ஆற்றல்வாய்ந்த பேட்டரியுடன் வரும் நோக்கியா ஸ்மார்ட்போன்கள்

Posted By: Staff

ஆற்றல்வாய்ந்த பேட்டரியுடன் வரும் நோக்கியா ஸ்மார்ட்போன்கள்
புத்தம் புதிய சி-5-05 மற்றும் சி-5-06 ஸ்மார்ட் மொபைல்களைக் களமிறக்க உள்ளது நோக்கியா நிறுவனம். இது நிச்சயம் வாடிக்கையாளர்களுக்கு இரட்டை சந்தோஷத்தை அளிக்கும் என்றும் எதிர் பார்க்கப்படுகிறது. இந்த இரண்டு மொபைல்களுமே சிம்பையான் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்குகிறது.

இந்த மொபைல்கள் 93 கிராம் இலகு எடை கொண்டது. அதோடு டிஎப்டி டச் ஸ்கிரீன் வசதி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு மொபைல்களும் 16 மில்லியன் கலர்களுக்கு சப்போர்ட் செய்கிறது. இந்த மொபைல்கள் 3.2 இஞ்ச் திரை வசதி கொண்டுள்ளதால் எதையும் தெளிவாகக் காண உதவும்.

2 மெகா பிக்ஸல் கேமராவும் இதில் கொடுக்கப்படுள்ளது. இதனால் சிறந்த துல்லியமான புகைப்படத்தையும், வீடியோவையும் பெற முடியும். வேகமாக இயங்க இதன் 600 எம்எச்இசட் பிராசஸர் சப்போர்ட் செய்கிறது. இந்த இரண்டு ஸ்மார்ட் மொபைல்களிலுமே வைபை, வெர்ஷன் 2.1 புளூடூத் போன்ற வசதிகள் உள்ளன.

யூஎஸ்பி வசதியும் இதனுடன் வழங்கப்பட்டுள்ளது. எல்ஐ-அயான் 1,000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. அதனால் 11 மணி நேரம் 30 நிமிடம் டாக் டைமும் மற்றும் 600 மணி நேரம் ஸ்டான்-பை டைமும் கொடுக்கிறது. ஸ்டீரியோ எப்எம் ரேடியோ வசதி உள்ளதால் பாடல்களை இனிமையாகக் கேட்டு மகிழ முடியும்.

16 ஜிபி வரை மெமரி வசதியும் உள்ளது. நோக்கியா சி-05-06 மற்றும் சி-05-06 ஸ்மார்ட் மொபைல்களின் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot