புதிய டேங்கோ ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் வரும் நோக்கியா மொபைல்

இந்த வாசகத்திற்கு ஏற்றவகையில் சாம்ப்னி என்ற மொபைலை உருவாக்கியிருக்கிறது நோக்கியா.
சாம்ப்னி மொபைல் புதிய டேங்கோ ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன், மொபைல் மார்கெட்டையே கலக்கும் என்று பெரிதும் எதிர் பார்க்கப்படுகிறது.
விண்டோஸ் வரிசையில் வரும் புதிய டேங்கோ இயங்குதளம் மூலம் பல நவீன தொழில்நுட்ப வசதிகளை பெற முடியும்.
இந்த மாதத்தின் கடைசியில், சாம்ப்னி மொபைல் பற்றிய அதிகாரப்பூர்வமான அறிவிப்பு கொடுக்கப்படும் என்றும் எதிர் பார்க்கப்படுகின்றது.
இந்த மொபைல் வெர்ஷன் 7.10.8711 விண்டோஸ் போன் மூலம் இயங்கும் என்று சில தகவல்கள் கூறுகின்றன.
ஷாம்பெய்ன் மொபைல், நோக்கியா லுமியா-800 மொபைலில் உள்ள தொழில் நுட்பத்தை அப்படியே அல்லாமல் கொஞ்சம் மேம்படுத்தப்பட்ட வகையில் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதோடு இந்த சாம்ப்னி மொபைல் ஸ்மார்ட்போன்களில் ஒரு சிறந்த மாறுதலை ஏற்படுத்தும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.
பல நவீன வசதிகளை பெற முடியும் என்பதால் டேங்கோ ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் வரும் நோக்கியா சாம்ப்னி மீது எதிர்பார்ப்பு மிகுந்துள்ளது.


Click it and Unblock the Notifications