சிங்கிள் சார்ஜில் 3 நாள் பேட்டரி.. வருகிறது அசத்தலான Nokia போன்.! ரெடியா இருங்க..
எச்எம்டி குளோபல் நிறுவனம் கடந்த சில மாதங்களாக அசத்தலான நோக்கிய ஸ்மார்ட்போன்களை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது. குறிப்பாக இந்நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்களுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது என்றுதான் கூறவேண்டும். இந்நிலையில் மீண்டும் ஒரு அசத்தலான போனை அறிமுகம் செய்ய உள்ளது இந்நிறுவனம்.
அதாவது இணையத்தில் வெளிவந்த தகவலின்படி, வரும் மே 23-ம் தேதி இந்தியாவில் நோக்கியா சி32 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் எச்எம்டி குளோபல் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக எந்த தகவலையும் இதுவரை வெளியிடவில்லை. இருந்தபோதிலும் இந்த போன் விரைவில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. இப்போது ஆன்லைனில் வெளிவந்த நோக்கியா சி32 ஸ்மார்ட்போனின் அம்சங்களைப் பார்ப்போம்.

நோக்கியா சி32 ஸ்மார்ட்போன் ஆனது 6.5-இன்ச் ஐபிஎஸ் எச்டி எல்சிடி டிஸ்பிளே வசதியைக் கொண்டு வெளிவரும். பின்பு இந்த ஸ்மார்ட்போன் கடினமான 2.5d டிஸ்ப்ளே கிளாஸ், ஐபி 2 ஸ்பிளாஷ் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டென்ஸ்,பாலிகார்பனேட் யூனிபாடி மற்றும் பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகும்.
யுனிசாக் 9863A1 ப்ராசஸர் வசதியைக் கொண்டு இந்த நோக்கியா சி32 ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. பின்பு ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.
அதேபோல் 3ஜிபி வரை ரேம் மற்றும் 64ஜிபி ஸ்டோரேஜ் வசதியுடன் இந்த நோக்கியா சி32 ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன்.
50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான நோக்கியா ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் அருமையான புகைப்படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன். பின்பு எல்இடி பிளாஷ் மற்றும் பல கேமரா அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான நோக்கியா சி32 ஸ்மார்ட்போன்.

5000 எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது நோக்கியா சி32 ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் மூன்று நாட்களுக்கு பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு 10 வாட்ஸ் சார்ஜ் வசதி, கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் இந்த புத்தம் புதிய நோக்கியா சி32 ஸ்மார்ட்போன் அறிமுகமாகும்.
வைஃபை,ஜிபிஎஸ், 3.5எம்எம் ஆடியோ ஜாக், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த புத்தம் புதிய நோக்கியா சி32 ஸ்மார்ட்போன். குறிப்பாக இந்த நோக்கியா ஸ்மார்ட்போன் ரூ.9,999-விலையில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் இந்திய சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது நோக்கியா சி32 ஸ்மார்ட்போன்.
மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications








