இரண்டு புதிய போன்களை அறிமுகம் செய்து பெரிய தவறு செய்த Nokia.! ஏன், என்னாச்சு?
எச்எம்டி குளோபல் நிறுவனத்திற்குச் சொந்தமான நோக்கியா போன்களுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது. குறிப்பாக தனித்துவமான அம்சங்கள் மற்றும் அசத்தலான வடிவமைப்புடன் நோக்கியா போன்கள் வெளிவருகின்றன. எனவே தான் இந்நிறுவனத்தின் போன்கள் இந்தியாவில் அதிகளவில் விற்பனை செய்யப்படுகின்றன.
இந்நிலையில் இரண்டு புதிய நோக்கியா போன்களை அறிமுகம் செய்து பெரிய தவறு செய்துள்ளது எச்எம்டி குளோபல் நிறுவனம். அதாவது நோக்கியா சி110 மற்றும் நோக்கியா சி300 போன்களை தான் தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. முதலில் இந்த போன்களின் அம்சங்களைப் பார்ப்போம்.

நோக்கியா சி110 அம்சங்கள்: இப்போது அறிமுகம் செய்யப்பட்ட நோக்கியா சி110 போன் ஆனது 6.3-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது. பின்பு 720 x 1560 பிக்சல்ஸ், கடினமான 2.5d டிஸ்ப்ளே கிளாஸ், 400 நிட்ஸ் ப்ரைட்னஸ் போன்ற சில டிஸ்பிளே அம்சங்களை கொண்டுள்ளது இந்த போன்.
புதிய நோக்கியா சி110 ஸ்மார்ட்போன் ஆனது 2ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ பி22 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது. மேலும் 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி ஸ்டோரேஜ் ஆதரவுடன் இந்த நோக்கியா போன் வெளிவந்துள்ளது. பின்பு மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது. பின்பு இந்த போனில் ஆண்ட்ராய்டு 12 இயங்குதள வசதி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
எல்இடி பிளாஷ் ஆதரவு கொண்ட 13எம்பி ரியர் கேமரா வசதியைக் கொண்டுள்ளது இந்த நோக்கியா சி110 ஸ்மார்ட்போன். பின்பு 5எம்பி செல்பி கேமரா, 3000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 5 வாட்ஸ் சார்ஜிங் அதரவுகளை கொண்டு வெளிவந்துள்ளது இந்த போன். 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11, ப்ளூடூத் 5.0, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5 மிமீ ஹெட்ஃபோன் ஜாக் உள்ளிட்ட கனெக்டிவிட்டி ஆதரவுகளை கொண்டு இந்த போன் வெளிவந்துள்ளது.
நோக்கியா சி300 அம்சங்கள்: இப்போது அறிமுகம் செய்யப்பட்ட நோக்கியா சி300 போன் ஆனது 6.52-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது. பின்பு 720 x 1600 பிக்சல்ஸ், கடினமான 2.5D டிஸ்ப்ளே கிளாஸ், 450 நிட்ஸ் ப்ரைட்னஸ் போன்ற சில டிஸ்பிளே அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த போன்.
புதிய நோக்கியா சி300 ஸ்மார்ட்போன் ஆனது ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 662 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது. மேலும் 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி ஸ்டோரேஜ் ஆதரவுடன் இந்த நோக்கியா போன் வெளிவந்துள்ளது. பின்பு மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது. பின்பு இந்த போனில் ஆண்ட்ராய்டு 12 இயங்குதள வசதி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
13எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி டெப்த் கேமரா + 2எம்பி மேக்ரோ என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த நோக்கியா சி300போன். பின்பு 8எம்பி செல்பி கேமரா, 4000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 10வாட்ஸ் சார்ஜிங் ஆதரவுகளைக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த போன். 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11, ப்ளூடூத் 5.0, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5 மிமீ ஹெட்ஃபோன் ஜாக் உள்ளிட்ட கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டு இந்த போன் வெளிவந்துள்ளது.
என்ன விலை? தற்போது நோக்கியா சி300 மற்றும் நோக்கியா சி110 போன்கள் அமெரிக்காவில் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்த போன்கள் அனைத்து நாடுகளிலும் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. நோக்கியா சி110 போனின் விலை $99 (இந்திய மதிப்பில் ரூ.8,150). நோக்கியா சி300 போனின் விலை $139 (ரூ.11,440).

பெரிய தவறு: தற்போது பல முன்னணி நிறுவனங்கள் பட்ஜெட் விலையில் 5ஜி போன்களை அறிமுகம் செய்யத் தொடங்கிவிட்டன. ஆனால் தற்போது அறிமுகம் செய்யப்பட்ட நோக்கியா போன்கள் 4ஜி வசதியை மட்டுமே கொண்டு வெளிவந்துள்ளன. குறிப்பாக அனைத்து மக்களும் 5ஜி வசதி கொண்ட போன்களை தான் வாங்க அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.
அதேபோல் நோக்கியா சி300 மற்றும் நோக்கியா சி110 போன்களில் பாஸ்ட் சார்ஜிங் வசதியும் கிடையாது. இது மிகப் பெரிய குறை என்றுதான் கூறவேண்டும். மேலும் இந்த இரண்டு நோக்கியா போன்களிலும் செல்பி கேமராக்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. அதாவது 5எம்பி மற்றும் 8எம்பி செல்பி கேமராக்களுடன் இந்த போன்கள் வெளிவந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








