ரூ.6000 விலையில் நோக்கியா ஸ்மார்ட்போனா?- அட்டகாச அம்சங்களோடு நோக்கியா சி1 ப்ளஸ் ஸ்மார்ட்போன்!

|

நோக்கியாவின் நுழைவு நிலை ஸ்மார்ட்போன்களுக்கு வாடிக்கையாளர்களிடம் எப்போதுமே வரவேற்பு இருக்கும். இந்த நிலையில் நோக்கியா மற்றொரு நுழைவு நிலை ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.

நோக்கியா ஸ்மார்ட்போன்கள்

நோக்கியா ஸ்மார்ட்போன்கள்

நோக்கியா மீண்டும் ஸ்மார்ட்போன்கள் சந்தையை ஆக்கிரமிக்கும் நோக்கில் பலவகை ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. இதில் ப்ரீமியம் ரகத்தில் தொடங்கி பட்ஜெட் விலை மலிவு விலை என பல ரகத்தில் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகின்றன.

நோக்கியா சி1 ப்ளஸ் 4ஜி ஸ்மார்ட்போன்

நோக்கியா சி1 ப்ளஸ் 4ஜி ஸ்மார்ட்போன்

அதன்படி தற்போது நோக்கியா நிறுவனம் நோக்கியா சி1 ப்ளஸ் 4ஜி நுழைவு நிலை ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது. நோக்கியா அறிமுகம் செய்த நோக்கியா சி1 ப்ளஸ் ஸ்மார்ட்போன் இந்த மாத இறுதியில் விற்பனைக்கு வரும் என எச்எம்டி குளோபல் தெரிவித்துள்ளது.

மலிவு விலையில் விற்பனைக்கு வரும்

மலிவு விலையில் விற்பனைக்கு வரும்

நோக்கியா சி1 ப்ளஸ் 4ஜி ஸ்மார்ட்போன் மலிவு விலையில் விற்பனைக்கு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் இந்திய விலை தோராயமாக ரூ.6000 என இருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் சிவப்பு மற்றும் ப்ளூ வண்ண விருப்பங்களில் கிடைக்கும். இந்த மலிவு விலை ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மீண்டும் எச்சரிக்கை: அடுத்த 4 முதல் 6 மாதங்களில் பாதிப்பு மிக பயங்கரமா இருக்கும்- பில் கேட்ஸ்மீண்டும் எச்சரிக்கை: அடுத்த 4 முதல் 6 மாதங்களில் பாதிப்பு மிக பயங்கரமா இருக்கும்- பில் கேட்ஸ்

நோக்கியா சி1 ப்ளஸ் அம்சங்கள்

நோக்கியா சி1 ப்ளஸ் அம்சங்கள்

நோக்கியா சி2 ஸ்மார்ட்போனின் வாரிசாக நோக்கிய சி1 ப்ளஸ் இருக்கும். இந்த ஸ்மார்ட்போன் விலை மலிவு என்றாலும் இதன் மென்பொருள் அட்டகாசமாகவே இருக்கிறது. நோக்கியா சி1 பிளஸ் 4ஜி ஸ்மார்ட்போனின் அம்சங்கள் குறித்து பார்க்கலாம். நோக்கியா சி1 பிளஸ் 4ஜி ஸ்மார்ட்போனில் 5.45 இன்ச் எச்டி ப்ளஸ் டிஸ்ப்ளே, இதில் ஆல்ரவுண்ட் திட பாலிகார்பனேட் அமைப்பு இருக்கிறது. இதன்மூலம் சாதனத்தின் பாதுகாப்பு அதிகரிக்கப்படும். இந்த பாதுகாப்பு அம்சத்தை நிறுவனம் 50 முறை சோதனை செய்ததாக கூறப்படுகிறது.

ஆண்ட்ராய்டு 10 ஆதரவு

ஆண்ட்ராய்டு 10 ஆதரவு

இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 10 கோ மூலம் இயக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் மெமரி நீட்டிப்பு ஆதரவுக்கு மைக்ரோ எஸ்டிகார்டு ஸ்லாட் வசதி இருக்கிறது. இதில் 5 எம்பி பின்புற கேமரா இருக்கிறது. அதேபோல் முன்புறத்தில் 5 எம்பி செல்பி கேமரா, ஃபிளாஷ் வசதியுடன் கிடைக்கும் என கூறப்படுகிறது.

2500 எம்ஏஎச் பேட்டரி ஆதரவு

2500 எம்ஏஎச் பேட்டரி ஆதரவு

நோக்கியா சி1 பிளஸ் ஸ்மார்ட்போனில் 2500 எம்ஏஎச் பேட்டரி இருக்கிறது. இதன் ஆயுள் ஒரு நாள் முழுவதும் நீடிக்கும் என கூறப்படுகிறது. இதில் 1 ஜிபி ரேம் மற்றும் 16 ஜிபி உள்சேமிப்பு வசதி இருக்கிறது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Nokia C1 Plus Smartphone Launched With 2500 mAh Battery, 16gb Storage

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X