Home
Mobile

நோக்கிய C3: மலிவு விலையில் சூப்பர் போன் வாங்க நல்ல சான்ஸ்! விலை இவ்வளவு தானா?

நோக்கியா C3 ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சாதனத்திற்கான புதிய மார்க்கெட்டிங் விளம்பரம் ஆன்லைனில் வெளிவந்துள்ளது, இதன் மூலம் வரும் நாட்களில் எச்எம்டி குளோபல் நோக்கியா C3 மாடலை அறிமுகப்படுத்தக்கூடும் என்று தெரியவந்துள்ளது. இதன் எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் சிறப்பம்சங்களைப் பார்க்கலாம்.

நோக்கியா C3 பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன்

நோக்கியா C3 பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன்

நோக்கியா C3 பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் மாடலாக இந்த மாத தொடக்கத்தில் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து தற்பொழுது இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுவதற்கான தகவல்கள் வெளியாகி வருகிறது. NokiaPowerUser பக்கத்தில் சமீபத்திய நோக்கியா C3 போனின் விளம்பரம் பதிவிடப்பட்டுள்ளது. போஸ்டரில் ஒரு வருட மாற்று உத்தரவாதம் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் அறிமுகமாக வாய்ப்பு

இந்தியாவில் அறிமுகமாக வாய்ப்பு

நோக்கியா சி3 ஸ்மார்ட்போன் இந்தியாவில் ஆஃப்லைன் சந்தையில் வெளியிடப்படும் என்று இப்போது எதிர்பார்க்கப்படுகிறது. நோக்கியா நிறுவனம் ஏற்கனவே இந்தியாவில் நோக்கியா 5.3 ஸ்மார்ட்போனை வரும் ஆகஸ்ட் 25ம் தேதி வெளியிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நோக்கியா சி3 போன், நோக்கியா 5.3 ஸ்மார்ட்போனுடன் இந்தியாவில் அறிமுகமாக வாய்ப்பு அதிகம் உள்ளது.

நோக்கியா சி3 அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதி?

நோக்கியா சி3 அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதி?

இருப்பினும், இந்தியாவில் காணப்பட்ட விளம்பரத்தில் நோக்கியா சி 3 இன் அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதி எதுவம் குறிப்பிடப்படவில்லை. சீனாவில், நோக்கியா சி3 ஸ்மார்ட்போன், 3 ஜிபி + 32 ஜிபி வேரியண்ட் மாடல் வெறும் 699 யுவான் என்ற விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

எதிர்பார்க்கப்படும் விலை

எதிர்பார்க்கப்படும் விலை

இந்திய மதிப்பின்படி தோராயமாக ரூ .7,530 என்ற விலையில் நோக்கிய C3 அறிமுகமாகும். மேலும் இது நோர்டிக் ப்ளூ மற்றும் கோல்ட் சாண்ட் உள்ளிட்ட இரண்டு வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது.

நோக்கியா C3 சிறப்பம்சம்

நோக்கியா C3 சிறப்பம்சம்

  • 5.99' இன்ச் எச்டி பிளஸ் டிஸ்ப்ளே
  • 1.6GHz ஆக்டா கோர் யுனிசோக் SC9863A செயலி
  • IMG8322 GPU
  • ஆண்ட்ராய்டு 10
  • 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி ஸ்டோரேஜ் 400 ஜிபி வரை
  • மைக்ரோ எஸ்.டி கார்டு ஸ்லாட்
  • 8 மெகாபிக்சல் பின்புற கேமரா
  • எல்இடி ஃபிளாஷ்
  • 5 மெகாபிக்சல் செல்ஃபி ஷூட்டர்
  • கைரேகை சென்சார்
  • இரட்டை சிம்
  • மைக்ரோ யூ.எஸ்.பி போர்ட்
  • 3040 எம்ஏஎச் பேட்டரி

Best Mobiles in India

English summary
Nokia C3 to launch in India very soon, to be available with 1-Year replacement guarantee : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X