Home
Mobile

ஸ்டைலுடன் வரும் நோக்கியா ஆஷா சீரீஸ் மொபைல்கள்

By Shajahan
ஸ்டைலுடன் வரும் நோக்கியா ஆஷா சீரீஸ் மொபைல்கள்

அற்புதமான படைப்புகளை உருவாக்கிக் கொடுக்கும் நோக்கியாவிற்கு நிச்சயம் வாடிக்கையாளர்களின் கைத்தட்டல் காத்திருக்கிறது என்று கூறலாம்.

ஆஷா-200, ஆஷா-201, ஆஷா-303, ஆஷா-300 என்ற புதிய மொபைல்களை அறிமுகம் செய்துள்ளது நோக்கியா.

இதில் ஆஷா 200 மற்றும் 201 மொபைல்களை இரட்டையர்கள் என்று கூறலாம்.

ஏனென்றால் இந்த மொபைல்களில் உள்ள தொழில் நுட்பம் அனைத்தும் ஒரே மாதிரியான வசதிகளை கொண்டது.

ஆனால் ஒரே ஒரு வித்தியாசம் மட்டும் தான், ஆஷா-200 மொபைல் டியூவல் சிம் தொழில் நுட்பம் கொண்டது. ஆனால் ஆஷா-201 மொபைலில் டியூவல் சிம் கார்டு வசதி இல்லை.

இந்த இரண்டு மொபைல்களுமே கியூவர்டி கீப்பேட் வசதியினைக் கொண்டுள்ளது. ஆஷா-200 மற்றும் 201 மொபைல்கள் 2 மெகா பிக்ஸல் கேமராவினைக் கொண்டுள்ளது.

இன்னொரு மொபைலான ஆஷா-303 மொபைலும் அழகாக கியூவர்டிக் கீப்பேடுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இது 2.6 இஞ்ச் திரையை கொண்டது. இந்த மொபைலில் வைபை தொழில் நுட்பம் கொடுக்கப்பட்டுள்ளது.

இதன் 3.2 மெகா பிக்ஸல் கேமரா துல்லியமான புகைப்படத்தையும், வீடியோ ரெக்கார்டிங் வசதியையும் கொடுக்கும்.

ஆஷா சீரீஸில் 300 என்று இன்னொரு மொபைலும் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் கியூவர்டிக் கீப்பேட் வசதி இல்லை.

ஆனால் இந்த மொபைல் 2.4 இஞ்ச் டச் இன்புட் திரை தொழில் நுட்பம் கொண்டது. அதோடு இதில் 5 மெகா பிக்ஸல் கேமராவின் மூலம் விருப்பப்பட்ட படங்களை எடுத்து குவிக்க முடியும்.

ஆஷா-300 மொபைல் ரூ.6,000 ஒட்டிய விலையிலும், ஆஷா-303 மொபைல் ரூ.8,000 விலையில் இருந்து ரூ.9,000 ஒட்டிய விலையிலும் கிடைக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

ஆஷா-200 மற்றும் ஆஷா-201 மொபைல்கள் ரூ.4,200 ஒட்டிய விலையில் கிடைக்கும்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X