ஒத்து ஒத்து... வச்சி செய்யும் விலையில் NOKIA-வின் புதிய 5G போன்... பிப்.20 முதல் இந்திய விற்பனை!
பல ஆண்டுகளுக்கு முன்னர் தான் இழந்த மார்க்கெட்டை மீட்டெடுக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக நோக்கியா (NOKIA) நிறுவனம் கடந்த சில மாதங்களாகவே நல்ல-நல்ல மாடல்களை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது. அதிலொரு மாடல் வருகிற பிப்ரவரி 20 ஆம் தேதியன்று இந்தியாவிற்கு வருகிறது!
அதென்ன ஸ்மார்ட்போன்? அதன் விலை நிர்ணயம் என்ன? அது என்னென்ன அம்சங்களை பேக் செய்கிறது? இதோ விரிவான விவரங்கள்:
NOKIA X30 5G இஸ் கம்மிங்
நோக்கியா நிறுவனம், அதன் லேட்டஸ்ட் 5ஜி ஸ்மார்ட்போன்களில் ஒன்றான நோக்கியா எக்ஸ்30 5ஜி மாடலின் இந்திய விற்பனையானது வருகிற பிப்ரவரி 20 ஆம் தேதி முதல் தொடங்கும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

நோக்கியா எக்ஸ்30 5ஜி ஸ்மார்ட்போனானது 65% மறுசுழற்சி செய்யப்பட்ட அலுமினியம் மற்றும் 100% மறுசுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக்கால் உருவாக்கப்பட்டுள்ளது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
NOKIA X30 5G அம்சங்கள்
இந்த ஸ்மார்ட்போன் ஏற்கனவே ஐரோப்பிய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுவிட்டதால், இது என்ன விலைக்கு அறிமுகமாகும்? என்னென்ன அம்சங்களை பேக் செய்யும் என்பது குறித்து எந்த குழப்பமும் இல்லை!
அலுமினியம் ஃப்ரேம் உடன் வரும் நோக்கியா எக்ஸ்30 5ஜி ஸ்மார்ட்போனின் டிஸ்பிளேவானது கொரில்லா கிளாஸ் விக்டஸ் மூலம் பாதுகாக்கப்படுகிறது. இருப்பினும், நோக்கியா எக்ஸ்30 5ஜி ஸ்மார்ட்போனின் பேக் பேனல் பிளாஸ்டிக்கால் செய்யப்பட்டுள்ளது.
நோக்கியா எக்ஸ்30 5ஜி ஸ்மார்ட்போனின் "ஐரோப்பிய வெர்ஷன்" 6.43-இன்ச் ஃபுல் எச்டி+ அமோஎல்இடி டிஸ்பிளேவை கொண்டுள்ளது. 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி வரையிலான இண்டர்னல் ஸ்டோரேஜை வழங்கும் இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 695 சிப்செட் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்திய சந்தையில், இந்த ஸ்மார்ட்போனின் 128ஜிபி ஸ்டோரேஜூம் அறிமுகம் செய்யப்படலாம்.
கேமராக்களை பொறுத்தவரை, இதில் 50எம்பி மெயின் மற்றும் 13எம்பி அல்ட்ரா-வைட்-ஆங்கிள் கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா செட்டப் உள்ளது. முன்பக்கத்தில் 16எம்பி செல்பீ கேமரா உள்ளது. 33W ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கும் 4200mAh பேட்டரியை பேக் செய்யும் இந்த நோக்கியா ஸ்மார்ட்போன் தூசி மற்றும் நீர்-எதிர்ப்பிற்கான ஐபி67 ரேட்டிங்கையும் பெற்றுள்ளது.
கனெக்டிவிட்டி விருப்பங்களை பொறுத்தவரை, இது 5ஜி, வைஃபை 6, 4ஜி எல்டிஇ, ப்ளூடூத் 5.1 மற்றும் என்எஃப்சி போன்றவைகளை வழங்குகிறது, கடைசியாக, இந்த ஸ்மார்ட்போன் 3 வருடங்களுக்கு முக்கிய ஆண்ட்ராய்டு ஓஎஸ் அப்டேட்களை பெறும் என்றும் உறுதியளிக்கப்பட்டுள்ளது.
NOKIA X30 5G போனின் விலை மற்றும் கலர் ஆப்ஷன்ஸ்
முன்னரே குறிப்பிட்டபடி நோக்கியா எக்ஸ்30 5ஜி ஸ்மார்ட்போனின் இந்திய விற்பனை வருகிற பிப்ரவரி 20 ஆம் தேதி முதல் தொடங்கும். இது க்ளவுடி ப்ளூ மற்றும் ஐஸ் ஒயிட் என்கிற 2 கலர் ஆப்ஷன்களின் கீழ் வாங்க கிடைக்கும்.
ஐரோப்பா மற்றும் இங்கிலாந்து சந்தைகளின் விலை நிர்ணயத்தை பொறுத்தவரை, நோக்கியா எக்ஸ்30 5ஜி ஸ்மார்ட்போன் சுமார் ரூ.42,000 க்கு விற்பனை செய்யபப்டுகிறது. ஆனால் இந்தியாவில் இந்த ஸ்மார்ட்போன் ரூ.35,000 க்குள் என்கிற பட்ஜெட்டின் கீழ் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications