ரூ.8000-த்துக்கு கீழ்: 8 எம்பி கேமரா, கைரேகை சென்சார் உள்ளிட்ட அட்டகாச அம்சங்கள்!

|

நோக்கியா சி 3 ஸ்மார்ட்போன் பக்கா பட்ஜெட் விலையில் 8 எம்பி கேமரா கைரேகை சென்சார் உள்ளிட்ட அட்டகாச அம்சங்களோடு விற்பனைக்கு வருகிறது.

ஹெச்எம்டி குளோபல் நோக்கியா

ஹெச்எம்டி குளோபல் நோக்கியா

ஹெச்எம்டி குளோபல் நோக்கியா பிராண்டின் தயாரிப்பு உரிமத்தை பெற்றுள்ள நிறுவனமாகும். இந்த நிறுவனம் சமீபத்தில் நுழைவு நிலை ஸ்மார்ட்போனான நோக்கிய சி3-ஐ சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 10 ஓஎஸ் ஆதரவோடு பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்துள்ளது.

நுழைவு நிலை ஸ்மார்ட்போன்

நுழைவு நிலை ஸ்மார்ட்போன்

இந்த சி தொடரின் நுழைவு நிலை ஸ்மார்ட்போன் இதுவாகும். இது ஒற்றை கேமரா உள்ளிட்ட அமைப்புகளை கொண்டுள்ளது. இது தடிமன் பெசல்களுடன் பழைய வடிவமைப்பு ஆக்டோ கோர் பஞ்ச் ஹோல் கொண்ட இந்த நோக்கிய சி3 விலையானது 699 யுவான் அதாவது தோராயமாக ரூ.7,530 என்ற விலையில் இருக்கலாம். இந்த ஸ்மார்ட்போனானது நோர்டிக் ப்ளூ மற்றும் கோல்ட் சாண்ட் ஆகிய இரண்ட வண்ண விருப்பங்களில் உள்ளது.

நோக்கிய சி3 சிறப்பம்சங்கள்

நோக்கிய சி3 சிறப்பம்சங்கள்

நோக்கியா சி3 5.99 இன்ச் ஹெச்டி ப்ளஸ் டிஸ்ப்ளே 1440 x 720 பிக்சல்களுடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போனில் டூயல் சிம் மற்றும் சேமிப்பக விரிவாக்கத்துடன் வருகிறது. இதில் மேப் பயன்பாட்டை விரைவாக பயன்படுத்தும் வகையில் பட்டன் ஒன்று பொருத்தப்பட்டுள்ளது.

1.6GHz ஆக்டா கோர்

1.6GHz ஆக்டா கோர்

ஸ்மார்ட்போன் 1.6GHz ஆக்டா கோர் UniSoC SC9863A செயலி மூலம் இயக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 3ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி சேமிப்பு வசதியோடு இது வருகிறது. மேலும் மைக்ரோ எஸ்டி கார்ட் உள்ளிட்ட அம்சங்களோடு நோர்டிக் ப்ளூ மற்றும் கோல்ட் சாண்ட் வண்ண விருப்பங்களில் கிடைக்கும். இதில் உள்ள எஸ்டி கார்ட் ஸ்லாட் 400 ஜிபி வரை விரிவாக்கக் கூடியது.

8 மெகாபிக்சல் பிரதான கேமரா

8 மெகாபிக்சல் பிரதான கேமரா

கேமரா பிரிவை பொருத்தவரை 8 மெகாபிக்சல் பிரதான கேமரா மற்றும் 5 மெகாபிக்சல் செல்பி ஷூட்டர் வசதியோடு உள்ளது. அதுமட்டுமின்றி பின்புறத்தில் கைரேகை சென்சார் வசதியோடு வருகிறது.

3040 எம்ஏஹெச் பேட்டரி

3040 எம்ஏஹெச் பேட்டரி

மேலும் இந்த ஸ்மார்ட்போனில் 3040 எம்ஏஹெச் பேட்டரி 4G VoLTE, Wi-Fi 802.11 b / g / n, புளூடூத் 4.2, GPS, GLONASS, இரட்டை சிம் மற்றும் மைக்ரோ யூ.எஸ்.பி போர்டலுடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் சீனாவில் முன்பதிவுக்கு கிடைக்கிறது மேலும் ஆகஸ்ட் 13 விற்பனைக்கு வரும் என தெரிகிறது.

Best Mobiles in India

English summary
Nokia Budget Smartphone Launch with Finger Print sensor, 8 Mp Camera and More

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X