நோக்கியாவின் சி2-03 டியூவல் சிம்கார்டு மொபைல்போன்-சிறப்பு பார்வை

Posted By: Staff

நோக்கியாவின் சி2-03 டியூவல் சிம்கார்டு மொபைல்போன்-சிறப்பு பார்வை
மொபைல்போன் என்றாலே நோக்கியாதான் என்ற காலம் இருந்தது. ஆனால், தற்போது டியூவல் சிம் கார்டு வசதி என்ற அஸ்திரத்தை எடுத்துக்கொண்டு மைக்ரோமேக்ஸ், மேக்ஸ், ப்ளை, ஸ்பைஸ் என பல புதிய நிறுவனங்கள் சந்தையில் தற்போது பங்குபோட்டுக்கொண்டுள்ளன.

ஒற்றை சிம் கார்டு கொண்ட மொபைல்போனில் ஜாம்பவனான நோக்கியா வசம் சந்தையில் போட்டி போடும் அளவுக்கு பட்ஜெட் விலைகொண்ட மொபைல்போன் கையிலிருக்கவில்லை.

வாடிக்கையாளர் திருப்திக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நிறுவனம் என்பதால், டியூவல் சிம் கார்டு கொண்ட தரமிக்க மொபைல்போனை அறிமுகம் செய்ய அந்த நிறுவனம் கொஞ்சம் தாமதம் எடுத்துக்கொண்டது.

இந்த நிலையில், வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புக்கு தகுந்தவாறு ஒரு தரமிக்க டியூவல் சிம் கார்டு வசதி கொண்ட நோக்கியா. சி2-03 என்ற மொபைல்போனை பொறுப்புடன் களமிறக்கியுள்ளது நோக்கியா.

ஸ்லைடர் வகையை சேர்ந்த இந்த போனில் தொடுதிரை(டச் ஸ்கிரீன்) மற்றும் கீபேடில் டைப் செய்யும் வசதியும் இருக்கிறது. அதிநவீன தொழில்நுட்பம் கொண்ட மல்டிமீடி.யா அப்லோடு செய்யப்பட்டுள்ளதால், எம்பி3, எம்பி4,, டபிள்யூஎம்வீ, டபிள்யூஏவீ மற்றும் ஏஏசி+ என எந்தவொரு மல்டிமீடியா பார்மெட்டுகளையும் இயக்க முடிகிறது..

சக்திவாய்ந்த கேமரா மூலம் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை துல்லியமாக பதிவு செய்ய முடிகிறது.

இதில், 32 ஜிபி வரை எக்ஸ்டன்டபிள் மெமரி கார்டையும் பொருத்திக்கொள்ள தனி ஸ்லாட் உள்ளது.

இது டியூவல் சிம் கார்டுகொண்ட மொபைல்போன் என்றாலும், 5 சிம்கார்டுகளுக்கான செட்டிங்சை இதில் ஒரே நேரத்தில் பதிவு செய்து வைக்க முடியும்.

இதன் பேட்டரி பேக்கப்பும் பிரமாதமாக உள்ளது. இதில், 35 மணிவரை தொடர்ச்சியாக எம்பி3 பிளேயரை இயக்கமுடியும் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

3.5மிமீ கொண்ட ஆடியோ ஸ்லாட், 3ஜி மற்றும் புளூடூத் வசதிகளும் உள்ளதால் கண்ணை மூடிக்கொண்டு நோக்கியா சி2-03யை தேர்வு செய்யலாம். இது நோக்கியாவின் 40 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்குகிறது.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot