நோக்கியா சி01 பிளஸ், நோக்கியா ஜி10 ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகம்.! ஆரம்ப விலை ரூ.5,999 மட்டுமே.!

|

எச்எம்டி குளோபல் நிறுவனம் தனது புதிய நோக்கியா சி01 பிளஸ், நோக்கியா ஜி10 ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களுக்கும் தனித்துவமான அம்சங்களுடன் பட்ஜெட் விலையில் வெளிவந்துள்ளது. இப்போது இந்த சாதனங்களின் விலை மற்றும் பல்வேறு அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

நோக்கியா சி01 பிளஸ் விலை

நோக்கியா சி01 பிளஸ் விலை

2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி உள்ளடக்க மெமரி வசதி கொண்ட நோக்கியா சி01 பிளஸ் ஸ்மார்ட்போனின் விலை ரூ.5,999-ஆக உள்ளது. பின்பு நோக்கியா.காம், அமேசான் மற்றும் சில இ-காமர்ஸ் தளங்களில் இந்த புதிய சாதனம் விற்பனைக்கு வந்துள்ளது. மேலும் இந்த சாதனம் ப்ளூ மற்றும் பர்பிள் நிறங்களில் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக ஜியோ நிறுவனம் சார்பில் இந்த நோக்கியா சி01 பிளஸ் ஸ்மார்ட்போனுக்கு குறிப்பிட்ட சலுகைகள் கிடைக்கும்.

நோக்கியா சி01 பிளஸ் அம்சங்கள்

நோக்கியா சி01 பிளஸ் அம்சங்கள்

  • டிஸ்பிளே: 5.45-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே (720x1,440 பிக்சல்கள்)
  • 18:9 என்ற திரைவிகிதம்
  • மெட்டல் அலாய் சேஸ் கொண்ட பாலிகார்பனேட் பாடி
  • ரேம்: 2ஜிபி
  • மெமரி 16ஜிபி
  • ப்ராசஸர் : UNISOC SC9863A 1.6GHz ஆக்டா கோர் ப்ராசஸர்
  • ரியர் கேமரா: 5எம்பி
  • செல்பீ கேமரா: 5எம்பி
  • எல்இடி ஃபிளாஷ் ஆதரவு உள்ளது
  • பேட்டரி: 3000 எம்ஏஎச் பேட்டரி ஆதரவு
  • இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 11 (கோ எடிஷன்)
  • பேஸ் அன்லாக் அம்சம்
  • ஜி-சென்சார்
  • ஆம்பியண்ட் லைட் சென்சார் ஆதரவு
  • ப்ராக்ஸிமிட்டி சென்சார் ஆதரவு
  • எடை: 157 கிராம்
  • இனி நீண்ட நாள் வெயிட் பண்ண வேண்டாம்.. OnePlus 9RT அறிமுக தேதி வெளியானது.. விலை இதுதானா?இனி நீண்ட நாள் வெயிட் பண்ண வேண்டாம்.. OnePlus 9RT அறிமுக தேதி வெளியானது.. விலை இதுதானா?

    நோக்கியா ஜி10 விலை

    நோக்கியா ஜி10 விலை

    4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட நோக்கியா ஜி10 ஸ்மார்ட்போனின் விலை ரூ.12,149-ஆக உள்ளது. பின்பு இந்த சாதனத்தை நோக்கியா.காம் வழியாக விற்பனைக்கு வந்துள்ளது. அதேபோல் நைட் மற்றும் டஸ்க் நிறங்களில் இந்த நோக்கியா ஜி10 ஸ்மார்ட்போனை வாங்க முடியும். மேலும் ஜியோ நிறுவனம் சார்பில் நோக்கியா ஜி10 ஸ்மார்ட்போனுக்கு குறிப்பிட்ட சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    எச்சரிக்கை: இந்த 19,300 ஆப்ஸ்களும் ஆபத்துதான்., எல்லாமே கூகுள் ப்ளே ஸ்டோரில் இருக்கு- தகவலை லீக் செய்வாங்க!எச்சரிக்கை: இந்த 19,300 ஆப்ஸ்களும் ஆபத்துதான்., எல்லாமே கூகுள் ப்ளே ஸ்டோரில் இருக்கு- தகவலை லீக் செய்வாங்க!

    நோக்கியா ஜி10 அம்சங்கள்

    நோக்கியா ஜி10 அம்சங்கள்

    • டிஸ்பிளே: 6.5-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே
    • 20:9 என்ற திரைவிகிதம்
    • ப்ராசஸர்: மீடியாடெக் ஹீலியோ ஜி25 எஸ்ஒசி ப்ராசஸர்
    • இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 11
    • இரண்டு வருட சாப்ட்வேர் அப்டேட் உள்ளது.
    • ரியர் கேமரா: 13எம்பி மெயின் கேமரா + 2எம்பி மேக்ரோ லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார்
    • செல்பீ கேமரா: 8எம்பி
    • எல்இடி பிளாஷ் ஆதரவு
    • ப்ளூடூத் 5.0
    • வைஃபை 802.11
    • 3.5 மிமீ ஹெட்ஜாக்
    • பேட்டரி: 5050 எம்ஏஎச் பேட்டரி
    • பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார்
    • கூகுள் அசிஸ்டென்ட் ஆதரவு
    • எடை: 197 கிராம்
    •  நோக்கியா ஜி50 5ஜி

      நோக்கியா ஜி50 5ஜி

      அதேபோல் இந்நிறுவனம் நோக்கியா ஜி50 5ஜி ஸ்மார்ட்போனை விரைவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. அதாவது நோக்கியா ஜி50 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.38-இன்ச் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 720 x 1560 பிக்சல் தீர்மானம், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு இந்த புதிய நோக்கியா ஜி50 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவரும். மேலும் இந்த சாதனத்தில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 480 சிப்செட் வசதி உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. நோக்கியா ஜி50 5ஜி ஸ்மார்ட்போனில் 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த புதிய ஸ்மார்ட்போன் வெளிவரும். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் வழங்கப்படும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Nokia G10, Nokia C01 Plus Launched: Specs, Features and More: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X