Home
Mobile

லோகோ எல்லாம் புதுசு புதுசா மாத்துறீங்க.. ஆனா போனை மாத்த முடியலையா? அறிமுகமானது புதிய Nokia மாடல்..

எச்எம்டி குளோபல் நிறுவனம் அண்மையில் புதிய நோக்கியா லோகோவை வெளியிட்டது. குறிப்பாக இந்த லோகோ அருமையாகத் தான் உள்ளது. ஆனால் திரும்பத் திரும்ப பழைய போன் மாடல்களை புதிய நிறங்களில் அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது நோக்கியா.

குறிப்பாக ஒன்பிளஸ், சியோமி, விவோ, மோட்டோ உள்ளிட்ட நிறுவனங்கள் புதிய வடிவமைப்புகளுடன் போன்களை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது. ஆனால் நோக்கியா மட்டும் ஒரே மாதிரியான போன்களையே அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்ட நோக்கியா சி12 ப்ரோ மாடல் ஆனது தற்போது புதிய நிறத்தில் வெளிவந்துள்ளது.

லோகோ எல்லாம் புதுசு புதுசா மாத்துறீங்க.. ஆனா போனை மாத்த முடியலையா?

அதாவது இந்தியாவில் என்ட்ரி லெவல் நோக்கியா சி12 ப்ரோ ஸ்மார்ட்போனின் புதிய நிற வேரியண்ட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முன்பு இந்த போனின் டீசர் மட்டும் வெளியான நிலையில், தற்போது இந்த போனின் விலை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அதேபோல் நோக்கியா சி12 ப்ரோ போன்று பல மாடல்கள் வெளிவந்துள்ளன. இந்த போன்களின் வடிவமைப்பு கிட்டத்தட்ட ஒரே மாதிரியாகத் தான் உள்ளது.

அதன்படி தற்போது என்ட்ரி லெவல் நோக்கியா சி12 ப்ரோ ஆனது பர்ப்பிள் கலரில் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக 2ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட நோக்கியா சி12 ப்ரோ போனின் விலை ரூ.6,999-ஆக உள்ளது. பின்பு இதன் 4ஜிபி ரேம் கொண்ட வேரியண்ட் ரூ.7,499-ஆக உள்ளது. குறிப்பாக நோக்கியா சி12 ப்ரோ மாடலின் புதிய பர்ப்பிள் கலர் வேரியண்ட் விற்பனை விரைவில் துவங்க உள்ளது. இப்போது இந்த போனின் சிறப்பு அம்சங்களைப் பார்ப்போம்.

லோகோ எல்லாம் புதுசு புதுசா மாத்துறீங்க.. ஆனா போனை மாத்த முடியலையா?

நோக்கியா சி12 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது 6.3-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. பின்பு 720x1600 பிக்சல்ஸ், 20:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாகக் கொண்டு இந்த நோக்கியா போன் வெளிவந்துள்ளது. பெரிய டிஸ்பிளே என்பதால் இதைப் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

அதேபோல் இந்த நோக்கியா சி12 ப்ரோ ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் Unisoc SC9863A1 சிப்செட் வசதி உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் இந்த புதிய போனில் ஆண்ட்ராய்டு 12 கோ எடிஷன் இயங்குதள வசதி இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நோக்கியா சி12 ப்ரோ ஸ்மார்ட்போன் 2ஜிபி/4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி ஸ்டோரேஜ் வசதியுடன் வெளிவந்துள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது.

லோகோ எல்லாம் புதுசு புதுசா மாத்துறீங்க.. ஆனா போனை மாத்த முடியலையா?

நோக்கியா சி12 ப்ரோ ஸ்மார்ட்போனில் எல்இடி பிளாஸ் ஆதரவு கொண்ட 8எம்பி ரியர் கேமரா வசதி உள்ளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 5எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். ஆனால் இந்த போனில் 8எம்பி ரியர் கேமராவுக்கு பதிலாக 13எம்பி கேமரா இடம்பெற்றிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.

4000 எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டு வெளிவந்துள்ளது
இந்த நோக்கியா சி12 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல். எனவே இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு 10 வாட்ஸ் சார்ஜிங் வசதியைக் கொண்டுள்ளது இந்த நோக்கியா ஸ்மார்ட்போன்.அதேபோல் வைஃபை, 4ஜி, யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த நோக்கியா சி12 ப்ரோ.

Best Mobiles in India

English summary
Nokia c12 pro purple color variant launched in india:Check Price, Specifications : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X