Home
Mobile

ரூ.10,999-விலையில் அசத்தலான நோக்கியா சி30 ஸ்மார்ட்போன் அறிமுகம்.! முழு விவரம்.!

எச்எம்டி குளோபல் நிறுவனம் புதிய நோக்கியா சி30 ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. தனித்துவமான பிராசஸர் மற்றும் தரமான கேமரா வசதியுடன் பட்ஜெட் விலையில் வெளிவந்துள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன். இப்போது நோக்கியா சி30 ஸ்மார்ட்போனின் விலை மற்றும் விவரங்களைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.

நோக்கியா சி30

3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி மெமரி கொண்ட நோக்கியா சி30 ஸ்மார்ட்போனின் விலை ரூ.10,999-ஆக உள்ளது. பின்பு இதன் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட வேரியண்டின் விலை ரூ.11,999-ஆக உள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனை வாங்கும் ஜியோ வாடிக்கையாளர்களுக்கு குறிப்பிட்ட சலுகைகள் கிடைக்கும்.

இந்த நோக்கியா சி30

இந்த நோக்கியா சி30 ஸ்மார்ட்போனில் 6.82-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதி உள்ளது. மேலும் 1600x720 பிக்சல் தீர்மானம், 400 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த புதிய நோக்கியா சி30ஸ்மார்ட்போன்.

நோக்கியா சி30 ஸ்மார்ட்போனில் 1.6

நோக்கியா சி30 ஸ்மார்ட்போனில் 1.6 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் யுனிசாக்எஸ்.சி.9863ஏ பிராசஸர் வசதி உள்ளது. எனவே பயன்படுத்துவதற்கு அருமையாக இருக்கும். மேலும் ஆண்ட்ராய்டு 11 (Go edition) இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த புதிய நோக்கியா சி30 ஸ்மார்ட்போன். குறிப்பாக இதன் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது இந்நிறுவனம்.

நோக்கியா சி30 ஸ்மார்ட்போனில் 1.6

நோக்கியா சி30 ஸ்மார்ட்போனில் 1.6 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் யுனிசாக்எஸ்.சி.9863ஏ பிராசஸர் வசதி உள்ளது. எனவே பயன்படுத்துவதற்கு அருமையாக இருக்கும். மேலும் ஆண்ட்ராய்டு 11 (Go edition) இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த புதிய நோக்கியா சி30 ஸ்மார்ட்போன். குறிப்பாக இதன் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது இந்நிறுவனம்.

புதிய நோக்கியா சி30

புதிய நோக்கியா சி30 ஸ்மார்ட்போனின் பின்புறம் 13எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் இரண்டு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 5எம்பி செல்பீ கேமராவைக் கொண்டுள்ளது இந்த
புதிய நோக்கியா சி30 ஸ்மார்ட்போன்.

6000 எம்ஏஎச் பேட்டரி

இந்த புதிய நோக்கியா ஸ்மார்ட்போனில் 6000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 10 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி இடம்பெற்றள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் கிரீன் மற்றும் வைட் நிறங்களில் கிடைக்கிறது இந்த அட்டகாசமான நோக்கியா சி30 ஸ்மார்ட்போன்.

 சென்சார், 3.5 எம்.எம். ஆடியோ ஜாக்,

கைரேகை சென்சார், 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், எப்.எம். ரேடியோ, 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 4.2 உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த நோக்கியா சி30 ஸ்மார்ட்போன். அதேபோல் இந்த சாதனத்திற்கு இரண்டு ஆண்டுகளுக்கு செக்யூரிட்டி அப்டேட்கள் வழங்கப்பட்டுள்ளது.அதேபோல் எச்எம்டி குளோபல் நிறுவனம் விரைவில் பல்வேறு புதிய நோக்கியா ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்நிறுனம் அறிமுகம் விரைவில் செய்யும் புதிய ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அதிக வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Nokia C30 Launched in India: Specs, Features and More: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X