சிங்கிள் சார்ஜில் 3 நாள் பேட்டரி: ரூ.10,000-க்கு கீழ் புதிய போனை அறிமுகம் செய்யும் Nokia! அறிமுக தேதி இதுதான்!
எச்எம்டி குளோபல் நிறுவனம் தொடர்ந்து அசத்தலான ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது. குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் ஒவ்வொரு ஸ்மார்ட்போன்களுக்கும் இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளன. அதுவும் எச்எம்டி குளோபல் நிறுவனம் பட்ஜெட் விலையில் போன்களை அறிமுகம் செய்ய அதிக ஆர்வம் காட்டுகிறது.
இந்நிலையில் நோக்கியா சி22 என்ற ஸ்மார்ட்போனை நாளை (11-5-2023) அறிமுகம் செய்ய உள்ளது எச்எம்டி குளோபல் நிறுவனம். மேலும் இந்த நோக்கியா சி22 ஸ்மார்ட்போன் ஏற்கனவே ஐரோப்பாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தற்போது இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. மேலும் இப்போது இந்த புதிய போனின் சிறப்பு அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

அதாவது 6.5-இன்ச் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே வசதியுடன் வெளிவரும் இந்த நோக்கியா சி22 ஸ்மார்ட்போன். மேலும் 720×1600 பிக்சல்ஸ், கடினமான 2.5D டிஸ்ப்ளே கிளாஸ் மற்றும் பல சிறப்பான அம்சங்களுடன் இந்த போன் இந்தியாவில் அறிமுகமாகும். குறிப்பாக இந்த போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.
அதேபோல் 3ஜிபி வரை ரேம் மற்றும் 64ஜிபி ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான நோக்கியா சி22 ஸ்மார்ட்போன். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அசத்தலான நோக்கியா போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் கொண்டுள்ளது இந்த நோக்கியா சி22 ஸ்மார்ட்போன்.
யுனிசாக் 9863யு1 ஆக்டோ-கோர் ப்ராசஸர் வசதியைக் கொண்டுள்ளது இந்த நோக்கியா சி22 ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போனை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் ஆண்ட்ராய்டு 13 (கோ எடிஷன்) இயங்குதளத்தைக் கொண்டு இந்த புதிய நோக்கியா சி22 ஸ்மார்ட்போன் வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது.
13எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த நோக்கியா சி22 ஸ்மார்ட்போன். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவுடன் அறிமுகமாகும் இந்த நோக்கியா ஸ்மார்ட்போன். இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல கேமரா அம்சங்களை கொண்டுள்ளது இந்த நோக்கியா சி22 ஸ்மார்ட்போன்.

5000 எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது இந்த நோக்கியா சி22 ஸ்மார்ட்போன். எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் கிடைக்கும். பின்பு 10 வாட்ஸ் சார்ஜிங் வசதி, ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் இந்த போன் அறிமுகமாகும். மேலும் பாலிகார்பனேட் யூனிபாடி மற்றும் திடமான மெட்டல் சேஸ் உடன் இந்த நோக்கியா சி22 போன் அறிமுகமாகும்.
சர்கோல், பர்ப்பிள், சாண்ட் ஆகிய நிறங்களில் இந்த நோக்கியா சி22 ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். குறிப்பாக இந்த புதிய நோக்கியா ஸ்மார்ட்போன் இந்தியாவில் ரூ.10,000-க்கு கீழ் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்தியச் சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த நோக்கியா சி22 ஸ்மார்ட்போன்.


Click it and Unblock the Notifications








