ரூ.5999-க்கு புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்து அதிரடி காட்டிய Nokia.! முழு விவரம்.!
எச்எம்டி குளோபல் நிறுவனம் புதிய நோக்கியா சி12 ஸ்மார்ட்போன் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த போன் ஏற்கனவே சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த புதிய நோக்கியா சி12 ஸ்மார்ட்போன் கம்மி விலையில் தனித்துவமான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது.
நோக்கியா சி12 அம்சங்கள்
இப்போது முதலில் இந்த நோக்கியா சி12 ஸ்மார்ட்போனின் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம். அதாவது நோக்கியா சி12 ஸ்மார்ட்போன் ஆனது 6.3-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது. மேலும் 1600 × 720 பிக்சல்ஸ், 20:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாகக் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

புதிய நோக்கியா சி12 ஸ்மார்ட்போன் ஆனது Unisoc 9863A1 SoC சிப்செட் வசதியை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். பின்பு ஆண்ட்ராய்டு 12 (கோ எடிஷன்) இயங்குதள வசதியைக் கொண்டுள்ளது இந்த புத்தம் புதிய ஸ்மார்ட்போன் மாடல்.
2ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த நோக்கியா சி12 ஸ்மார்ட்போன். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இதில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது. அதேபோல் இந்த போனின் வடிவமைப்பு கூட மிகவும் அருமையாக உள்ளது.

8எம்பி ரியர் கேமரா மற்றும் 5எம்பி செல்பி கேமரா வசதியைக் கொண்டுள்ளது புதிய நோக்கியா சி12 ஸ்மார்ட்போன் மாடல். பின்பு எல்இடி பிளாஷ் வசதியும் இதில் உள்ளது. ஆனால் இந்த போனில் 8எம்பி ரியர் கேமராவுக்கு பதிலாக 13எம்பி கேமரா கொடுத்திருந்தால் இன்னும் அருமையாக இருந்திருக்கும்.
3000 எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது இந்த நோக்கியா சி12 ஸ்மார்ட்போன் மாடல். எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் கிடைக்கும். பின்பு 5 வாட்ஸ் சார்ஜிங் வசதியைக் கொண்டு இந்த போன் வெளிவந்துள்ளது. ஆனால் இந்த போனில் கைரேகை ஸ்கேனர் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
4ஜி வோல்ட்இ, வைஃபை, ப்ளூடூத் 5.2, ஜிபிஎஸ், டூயல் சிம், 3.5எம்எம் ஆடியோ ஜாக், மைக்ரோ யுஎஸ்பி போர்ட் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த நோக்கியா சி12 ஸ்மார்ட்போன் மாடல். அதேபோல் டார்க் சியான், Charcoal மற்றும் லைட் மிண்ட் நிறங்களில் இந்த புதிய நோக்கியா ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

நோக்கியா சி12 விலை
2ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட நோக்கியா சி12 ஸ்மார்ட்போன் வரும் மார்ச் 17-ம் தேதி அமேசான் தளத்தில் விற்பனைக்கு வரும். குறிப்பாக இந்த போனின் உண்மை விலை ரூ.7,499-ஆக உள்ளது. ஆனால் அறிமுக சலுகையாக ரூ.5,999-விலையில் இந்த நோக்கியா சி12 ஸ்மார்ட்போன் மாடலை வாங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக ரூ.5999 விலையில் பெரிய டிஸ்பிளே,அருமையான சிப்செட், சிறந்த பேட்டரி உள்ளிட்ட பல்வேறு வசதியை வழங்குகிறது இந்த நோக்கியா சி12 ஸ்மார்ட்போன். மேலும் இந்த ஆண்டு எச்எம்டி குளோபல் நிறுவனம் 5ஜி ஸ்மார்ட்போன்களை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக தற்போது இந்தியாவில் 5ஜி போன்களுக்கு அதிக வரவேற்பு உள்ளது.


Click it and Unblock the Notifications








