Home
Mobile

ஆளுக்கொரு போன் பார்சல்.. 6ஜிபி ரேம்.. 6.3-இன்ச் டிஸ்பிளே.. அசத்தலான Nokia போனுக்கு விலை குறைப்பு..

நோக்கியா நிறுவனம் இந்த ஆண்டு இறுதியில் பல அசத்தலான 5ஜி ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது. அதேபோல் கேமரா பகுதிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது நோக்கியா நிறுவனம். எனவே வரும் மாதங்களில் 200எம்பி கேமரா கொண்ட ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகமாக அதிக வாய்ப்புகள் உள்ளன.

குறிப்பாக நோக்கியா நிறுவனம் பட்ஜெட் விலையில் தான் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்கின்றன. எனவே தான் இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் ஒவ்வொரு ஸ்மார்ட்போனுக்கும் இந்தியாவில் அதிக வரவேற்பு உள்ளது. இந்நிலையில் பிரபலமான நோக்கியா ஸ்மார்ட்போனுக்கு தற்போது அமேசானில் விலை குறைக்கப்பட்டுள்ளது.

அசத்தலான Nokia போனுக்கு விலை குறைப்பு..

அதாவது நோக்கியா சி12 ப்ரோ (Nokia C12 Pro) ஸ்மார்ட்போனுக்கு தான் அமேசான் (Amazon) தளத்தில் விலை குறைக்கப்பட்டுள்ளது. அதாவது 6ஜிபி ரேம் கொண்ட இந்த நோக்கியா சி12 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது முன்பு ரூ.9,199-விலையில் விற்பனை செய்யப்பட்டது. ஆனால் தற்போது இந்த போனுக்கு 21 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.

எனவே இந்த நோக்கியா சி12 ப்ரோ ஸ்மார்ட்போனை ரூ.7,299-விலையில் வாங்க முடியும். இதுதவிர தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால் ரூ.1750 வரை உடனடி தள்ளுபடி கிடைக்கும். மேலும் இந்த ஸ்மார்ட்போனின் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

அதாவது இந்த நோக்கியா சி12 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது 6.3-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. பின்பு 720x1600 பிக்சல்ஸ், 20:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாகக் கொண்டு இந்த நோக்கியா போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக பெரிய டிஸ்பிளேவுடன் இந்த போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

இந்த நோக்கியா சி12 ப்ரோ ஸ்மார்ட்போனில் மிகவும் சக்திவாய்ந்த ஆக்டோ-கோர் Unisoc SC9863A1 சிப்செட் வசதி உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட செயல்திறன் வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த நோக்கியா சி12 ப்ரோ போனில் ஆண்ட்ராய்டு 12 கோ எடிஷன் இயங்குதள வசதி இடம்பெற்றுள்ளது.

அதேபோல் இந்த நோக்கியா சி12 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது 6ஜிபி ரேம் (4ஜிபி ரேம் + 2ஜிபி விர்ச்சுவல் ரேம்) மற்றும் 64ஜிபி ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த நோக்கியா சி12 ப்ரோ ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு உள்ளது.

நோக்கியா சி12 ப்ரோ ஸ்மார்ட்போனில் எல்இடி பிளாஸ் ஆதரவு கொண்ட 8எம்பி ரியர் கேமரா வசதி உள்ளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 5எம்பி கேமராவைக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த நோக்கியா போன். ஆனால் இந்த போனில் கேமரா வசதிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கவில்லை நோக்கியா நிறுவனம். 8எம்பி ரியர் கேமராவுக்கு பதில் 13எம்பி கேமராவுடன் இந்த போன் வெளிவந்திருந்தால் இன்னும் அருமையாக இருந்திருக்கும்.

அசத்தலான Nokia போனுக்கு விலை குறைப்பு..

4000 எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது இந்த புதிய நோக்கியா சி12 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல். எனவே இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு 10 வாட்ஸ் சார்ஜிங் வசதியைக் கொண்டுள்ளது வெளிவந்துள்ளது இந்த நோக்கியா சாதனம். குறிப்பாக இந்த போனுக்கு இரண்டு வருட பாதுகாப்பு அப்டேட்களை கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

4ஜி, வைஃபை, யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த நோக்கியா சி12 ப்ரோ ஸ்மார்ட்போன். டார்க் சியான், சர்க்கோல் மற்றும் லைட் மிண்ட் நிறங்களில் இந்த நோக்கியா சி12 ப்ரோ போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Nokia C12 Pro with 6GB RAM available at 21 percent discount on Amazon: check full details here : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X