மீண்டும் களமிறங்க தயார் : நோக்கியா அதிரடி.!!

By Meganathan
|

பல்வேறு காரணங்களுக்காக சில ஆண்டுகளாக ஸ்மார்ட்போன் சந்தையில் இருந்து நோக்கியா நிறுவனம் விலகி இருந்தது அனைவரும் அறிந்த ஒன்றே. ஸ்மார்ட்போன் சந்தையில் முதல் இடத்தை இழந்த நோக்கியா நிறுவனத்தை மைக்ரோசாப்ட் நிறுவனம் கைப்பற்றியிருந்தது.

இந்நிலையில் மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் ஒப்பந்தம் நிறைவடைந்த பின் நோக்கியா நிறுவனம் இந்தாண்டின் நான்காவது காலாண்டு வாக்கில் மீண்டும் ஸ்மாராட்போன் சந்தையில் களமிறங்க காத்திருக்கின்றது.

உறுதி

உறுதி

இதை உறுதி செய்யும் வகையில் முன்பை போன்றே நோக்கியா கருவிகள் வெளியாகும் என நோக்கியா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான ராஜீவ் சூரி தெரிவித்துள்ளார்.

 தடை

தடை

சமீபத்தில் சாம்சங் நிறுவன கருவிகள் அமெரிக்காவில் தடை செய்யப்பட்டிருக்கும் நிலையில் நோக்கியா வரவு சாம்சங் உள்ளிட்ட பல நிறுவனங்களுக்கு கடும் போட்டியை அளிக்கும் என்பதில் சந்தேகம் ஏதும் இருக்க முடியாது.

சின்னம்

சின்னம்

சிறிய இடைவெளிக்கு பின் நோக்கியா சின்னம் மற்றும் பெயர் பொறித்த முதல் ஸ்மார்ட்போன் கருவியாக நோக்கியா சி1 இருக்கும் என செய்திகள் வெளியாக துவங்கியுள்ளன.

இணைம்

இணைம்

இதோடு இந்த கருவியின் சிறப்பம்சங்களும் இணையத்தில் கசிந்திருக்கின்றன. அவ்வாறு நோக்கியாவின் புதிய கருவியானது நோக்கியா சி1 என்ற பெயரில் வெளியாகலாம்.

சிறப்பம்சம்

சிறப்பம்சம்

சிறப்பம்சங்களை பொருத்த வரை நோக்கியா சி1 கருவியில் 5.0 அல்லது 5.5 இன்ச் எஃப்எச்டி திரை 32 ஜிபி மெமரி / 2 ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி / 3 ஜிபி ரேம் என இரு வகை மெமரி கொண்டிருக்கலாம் என கூறப்படுகின்றது.

கேமரா

கேமரா

கேமராவை பொருத்த வரை 8 எம்பி ப்ரைமரி கேமரா மற்றும் 5 எம்பி முன்பக்க கேமராவும், ஆண்ட்ராய்டு மார்ஷ்மல்லோ இயங்குதளம் மற்றும் விண்டோஸ் 10 இயங்குதளம் என இரு மாடல்கள் வெளியாகலாம் என்றும் கூறப்படுகின்றது.

அறிவிப்பு

அறிவிப்பு

எனினும் இந்த கருவயின் சிறப்பம்சங்கள் மற்றும் இதர தகவல்கள் எதுவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

முகநூல்

முகநூல்

மேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.

Best Mobiles in India

English summary
Nokia Coming Back With Android Smartphone. Read More in Tamil.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X