அடிச்சான் பாரு Nokia.! ரூ.7,999-விலையில் அட்டகாசமான புதிய ஸ்மார்ட்போன் அறிமுகம்.!
எச்எம்டி குளோபல் நிறுவனம் அசத்தலான ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்து வருகிறது. குறிப்பாக தனித்துவமான வடிவமைப்பு மற்றும் சிறந்த மென்பொருள் வசதியுடன் நோக்கியா போன்கள் வெளிவருவதால் நல்ல வரவேற்பு உள்ளது. இந்நிலையில் புதிய நோக்கியா ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது எச்எம்டி குளோபல் நிறுவனம்.
அதாவது இந்தியாவில் நோக்கியா சி22 ஸ்மார்ட்போனை தான் எச்எம்டி குளோபல் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் குறைந்த விலையில் பல சிறப்பு அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. இப்போது இந்த புதிய ஸ்மார்ட்போனின் விலை மற்றும் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

6.5-இன்ச் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது இந்த நோக்கியா சி22 ஸ்மார்ட்போன். மேலும் 720×1600 பிக்சல்ஸ், கடினமான 2.5D டிஸ்ப்ளே கிளாஸ் மற்றும் பல சிறப்பான அம்சங்களுடன் இந்த போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.
ஸ்பிளாஸ் மற்றும் தூசி பாதுகாப்பு ஆதரவுக்கு என ஐபி52 சான்றிதழ் பெற்றிருக்கிறது இந்த நோக்கியா சி22 ஸ்மார்ட்போன்.. அதேபோல் 2ஜிபி/ 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான நோக்கியா சி22 ஸ்மார்ட்போன். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அசத்தலான நோக்கியா போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் கொண்டுள்ளது இந்த நோக்கியா சி22 ஸ்மார்ட்போன்.
யுனிசாக் SC9863A ஆக்டோ-கோர் ப்ராசஸர் வசதியைக் கொண்டுள்ளது இந்த நோக்கியா சி22 ஸ்மார்ட்போன். பின்பு இந்த போனில் ஐஎம்ஜி8322 ஜிபியு எனவே இந்த ஸ்மார்ட்போனை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் ஆண்ட்ராய்டு 13 (கோ எடிஷன்) இயங்குதளத்தைக் கொண்டு இந்த புதிய நோக்கியா சி22 ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
13எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த நோக்கியா சி22 ஸ்மார்ட்போன். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது இந்த நோக்கியா ஸ்மார்ட்போன். இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல கேமரா அம்சங்களை கொண்டுள்ளது இந்த நோக்கியா சி22 ஸ்மார்ட்போன்.

5000 எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது இந்த நோக்கியா சி22 ஸ்மார்ட்போன். எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் கிடைக்கும். பின்பு 10 வாட்ஸ் சார்ஜிங் வசதி, ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் இந்த போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் பாலிகார்பனேட் யூனிபாடி மற்றும் திடமான மெட்டல் சேஸ் உடன் இந்த நோக்கியா சி22 போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
சர்கோல், பர்ப்பிள், சாண்ட் ஆகிய நிறங்களில் இந்த நோக்கியா சி22 ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. 2ஜிபி ரேம் மற்றும் கொண்ட நோக்கியா சி22 ஸ்மார்ட்போனின் விலை ரூ.7,999-ஆக உள்ளது. பின்பு இதன் 4ஜிபி ரேம் கொண்ட வேரியண்டின் விலை ரூ.8,499-ஆக உள்ளது. தற்போது ஆஃப்லைன் கடைகள் மற்றும் நோக்கியா.காம் தளங்களில் இந்த புதிய போனை வாங்க முடியும். மேலும் இந்த போனுக்கு ஜியோ நிறுவனம் சார்பில் சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








