Home
Mobile

ரூ.3,000 டிஸ்கவுண்ட்.. இப்போ ரூ.7,999 தான்.. ஆள் ஆளுக்கு ஆர்டர் போடும் NOKIA 4G போன்.. எந்த மாடல்?

ரூ.10,000 க்குள் மேல் என்கிற பட்ஜெட்டில் அறிமுகமான நோக்கியா நிறுவனத்தின் ஒரு 4ஜி ஸ்மார்ட்போன் (NOKIA 4G Smartphone) ஆனது தற்போது ரூ.10,000 க்குள் என்கிற பட்ஜெட்டில்.. இன்னும் குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் ரூ.8,000 க்குள் என்கிற பட்ஜெட்டின் கீழ் விற்பனை செய்யப்படுகிறது.

அது நோக்கியா சி32 4ஜி (NOKIA C32 4G) ஸ்மார்ட்போனாகும். தற்போது இது பிளிப்கார்ட் (Flipkart) வலைத்தளத்தில் 30%நேரடி தள்ளுபடியை பெற்று, அசல் விலையான ரூ.10,999 க்கு பதிலாக ரூ.7,999 க்கு வாங்க கிடைக்கிறது. இது நோக்கியா சி32 4ஜி ஸ்மார்ட்போனின் 4ஜிபி ரேம் + 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷனின் ஆபர் விலையாகும்.

ரூ.3,000 டிஸ்கவுண்ட்.. ஆள் ஆளுக்கு ஆர்டர் போடும் NOKIA 4G போன்!

இதே ஸ்மார்ட்போனின் 6ஜிபி ரேம் + 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ஆனது ரூ.8,499 என்கிற தள்ளுபடி விலையின் கீழ் வாங்க கிடைக்கிறது. ஒருவேளை உங்களுக்கு 4ஜிபி ரேம் போதாது என்று தோன்றினால், கூடுதலாக ரூ.1,500 செலவு செய்து 6ஜிபி ரேம் ஆப்ஷனை வாங்கலாம்.

நோக்கியா சி32 4ஜி ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்: வடிவமைப்பை பொறுத்தவரை இது ஐபி2 ஸ்பிளாஷ் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டென்ஸ் உடன் வருகிறது. கூடவே இது பாலிகார்பனேட் யூனிபாடி மற்றும் திடமான மெட்டல் சேஸையும் பெற்றுள்ளது. டிஸ்பிளேவை பொறுத்தவரை இது கடினமான 2.5டி டிஸ்பிளே கிளாஸ் உடனே 6.5 இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளேவை கொண்டுள்ளது.

சிப்செட்டை பொறுத்தவரை, நோக்கியா சி32 யுனிசாக் 9863ஏ1 ப்ராசஸர் மூலம் இயக்கப்படுகிறது. இது 6ஜிபி வரையிலான ரேம் மற்றும் 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. கேமராக்களை பொறுத்தவரை இது 50எம்பி மெயின் கேமரா + 2எம்பி மேக்ரோ கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது. முன்பக்கத்தில் 8எம்பி செல்பீ கேமரா உள்ளது.

பேட்டரியை பொறுத்தவரை நோக்கியா சி32 4ஜி ஸ்மார்ட்போன் ஆனது 10W சார்ஜிங்கிற்கான ஆதரவு உடனான 5000எம்ஏஎச் பேட்டரியை பேக் செய்கிறது. கவனிக்கப்பட வேண்டிய மற்ற அம்சங்களை பொறுத்தவரை, இது 4ஜி எல்டிஇ, ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் மற்றும் ஆண்ட்ராய்டு 13 (கோ எடிஷன்) ஆகியவைகளை கொண்டுள்ளது.

ஒருவேளை நீங்கள் நோக்கியா ஸ்மார்ட்போன்களுக்கு பதிலாக நோக்கியா ஃபீச்சர் மொபைல் போன்களை வாங்க விரும்பினால்.. கடந்த மாதம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட நோக்கியா 108 (NOKIA 108) மற்றும் நோக்கியா 125 (NOKIA 125) ஆகிய மாடல்களின் 2024 வெர்ஷன்களில் (2024 Versions) ஒன்றை வாங்கலாம். இவ்விரு மாடல்களுமே 4ஜி ஆதரவுடன் (4G Support) வருகின்றன என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

மற்ற முக்கிய அம்சங்களை பொறுத்தவரை இவ்விரு மாடல்களுமே வயர்டு மற்றும் வயர்லெஸ் மோட்களுடன் கூடிய எஃப்எம் ரேடியோ, எம்பி3 பிளேயர், கிளாசிக் ஸ்னேக் கேம், 2.0 இன்ச் டிஸ்பிளேவை கொண்டுள்ளன. முக்கியமான வேறுபாட்டை பொறுத்தவரை நோக்கியா 108 4ஜி 2024 மாடல் ஆனது 1450mAh பேட்டரியை கொண்டுள்ளது. அதேசமயம் நோக்கியா 125 4ஜி 2024 மாடலில் 1000mAh பேட்டரி பேக் செய்யப்பட்டுள்ளது

நோக்கியா 108 4ஜி மற்றும் நோக்கியா 125 4ஜி 2024 வெர்ஷன்களின் இந்திய விலை விவரங்கள்: தற்போது வரையிலாக இவ்விரு மாடல்களின் விலை விவரங்கள் அறிவிக்கப்படவில்லை. ஆனாலும் கூட 2 மாடல்களுமே எச்எம்டி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளன. நோக்கியா 108 4ஜி 2024 மாடல் ஆனது பிளாக் (Black) மற்றும் சியான் (Cyan) கலர்களிலும், அதே நேரத்தில் நோக்கியா 125 4ஜி 2024 மாடல் ஆனது ப்ளூ (Blue) மற்றும் டைட்டானியம் (Titanium) கலர்களிலும் பட்டியலிடப்பட்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Nokia C32 4G Smartphone With 5000mAh battery Selling At Rs 3000 Discount Price Rs 7999 in Flipkart
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X