5G Phone ஆட்டத்துக்கு நாங்களும் வரலாமா? NOKIA இறக்கி விடும் கொம்பு சீவாத காளை!

|

நோக்கியா ஜி60 5ஜி போன் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதாவது எச்எம்டி குளோபல் நிறுவனம் இந்தியாவில் Nokia G60 5G போன் விரைவில் முன்பதிவு செய்யக் கிடைக்கும் என்று தெரிவித்துள்ளது.

நோக்கியா ஜி60 5ஜி

நோக்கியா ஜி60 5ஜி

குறிப்பாக இந்திய சந்தையில் நோக்கியா ஜி60 5ஜி போன் ஆனது அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் இந்த நோக்கியா ஜி60 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ஏற்கனவே உலக சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின்அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

அடேங்கப்பா.! 300 விலைக்குள் இத்தனை Jio ரீசார்ஜ் திட்டம் இருக்கா? இது தெரியாம போச்சே.!அடேங்கப்பா.! 300 விலைக்குள் இத்தனை Jio ரீசார்ஜ் திட்டம் இருக்கா? இது தெரியாம போச்சே.!

120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்

120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்

நோக்கியா ஜி60 5ஜி ஆனது 6.58-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. மேலும் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1080×2400 பிக்சல்ஸ், 20:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ, 500 நிட்ஸ் ப்ரைட்னஸ், கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு மற்றும் பல சிறப்பான அம்சங்களைக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த நோக்கியா போன்.

சீன கம்பெனியின் பக்கா ஸ்கெட்ச்! அடுத்த 2 மாசத்துல எங்க பார்த்தாலும் இந்த 3 Phone தான் இருக்கும்!சீன கம்பெனியின் பக்கா ஸ்கெட்ச்! அடுத்த 2 மாசத்துல எங்க பார்த்தாலும் இந்த 3 Phone தான் இருக்கும்!

ஸ்னாப்டிராகன் 695 சிப்செட் வசதி

ஸ்னாப்டிராகன் 695 சிப்செட் வசதி

புதிய நோக்கியா ஜி60 5ஜி போனில் ஆக்டோ கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 சிப்செட் வசதி உள்ளது. இந்த சிப்செட் மேம்பட்ட சிபியு மற்றும் ஜிபியு வேகத்தை வழங்கும். குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்றால் மேம்பட்ட செயல்திறனை வழங்கும் இந்த ஸ்னாப்டிராகன் சிப்செட். அதேபோல் ஆண்ட்ராய்டு 12 இயங்குதள வசதியைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன்.

எல்லோரும் வாங்க நினைத்த Xiaomi Book Air 13 லேப்டாப் அறிமுகம்.! விலை என்ன தெரியுமா?எல்லோரும் வாங்க நினைத்த Xiaomi Book Air 13 லேப்டாப் அறிமுகம்.! விலை என்ன தெரியுமா?

6ஜிபி ரேம்

நோக்கியா ஜி60 5ஜி போன் ஆனது 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட்
ஆதரவு உள்ளது.

50-இன்ச், 55-இன்ச் TV-லாம் கொஞ்சம் ஓரம்போ.. Redmi-யின் 86-இன்ச் டிவி அறிமுகம்! என்ன விலை?50-இன்ச், 55-இன்ச் TV-லாம் கொஞ்சம் ஓரம்போ.. Redmi-யின் 86-இன்ச் டிவி அறிமுகம்! என்ன விலை?

50எம்பி பிரைமரி கேமரா

50எம்பி பிரைமரி கேமரா

இந்த நோக்கியா ஜி60 5ஜி ஸ்மார்ட்போன் 50எம்பி பிரைமரி கேமரா + 5எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி டெப்த் லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸமார்ட்போன்.

பர்ஸ்ல ஓட்டை விழாம ஒரு நல்ல 5G Phone வாங்கணுமா? 1 இல்ல மொத்தம் 5 ஆப்ஷன் இருக்கு!பர்ஸ்ல ஓட்டை விழாம ஒரு நல்ல 5G Phone வாங்கணுமா? 1 இல்ல மொத்தம் 5 ஆப்ஷன் இருக்கு!

20 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி

20 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி

4500 எம்ஏஎச் பேட்டரி ஆதரவைக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த நோக்கியா போன். எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 20 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி, பவர் பட்டன் கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த அசத்தலான நோக்கியாபோன்.

போச்சு! ஒட்டுமொத்த வங்கி பயனர்களின் வயிற்றிலும் புளியை கரைக்கும் எச்சரிக்கை! என்னது அது?போச்சு! ஒட்டுமொத்த வங்கி பயனர்களின் வயிற்றிலும் புளியை கரைக்கும் எச்சரிக்கை! என்னது அது?

 ரூ.20,000-க்குள் அறிமுகமாகும்

இந்த போன் Black மற்றும் Ice நிறங்களில் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. டூயல் சிம், 5ஜி, வைஃபை 6, ப்ளூடூத் 5.1, ஜிபிஎஸ்,யுஎஸ்பி டைப்-சி போர்ட்,3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த போன். மேலும் இந்த போன் ரூ.20,000-க்குள் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
Nokia entering 5G phone competition in India All set to launch Nokia G60 5G Phone : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X