புதிய இ-6 ஸ்மார்ட்போனுக்கு புக்கிங் ஆரம்பம்: நோக்கியா

By Super
|
புதிய இ-6 ஸ்மார்ட்போனுக்கு புக்கிங் ஆரம்பம்: நோக்கியா
டெல்லி: புதிய சிம்பையான் அன்னா ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் அப்கிரேடு செய்யப்பட்ட புதிய இ-6 ஸ்மார்ட்போனுக்கு புக்கிங் துவங்கப்பட்டுள்ளதாக நோக்கியா அறிவித்துள்ளது.

இ-6 மற்றும் எக்ஸ்-7 ஆகிய இரண்டு ஸ்மார்ட்போன்களை நோக்கியா கடந்த மாதம் அறிமுகம் செய்தது. இந்த நிலையில், இ-6 போனிற்கான புக்கிங் துவங்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

புக்கிங் செய்வதற்கு முன் இந்த போன்களின் சிறப்பம்சங்களை தெரிந்துகொண்டால், தேர்வு செய்வது எளிதாக இருக்கும். தற்போது இ-6 போனுக்கு மட்டும் புக்கிங் துவங்கப்பட்டாலும், விரைவில் புக்கிங் துவங்கப்பட உள்ள சிம்பையான் அன்னா ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்ட எக்ஸ்- 7 போனின் சிறப்பம்சங்களையும் சேர்த்து பார்த்துவிடுவோம்.

முதலில் புதிய சிம்பையான் அன்னா ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் சிறப்பம்சங்களை காணலாம்.

சர்வதேச அளவில் இ-6 மற்றும் எக்ஸ்-7 போன்களில் மட்டுமே சிம்பையான் அன்னா ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஸ்டாண்டர்டாக அப்லோடு செய்யப்பட்டு விற்பனைக்கு வந்துள்ளது. மற்ற போன்களில் விருப்ப தேர்வாக சிம்பையான் அன்னா ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை அப்லோடு செய்து கொள்ள முடியும்.

புதிய சிம்பையான் அன்னா ஆப்பரேட்டிங் சிஸ்டம் மூலம் கிடைக்கும் பலன்கள்:

கிவெர்ட்டி கீபோர்டு சப்போர்ட்

இன்டர்நெட்டை எளிதாக இயக்கும் வசதி

மேம்படுத்தப்பட்ட ஓவி மேப்ஸ்

ஜாவா ரன்டைம் 2.2 சாப்ட்வேர் சப்போர்ட்

புதிய ஐகான் செட்

ஆகியவற்றை புதிய சிம்பையான் ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொடுக்கிறது.

இப்போது, இ-6 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்களை காணலாம்.

இ-6 போனில் மியூசிக் பிளேயர் மற்றும் வீடியோ பிளையர், ஹைடெபினிஷன் பார்மெட் உள்ளிட்டவை அப்லோடு செய்யப்பட்டுள்ளது. எப்எம் ரேடியோ மற்றும் ஸ்டீரியோ ஸ்பீக்கர்ஸ் ஆகியவையும் உண்டு.

இ-6 போனில் ஆற்றல் வாய்ந்த கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இது ஹைடெபினிஷனில் துல்லியமான வீடியோ ரெக்கார்டிங் வசதிகளை கொடுக்கிறது. தவிர, புளூடூத், வை-பை மற்றும் யூஎஸ்பி பிசி கனெக்ட் வசதியும் உள்ளது.

இ-6 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள்:

சிம்பையான் அன்னா ஓஎஸ்

8மெகாபிக்செல் கேமரா

வை-பை சப்போர்ட்

720பி வீடியோ ரெக்கார்டிங்

இடிஆருடன் கூடிய புளூடூத் 3.0

வீடியோ காலிங் வசதிக்காக முகப்பு கேமரா

14எம்பிபிஎஸ் வேகம் கொண்ட இன்டர்நெட்

ஜாவா சப்போர்ட்

7 மணிநேரம் டாக்டைம் கொண்ட பேட்டரி

3 நாட்கள் கொண்ட சக்திவாய்ந்த பேட்டரி

உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்களை நோக்கியா இ-6 கொண்டுள்ளது.

அடுத்து, நோக்கியா எக்ஸ்- 7 சிறப்பம்சங்களை இங்கே காணலாம்.

16 மில்லியன் கலர்களை பிரித்தறியும் அமொலெட் திரை கொண்ட டிஸ்பிளே. மேலும், உராய்வுகளிலிருநது திரையை பாதுகாக்கும் ஸ்ராட்ச் ரெசிஸ்டென்ட் உறையையும் கொண்டுள்ளது.

பொழுதுபோக்கு அம்சங்களுக்கு ஏற்ற இந்த போன் 320 எம்பி சேமிப்பு திறன் கொண்டுள்ளது. தேவைப்படும் பட்சத்தில் 32 ஜிபி வரை கூடுதல் மெமரி கார்டை சப்போர்ட் செய்யும் வசதியும் உள்ளது.

இந்த போன் 4.5 மணிநேரம் டாக்டைம் மட்டுமே கொண்டுள்ளது. இதிலும், இ-6 போன் போன்றே 720 பி வீடியோ ரெக்கார்டிங் செய்யும் வசதியும் கொண்டுள்ளது.

அனைத்து வசதிகள் இருந்தாலும், ஸ்மார்ட்போன்களை தேர்வு செய்யும்போதும், புக்கிங் செய்யும்போதும் விலையை கவனத்தில் கொள்வது அவசியம்.

மார்க்கெட்டில் இ-6 போன் ரூ.18,000 விலையிலும், எக்ஸ்- 7 ரூ. 22,829 விலையிலும் விற்பனை செய்யப்பட இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X