Home
Mobile

NOKIA பிராண்டிங் காலி.. மேலும் 3 புது HMD போன்கள்.. Tomcat, Nighthawk, Fusion.. என்ன விலை? என்னென்ன அம்சங்கள்?

நோக்கியா பிராண்டட் (NOKIA Branded) மொபைல் போன்களை தயாரிக்கும் உரிமத்தை பெற்ற எச்எம்டி க்ளோபல் (HMD Global) நிறுவனமானது ஆரம்பத்தில் நோக்கியா பிராண்டிங்கின் கீழேயே தான்.. புதிய பீச்சர் மொபைல் போன்கள் (Feature Mobile Phones) மற்றும் ஸ்மார்ட்போன்களை (Smartphones) அறிமுகம் செய்து வந்தது. அதாவது நோக்கியா என்கிற பிரபலமான பெயருக்கு பின்னால் இருந்து கொண்டு செயலாற்றி வந்தது. ஆனால் திடீரென அந்நிறுவனத்திற்கு என்ன தோன்றியதோ தெரியவில்லை.. எச்எம்டி என்கிற பிராண்டிங்கின் (HMD Branding) கீழ் தனது சொந்த ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது.

எச்எம்டி நிறுவனத்தின் என்ட்ரி-லெவல் ஸ்மார்ட்போன்களாக எச்எம்டி பல்ஸ் (HMD Pulse) மற்றும் பல்ஸ் ப்ரோ (HMD Pulse Pro) மற்றும் மிகவும் மலிவு விலையிலான எச்எம்டி ஆரா (HMD Aura) ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகின. இம்மூன்று ஸ்மார்ட்போன்களுமே முன்னதாக வெளியான நோக்கியா-பிராண்டட் ஸ்மார்ட்போன்களின் டிசைனை அப்படியே காப்பி அடித்துள்ளன என்றே கூறலாம்.

NOKIA பிராண்டிங் காலி.. மேலும் 3 புது HMD போன்கள்!

நோக்கியா ரசிகர்களை பொறுத்தவரை.. எச்எம்டி க்ளோபல் நிறுவனத்தின் இந்த நடவடிக்கை, நோக்கியா பிராண்டிங்கை காணாமல் அடிக்கபோவதற்கான முதற்கட்ட நடவடிக்கையாகவே பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் எச்எம்டி க்ளோபல் நிறுவனமானது "மிட்-ரேன்ஜ் விலைப்பிரிவின் கீழ்" மேலும் 3 புதிய எச்எம்டி பிராண்டட் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யவுள்ளது என்கிற தகவல் வெளியாகியுள்ளது.

எச்எம்டி மீம்ஸ் (HMD MEME'S) என்கிற எக்ஸ் அக்கவுண்ட் ஆனது எச்எம்டி நிறுவனமானது 3 புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யவுள்ளது என்கிற தகவலோடு சேர்த்து, குறிப்பிட்ட 3 மாடல்களின் குறியீட்டு பெயர்கள் (Codenames), முக்கிய அம்சங்கள் மற்றும் விலை விவரங்களையும் வெளிப்படுத்தி உள்ளது

1. எச்எம்டி டாம்கேட் (HMD Tomcat): இது 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், பியூர் டிஸ்பிளே எச்டிஆர் 10 பிளஸ் உடனான அமோஎல்இடி எஃப்எச்டி பிளஸ் டிஸ்பிளேவை கொண்டிருக்கும். மேலும் இது ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 2 சிப்செட் மூலம் இயக்கப்படும். கேமராக்களை பொறுத்தவரை 108எம்பி ஓஐஎஸ் மெயின் கேமரா + 8எம்பி + 2எம்பி என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப், முன்பக்கத்தில் 32எம்பி செல்பீ கேமராவை கொண்டிருக்கும்.

8ஜிபி, 12ஜிபி ரேம் + 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன்களுடன் வரும் எச்எம்டி டாம்கேட் ஆனது ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் உடன் அனுப்பப்படும். பேட்டரியை பொறுத்தவரை 33W பாஸ்ட் சார்ஜிங் உடனான 4,900mAh பேட்டரியை கொண்டிருக்கும். இதுதவிர்த்து ஐபி67 ரேட்டிங், ஸ்டீரியோ ஸ்பீக்கர்களையும் கொண்டிருக்கும். விலையை பொறுத்தவரை இந்திய ரூபாய் மதிப்பின்படி, பேஸிக் 8ஜிபி ரேம் ரூ.36,000 க்கும், 12ஜிபி ரேம் ரூ.39,000 க்கும் அறிமுகம் செய்யப்படலாம்.

2. எச்எம்டி நைட்ஹாக் (HMD Nighthawk): இது 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான அமோஎல்இடி எஃப்எச்டி பிளஸ் டிஸ்பிளேவை கொண்டிருக்கும். மேலும் இது ஸ்னாப்டிராகன் 4 ஜென் 2 சிப்செட் மூலம் இயக்கப்படும். கேமராக்களை பொறுத்தவரை 108எம்பி ஓஐஎஸ் மெயின் கேமரா + 2எம்பி என்கிற டூயல் ரியர் கேமரா செட்டப், முன்பக்கத்தில் 32எம்பி செல்பீ கேமராவை கொண்டிருக்கும்

8ஜிபி, 12ஜிபி ரேம் + 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன்களுடன் வரும் எச்எம்டி நைட்ஹாக் ஆனது ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் உடன் அனுப்பப்படும். பேட்டரியை பொறுத்தவரை இது 5000mAh பேட்டரியை கொண்டிருக்கும். இதுதவிர்த்து வைஃபை 5, ஸ்டீரியோ ஸ்பீக்கர்ஸ், 3.5மிமீ ஆடியோ ஜாக் போன்றவைகளையும் கொண்டிருக்கும். விலையை பொறுத்தவரை இந்திய ரூபாய் மதிப்பின்படி, பேஸிக் 8ஜிபி ரேம் ரூ.22,000 க்கும், 12ஜிபி ரேம் ரூ.26,000 க்கும் அறிமுகம் செய்யப்படலாம்.

3. எச்எம்டி ப்ராஜெக்ட் மிஷன் (HMD Project Fusion): இந்த ஸ்மார்ட்போன் ஒரு ப்ரோட்டோடைப் மாடல் (Prototype Model) ஆகும். இது 6.6-இன்ச் அளவிலான ஃபுல்எஃப்எச்டி பிளஸ் டிஸ்பிளே, குவால்காம் க்யூசிஎம் 6490 சிப்செட், 108எம்பி + 2எம்பி டூயல் ரியர் கேமரா செட்டப், 8ஜிபி ரேம், 30W வயர்டுமற்றும் 15W வயர்லெஸ் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உடனான 4800mAh பேட்டரி போன்ற அம்சங்களை பேக் செய்யும். விலை நிர்ணயம் குறித்து தகவல் இல்லை. Photo Credit: X/ @smashx_60

More from GizBot

Best Mobiles in India

English summary
Nokia Brand Will Disappear HMD Working on 3 New Mid Range Phones Tomcat Nighthawk Project Fusion
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X