்டறியப்பட்டுள்ளது. நோக்கியா ஸ்மார்ட்போன்களுக்கான டாட் மாநாட்டை தவிர்ப்பதற்கான அறிவிப்பை எச்எம்டி அறிவித்துள்ளது. புதுப்பிக்கப்பட்ட முதல் சாதனமாக ஜி10 இருக்கும் என தகவல்கள் வெளியானது.

நோக்கியா ஜி10 ஸ்மார்ட்போன்

பிற போட்டி நிறுவனங்களுடன் ஒப்பிடும்போது எச்எம்டி குளோபலின் குறைந்த சாதனமாக இருக்கும் எனவும் நோக்கியா ஸ்மார்ட்போன்களுக்கான பெயரிடும் பாணியை மாற்றுவதற்கு நோக்கியா தயாராகி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நோக்கியா ஜி10 ஸ்மார்ட்போன் உடன் நோக்கியா 2.4 மற்றும் நோக்கியா 3.4 ஆகிய புதிய ஸ்மார்ட்போன்களை எச்எம்டி குளோபல் அறிமுகப்படுத்தும் என தெரிவிக்கப்படுகிறது.

நோக்கியா ஜி10 ஸ்மார்ட்போன் அம்சங்கள்

நோக்கியா ஜி10 ஸ்மார்ட்போனின் அம்சங்கள் குறித்து பார்க்கையில், இது ஜி10 ஆக்டோகோர் செயலி மூலம் இயக்கப்படும் என கூறப்படுகிறது. இந்த செயலி குறித்த சரியான தகவல்கள் தெரியவில்லை. இந்த ஸ்மார்ட்போன் 3ஜிபி மற்றும் 4ஜிபி ரேம் ஆகிய அளவுகளில் வரும் எனவும் இது 32 ஜிபி உள்சேமிப்பு அல்லது 64ஜிபி உள்சேமிப்பை கொண்டிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 10 மூலம் வெளியிடப்படும் எனவும் இது ஆண்ட்ராய்டு 11 வெளியான பிறகும் அதே பழைய ஓஎஸ் ஆதரவை பெறும் என கூறப்படுகிறது.

4000 எம்ஏஎச் பேட்டரி ஆதரவு

நோக்கியா ஜி10 ஸ்மார்ட்போனில் மெமரி விரிவாக்க வசதிக்கு 512ஜிபி வரை மெமரி நீடிக்கக்கூடிய மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் இருக்கும் எனவும் கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் எச்டி ப்ளஸ் ரெசல்யூஷன் உடன் 6.38 இன்ச் டிஸ்ப்ளே, 19:5:9 விகித அளவையும் யூஎஸ்பி டைப் சிபோர்ட் ஆகியவையை கொண்டிருக்கும் எனவும் கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் 4000 எம்ஏஎச் பேட்டரி ஆதரவுடன் 10 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

நோக்கியா ஜி10 கேமரா அம்சங்கள்

நோக்கியா ஜி10 ஸ்மார்ட்போன் 48 எம்பி பிரதான கேமரா, 2 எம்பி இரண்டாம் நிலை கேமரா, 5 எம்பி மூன்றாம் நிலை மற்றும் 2 எம்பி நான்காம் நிலை கேமராவை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் செல்பி மற்றும் வீடியோ ஆதரவுக்கு என 16 எம்பி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் குவால்காம் ஆப்டிக்ஸ், எஃப்எம் ரேடியோ ஆதரவை கொண்டுள்ளது. நோக்கியா ஜி10 ஸ்மார்ட்போன் கூகுள் அசிஸ்டெண்ட் பட்டன் கொண்டிருக்கும் எனவும் இதன் எடை 180 கிராம் ஆக இருக்கும் எனவும் கூறப்படுகிறது.

நோக்கியா ஜி10 விலை விவரங்கள்

நோக்கியா ஜி 10 விலை குறித்து பார்க்கையில் இதன் 3ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி உள்சேமிப்பு விலை இந்திய மதிப்புப்படி சுமார் ரூ.11,999 ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் இதில் எச்எம்டி குளோப் நோக்கியா ஜி10 நோக்கியா ஜி10 ஸ்மார்ட்போனை ஏப்ரல் 8 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வெளியீட்டு நிகழ்வில் நோக்கியா இரண்டு ஸ்மார்ட்போன்களை வெளியிடும் என கூறப்படுகிறது. அது நோக்கியா எக்ஸ் 10, நோக்கியா எக்ஸ்20 ஆக இருக்கும் எனவும் தகவல்கள் தெரிவிக்கிறது.

File Images

Best Mobiles in India

English summary
Nokia G10 Smartphone May Launching on April 10: Sources Said

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X