அட்டகாசமான நோக்கியா சி30 மற்றும் நோக்கியா 6310 சாதனங்கள் அறிமுகம்.!
எச்எம்டி குளோபல் நிறுவனம் தனது புதிய நோக்கியா சி30 மற்றும் நோக்கியா 6310 சாதனங்களை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த இரண்டு சாதனங்களும் தனித்துவமான அம்சங்களுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல்
நோக்கியா சி30 மற்றும் நோக்கியா 6310 மாடல்கள் தற்போது தேர்ந்தெடுக்கப்பட்ட சந்தைகளில் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நோக்கியா சி30
நோக்கியா சி30 ஸ்மார்ட்போன் ஆனது ஆண்ட்ராய்டு 11 கோ இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது. மேலும் அக்டோ-கோர் பிராசஸர் வசதியை அடிப்படையாக கொண்டு இந்த சாதனம் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.
நோக்கியா சி30 ஸ்மார்ட்போனில் 6.82-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் 720x1600பிக்சல் தீர்மானம், 20:9 என்ற திரைவிகிதம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இவற்றுள் அடக்கம். அதேபோல் 2ஜிபி/3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி/64ஜிபி உள்ளடக்க மெமரி வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன்.
நோக்கியா சி30 ஸ்மார்ட்போனின் பின்புறம் 13எம்பி மெயின் சென்சார் + 2எம்பி டெப்த் லென்ஸ் என மொத்தம் இரண்டு கேமராக்கள் இடம்பெற்றுள்ளன. பின்பு 5எம்பி செல்பீ கேமரா, 6000 எம்ஏஎச் பேட்டரி, 10 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உள்ளிட்ட பல்வேறு அம்சங்ளை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான நோக்கியா சி30 ஸ்மார்ட்போன்.
அதேபோல் நோக்கியா சி30 ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை (இந்திய மதிப்பில்) ரூ.8,690-ஆக உள்ளது. பின்பு பச்சை, மஞ்சள், கருப்பு, நீலம் போன்ற நிறங்களில் இந்த நோக்கியா சி30 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

நோக்கியா 6310
மேலும் எச்எம்டி குளோபல் நிறுவனம் நோக்கியா சி30 ஸ்மார்ட்போன் உடன் குட்டியான நோக்கியா 6310 மாடலையும் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த இந்த நோக்கியா 6310 மாடல் ஆனது 2.4-இன்ச் QVGA டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவந்துள்ளது. 240x320 பிக்சல் தீர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது நோக்கியா 6310.
இந்த நோக்கியா 6310 சாதனத்தில் Unisoc 6531F பிராசஸர் வசதி உள்ளது. பின்பு 8எம்பி ரேம் மற்றும் 16எம்பி மெமரி வசதியுடன் வெளிவந்துள்ளது இந்த அசத்தலான சாதனம். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த சாதனம். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது.
நோக்கியா 6310 மாடலில் டூயல் சிம் வசதி, Series 30+ இயங்குதளம்,03எம்பி விஜிஏ கேமரா, எல்இடி பிளாஸ், 1150 எம்ஏஎச் பேட்டரி உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் அடக்கம். அதேபோல் நோக்கியா 6310 மாடலின் விலை (இந்திய மதிப்பில்) ரூ.3510-ஆக உள்ளது.


Click it and Unblock the Notifications