ரூ.8,999 விலையில் நோக்கியா சி20 பிளஸ் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்.! என்னென்ன அம்சங்கள்.!
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நோக்கியா சி20 பிளஸ் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த சாதனம் ஆகஸ்ட் 9-ம் தேதி(இன்று) முதல் நோக்கியா இந்தியா இணையதளம் மற்றும் ரிலையன்ஸ் டிஜிட்டல் உள்ளிட்ட சில தளங்களில் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி மெமரி கொண்ட நோக்கியா சி3 பிளஸ் ஸ்மார்ட்போனின் விலை ரூ.8,999-ஆக உள்ளது. பின்பு 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி மெமரி கொண்ட நோக்கியா சி3 பிளஸ் மாடலின் விலை ரூ.9,999-ஆக உள்ளது. குறிப்பாக இந்த சாதனம் நீலம் மற்றும் சாம்பல் நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

நோக்கியா சி20 பிளஸ் ஸ்மார்ட்போனில் 4950 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. ஆன்லைனில் படிக்கும் மாணவர்கள் இந்த சாதனத்தை தேர்வு செய்வது நல்லது. நீண்ட நேரம் சார்ஜ் குறையாமல் இந்த சாதனத்தை பயன்படுத் முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 10 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த புதிய சாதனம்.

நோக்கியா சி20 பிளஸ் ஸ்மார்ட்போனின் பின்பு 8எம்பி பிரைமரி சென்சார் + 2எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் இரண்டு கேமராக்கள் இடம்பெற்றுள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 5எம்பி செல்பீ கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது
இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல்.

நோக்கியா சி20 பிளஸ் ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் Unisoc SC9863a சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது. மேலும்ஆண்ட்ராய்டு 11 (Go edition) இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த புதிய ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. எனவேபயன்படுத்துவதற்கு அருமையாக இருக்கும்.

நோக்கியா சி20 பிளஸ் சாதனத்தின் 2ஜிபி/3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி வசதி உள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் வெளிவந்துள்ளது இந்த நோக்கியா சி20 பிளஸ் சாதனம். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது.

4ஜி எல்டிஇ, வைஃபை 802.11,ப்ளூடூத் வி4.1, ஜிபிஎஸ்/ஏஜிபிஎஸ், எஃப்எம் ரேடியோ, மைக்ரோ-யுஎஸ்பி,3.5 மிமீ ஹெட்போன் ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த நோக்கியா சி20 பிளஸ் சாதனம். மேலும் இந்த புதிய நோக்கியா சி20 பிளஸ் ஸ்மார்ட்போனுக்கு ஜியோ நிறுவனம் சார்பில் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன.குறிப்பாக இந்த சாதனம் இந்தியாவில் அதிகளவு விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications