NOKIA லவ்வர்ஸ் மத்தியில்.. இந்த 5 போன்களுக்கும் செம்ம டிமாண்ட்!
ரூ.6,000 க்குள் அல்லது ரூ.10,000 க்குள்.. அதிகபட்சமாக ரூ.12,000 க்குள் வாங்க கிடைக்கும் ஒரு நல்ல நோக்கியா (Nokia) ஸ்மார்ட்போனை தேடும் அனைவருமே சில குறிப்பிட்ட மாடல்கள் மீது மட்டுமே அதிக கவனம் செலுத்துகின்றனர்!
அதனென்ன மாடல்கள்? நோக்கியா லவ்வர்ஸை கவர்ந்து இழுக்கும்படி அப்படி என்ன சிறப்பம்சங்களை கொண்டுள்ளன? வாருங்கள் "டக்குனு" பார்த்து விடலாம்!

01. நோக்கியா சி30 (Nokia C30)
நோக்கியா சி30 ஆனது பெரிய டிஸ்பிளே + நீடித்த பேட்டரியை எதிர்பார்ப்பவர்களுக்கானது! இந்த போனில் ஃபிங்கர் பிரிண்ட் ஸ்கேனர் மற்றும் ஃபேஸ் அன்லாக் போன்ற அம்சங்களும் உள்ளன. விலைக்கு ஏற்ற கேமராக்களை வழங்கும் இந்த ஸ்மார்ட்போன் விலையை மீறிய பேட்டரி லைஃப்-ஐ வழங்குகிறது.

நோக்கியா சி30-இன் முக்கிய அம்சங்கள்:
- 6.82 இன்ச் டிஸ்பிளே
- யுனிசாக் 1.6Ghz ஆக்டா-கோர் SC9863A ப்ராசஸர்
- 3ஜிபி ரேம்
- 32 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ்
- 13எம்பி டூயல் ரியர் கேமரா
- 5எம்பி செல்பீ கேமரா
- 6000mAh பேட்டரி
- விலை: ரூ.9,999

02. நோக்கியா 3.2 (Nokia 3.2)
19:9 என்கிற ரேஷியோ உடனான பெரிய HD+ டிஸ்பிளேவை பேக் செய்யும் நோக்கியா 3.2 ஸ்மார்ட்போன் ஆனது 2 நாட்கள் வரை நீளும் பேட்டரி லைஃப்-ஐயும் வழங்குகிறதுய்.
சிங்கிள் ரியர் கேமராவுடன் வரும் இந்த மாடலில் கூகுள் அசிஸ்டென்ட்டிற்கான குவிக் அக்செஸ்-ஐயும் வழங்குகிறது.

நோக்கியா 3.2-வின் முக்கிய அம்சங்கள்:
- 6.26 இன்ச் டிஸ்பிளே
- குவால்காம் ஸ்னாப்டிராகன் 429 ப்ராசஸர்
- 3ஜிபி ரேம்
- 32ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ்
- 13MP ரியர் கேமரா
- 5MP செல்பீ கேமரா
- ஆண்ட்ராய்டு 9 ஓஎஸ்
- 4000mAh பேட்டரி
- விலை: ரூ.10,393

03. நோக்கியா ஜி20 (Nokia G20)
ரூ.12,000 என்கிற பட்ஜெட்டில் வாங்க கிடைக்கும் பெஸ்ட் ஸ்மார்ட்போன்களில் ஒன்றான நோக்கியா ஜி20 ஆனது நல்ல ப்ராசஸர், 3 நாட்கள் வரை பேட்டரி லைஃப்-ஐ வழங்கும் சிறந்த பேட்டரி, 21:9 ரேஷியோ, ப்ரைட்னஸ் பூஸ்ட், டியர் டிராப் டிசைன் உடன் வரும் நல்ல டிஸ்பிளே மற்றும் AI இமேஜிங் மோட்களுடனான சக்திவாய்ந்த கேமரா போன்றவைகளை வழங்குகிறது.

நோக்கியா ஜி20-யின் முக்கிய அம்சங்கள்:
- 6.5 இன்ச் டிஸ்பிளே
- குவால்காம் ஸ்னாப்டிராகன் 460 ப்ராசஸர்
- 4ஜிபி ரேம்
- 64ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ்
- 48எம்பி மெயின் கேமரா
- ஆண்ட்ராய்டு 11 ஓஎஸ்
- 5,050mAh பேட்டரி
- விலை: ரூ.11,889

04. நோக்கியா சி01 பிளஸ் (Nokia C01 Plus)
4ஜி கனெக்டிவிட்டி உடன் வரும் Nokia C01 மாடலானது புதிதாக (முதல் முறையாக) ஸ்மார்ட்போன் வாங்குபவர்களான இது சிறந்த போன்களில் ஒன்றாகும். நீண்ட நேர பேட்டரி லைஃப்-ஐ எதிர்பார்ப்பவர்களும் கூட, இந்த மாடலை கருத்தில் கொள்ளலாம்!

நோக்கியா சி01 பிளஸ்-இன் முக்கிய அம்சங்கள்:
- 5.45 இன்ச் டிஸ்பிளே
- யுனிசாக் 1.6Ghz ஆக்டா-கோர் SC9863A ப்ராசஸர்
- 2ஜிபி ரேம்
- 16ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ்
- 5MP ரியர் கேமரா
- 2MP செல்பீ கேமரா
- ஆண்ட்ராய்டு 11 (கோ எடிஷன்) ஓஎஸ்
- 3000mAh பேட்டரி
- விலை: ரூ.5,870

05. நோக்கியா ஜி10 (Nokia G10)
நல்ல டிஸ்பிளே மற்றும் சிறந்த பேட்டரி பேக்கப் கொண்ட நல்ல நோக்கியா ஸ்மார்ட்போனை நீங்கள் தேடுகிறீர்களானால், Nokia G10 உங்களுக்கானது தான்.
நல்ல செயல்திறனுக்காக ஹைப்பர்-இன்ஜின் தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் இந்த நோக்கியா மாடல் 3 நாட்கள் வரை நீளும் பேட்டரி லைஃப்-ஐயும் வழங்குகிறது.

நோக்கியா ஜி10-இன் முக்கிய அம்சங்கள்:
- 6.5 இன்ச் டிஸ்பிளே
- MTK ஹெலியோ G25 ஆக்டா-கோர் 8x A53 2.0GHz ப்ராசஸர்
- 4ஜிபி ரேம்
- 64ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ்
- 13MP ட்ரிபிள் ரியர் கேமரா
- 8MP செல்பீ கேமரா
- ஆண்ட்ராய்டு 11 (கோ எடிஷன்) ஓஎஸ்
- 5050mAh பேட்டரி
- விலை: ரூ.11,498


Click it and Unblock the Notifications