Home
Mobile

நோக்கியா இ-6 மற்றும் இ-7 ஸ்மார்ட்போன்கள்- ஒப்பீட்டு பார்வை

By Super
நோக்கியா இ-6 மற்றும் இ-7 ஸ்மார்ட்போன்கள்- ஒப்பீட்டு பார்வை
மொபைல் உலகத்திற்கு போட்டியை கொடுக்கும் வகையில் நோக்கியா நிறுவனம் அறிமுகப்படுத்திய உயர் வகை ஸ்மார்ட்போன்களான இ-6 மற்றும் இ-7 ஆகியவை சர்வதேச சந்தையை கலக்கி வருகின்றன. ஒரு புதிய கண்டுபிடிப்பை வெளியிட்டுள்ளது.

நோக்கியா இ-6 மற்றும் இ-7 மாடல் இப்பொழுது ஒரு புதிய மாற்றத்தை மொபைல் உலகில் ஏற்படுத்தியுள்ளது. இந்த மொபைலின் தோற்றம், வாடிக்கையாளர்களின் மனதை பார்த்த நொடியிலேயே தட்டிப்பறிக்கிறது. கண்கவரும் தோற்றத்தைக் கொண்ட இந்த மாடல் மார்கெட்டில் ஒரு புதிய திருப்பத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது என்றே கூறலாம்.

பார்ப்பவர்களின் எண்ணங்களைத் தன் வசம் இழுக்கும் நோக்கியா இ-6 133 கிராம் எடையும் மற்றும் 115.5 X 59 X 10.5 மில்லி மீட்டர் அளவுகளில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இ-6 மாடலில் 8.0 மெகா பிக்ஸல் கேமரா 3264 X 2558 பிக்செல் துல்லியத்தை கொடுக்கும் ஆற்றல் வாய்ந்தது.

இதில், 0.3 மெகாபிக்செல் கொண்ட முகப்பு கேமரா வீடியோ காலிங் வசதியை கொடுக்கிறது. அதோடு டியூவல் ஃப்ளாஷ் வசதியும் கொண்டுள்ளது.

2.46 இஞ்ச் அளவு தொடுதிரையைக்கொண்டுள்ளதால் எதையும் முழுமையாகக் காணமுடியும். எல்சிடி கெப்பாஸிட்டி தொடுதிரை மூலம் துல்லியமான வீடியோ மற்றும் புகைப்படங்களை காணமுடியும். அதேவேளை, வடிவத்தில் சிறிது மாற்றம் கொண்ட நோக்கியா இ-7 ஸ்மார்ட்போன் 176 கிராம் எடையைக்கொண்டுள்ளது. கையாள்வதற்கு மிகவும் எளிதாக உள்ளதை நிச்சயம் உங்களால் உணரமுடியும்.

எந்த விதமான தடையும் இன்றி காட்சிகளை ரசித்துக்காண அகலமான திரையை கொண்டுள்ளது. இ-7 மாடலிலும் ஆட்டோ ஃபோக்கஸ், டியூவல் எல்இடி ப்ளாஷ் கொண்ட 8 மெகா பிக்செல் கேமரா பொருத்தப்பட்டுள்ளது. டிஜிட்டல் சூம் சவுகரியத்தினால் எந்த வீடியோக் காட்சிகளையும் துல்லியமாக பார்க்க முடியும்.

உங்களை உற்சாகப்படுத்துவதற்காகவே பல பொழுது போக்கு அம்சங்களையும் அள்ளித்தந்திருக்கிறது இந்த மாடல். 3.5 மில்லி மீட்டர் அளவு கொண்ட ஆடியோ ஜாக்கை கொண்டுள்ளதால், கூடுதல் ஸ்பீக்கர்களை இணைக்கும் வசதியை பெற முடியும். லவுடு ஸ்பீக்கர் பயன்படுத்தியும் பாடல்களை கேட்க முடியும்.

இரண்டு மாடல்களிலுமே 3ஜி நெட்வொர்க்கை சப்போர்ட் செய்யும். 850/ 900/ 1800 / 1900 என்ற அளவில் GSM மின் பேண்டு சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு மாடல்களிலுமே நீங்கள் தகவல் பரிமாற்றங்கள் செய்துகொள்ள எஸ்எம்எஸ், எம்எம்எஸ், ஈமெயில், பாப் மெயில் போன்ற இதர விஷயங்களையும் சுலபமாக பரிமாறிக் கொள்ள முடியும்.

அதிக வசதிகளை அள்ளித்தரும் இந்த இரண்டு போன்களில் இ-6 ஸ்மார்ட்போன் ரூ.15,490க்கும், இ-7 ஸ்மார்ட்போன் ரூ.24,990க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X